என் மலர்

  செய்திகள்

  இன்னும் சில நாள்களில் தெலுங்கானாவில் மாற்றத்துக்கான புயல் தாக்கும் - ராகுல் பேச்சு
  X

  இன்னும் சில நாள்களில் தெலுங்கானாவில் மாற்றத்துக்கான புயல் தாக்கும் - ராகுல் பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கானா மாநிலத்தில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்னும் சில நாள்களில் தெலுங்கானாவில் மாற்றத்துக்கான புயல் வரும் என தெரிவித்துள்ளார். #TelanganaAssemblyElections #Congress #RahulGandhi
  ஐதராபாத்:

  தெலுங்கானா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை தக்கவைக்க தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணியும், பாஜகவும் போட்டியிடுகின்றன.

  இன்றுடன் நிறைவடையும் பிரச்சாரத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

  இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் கோடாட் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.  இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

  தெலுங்கானா மாநிலத்தில் இன்னும் சில நாள்களில் மாற்றத்துக்கான புயல் தாக்கும். இந்த புயலால் ஏற்படும் மாற்றத்தை மக்கள் வழங்க உள்ளனர். இந்த மாற்றத்தின் மூலம் தெலுங்கானாவின் கனவுகள் நிறைவேறும்.  மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் மோடியும், மாநிலத்தில் ஆட்சி செய்த சந்திரசேகர் ராவும் கூட்டணி வைத்து செயல்பட்டு வருகின்றனர். எனவேதான், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆதரவளித்து வருகிறது.

  மாநிலத்தில் சந்திரசேகர் ராவை முதலில் தோற்கடிப்போம். அதன்பின், காங்கிரசும், மற்ற கட்சிகளும் மத்தியில் நரேந்திர மோடியை நிச்சயம் தோற்கடிப்போம்.

  தற்போது உங்கள் உடைகள் மற்றும் மொபைல்களில் 'மேட் இன் சீனா' என உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதை 'மேட் இன் தெலுங்கானா' என மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என தெரிவித்தார்.
  #TelanganaAssemblyElections #Congress #RahulGandhi
  Next Story
  ×