என் மலர்
செய்திகள்

சீனாவில் ஒருநாளைக்கு 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு, ஆனால் இந்தியாவில் வெறும் 450 - ராகுல் பேச்சு
இந்தியாவில் வெறும் 450 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் நிலையில் சீனாவில் 50 ஆயிரம் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #RahulOppositionalliance #2019election
லண்டன்:
லண்டன் பொருளாதார கல்லூரியில் நேற்று நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.
இந்தியாவில் தற்போதையை ஆட்சியில் அரசியலமைப்பு சார்ந்த அனைத்து அமைப்புகளுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட ராகுல், வரும் பாராளுமன்ற தேர்தல் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்குமான நேரடி போட்டியாக அமையும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர். ‘இந்திய அரசியலமைப்பு படுகொலை செய்யப்படுவதை தடுத்து பாதுகாப்பதற்கு காங்கிரசும் மற்ற எதிர்க்கட்சிகளும் உறுதி பூண்டுள்ளன.
இந்தியாவின் வளர்ச்சி என்பது அனைத்துதரப்பு மக்களின் தியாகத்தால் உண்டானதாகும். இந்த வளர்ச்சியின் பலன்கள் அனைத்துதரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். தாங்கள் கைவிடப்பட்டதாக எந்த சமுதாயத்தினரும் கருத இடமளிக்க கூடாது.
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால், இந்தியாவில் தினந்தோறும் வெறும் 450 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் அதேவேளையில் சீனாவில் தினந்தோறும் 50 ஆயிரம் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது’ என குறிப்பிட்டார். #RahulOppositionalliance #2019election

Next Story