என் மலர்

  செய்திகள்

  மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்- கருத்து கணிப்பில் தகவல்
  X

  மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்- கருத்து கணிப்பில் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று டைம்ஸ்நவ் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. #BJP #MadhyaPradeshAssemblyElection
  போபால்:

  மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜக. ஆட்சி நடந்து வருகிறது.

  அம்மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 28-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

  மத்திய பிரதேசத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று சமீபத்தில் சிவோட்டர் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

  இந்த நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் இணைந்து வார்ரூம் ஸ்ட்ரடெஜிஸ் நிறுவனமும் இணைந்து ஒரு கருத்து கணிப்பை நடத்தின. அந்த சர்வே முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

  அந்த கருத்து கணிப்பில் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜ.க. 142 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் 77 தொகுதியிலும், மற்ற கட்சிகள் 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

  2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 166 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தடவை 24 இடங்கள் குறைந்துவிடும் என்று சர்வேயில் தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 20 இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


  தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 44 சதவீதம் பேர் வாக்களிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 35 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

  முதல் மந்திரியாக யார் வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 61 சதவீதம் பேர் சிவராஜ் சிங்சவுகானை தேர்வு செய்துள்ளனர். காங்கிரசை சேர்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை 17 சதவீதம், திக்விஜய்சிங்கை 25 சதவீதம், கமல்நாத்தை 6 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர்.

  மத்திய பிரதேசம் போல சத்தீஸ்கரிலும் ராமன்சிங் தலைமையிலான பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.  #BJP #MadhyaPradeshAssemblyElection #Congress
  Next Story
  ×