என் மலர்

  செய்திகள்

  இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்கா அதிபருடன் மன்மோகன் சிங், ராகுல் காந்தி சந்திப்பு
  X

  இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்கா அதிபருடன் மன்மோகன் சிங், ராகுல் காந்தி சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசாவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்தனர். #RepublicDay #CyrilRamaphosa #ManmohanSingh #RahulGandhi
  புதுடெல்லி:

  நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் ராஜபாதையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த விழாவில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

  இந்திய ராணுவத்தின் பெருமை மிகு அணிவரிசை, ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. குடியரசு தின விழாவை பல லட்சம் மக்கள் கண்டுகளித்தனர்.   இந்நிலையில், சிறப்பு விருந்தினராக டெல்லி வந்துள்ள தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்து பேசினர். இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசித்தனர்.

  அப்போது, அதிபர் சிரில் ராமபோசா ராகுல் காந்தியை தென் ஆப்பிரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவும் உடனிருந்தார். #RepublicDay #CyrilRamaphosa #ManmohanSingh #RahulGandhi
  Next Story
  ×