என் மலர்
செய்திகள்

தொடரும் கற்பழிப்பு சம்பவங்கள்- அரியானாவில் இளம்பெண்ணை 5 பேர் சீரழித்த கொடுமை
அரியானா மாநிலத்தில் 19 வயது இளம் பெண்ணை ஆட்டோ ஓட்டுநர் உட்பட 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#haryanarapecase
சண்டிகர்:
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. பெண்கள், குழந்தைகள், சிறுமிகள் என பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கதுவா என்ற பகுதியில் நடந்தேறிய மிகப்பெரிய கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவத்தால் நாடே கொந்தளித்தது.
அதைத் தொடர்ந்து 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை என்ற புதிய சட்டத்தினை மத்திய அரசு இயற்றியது. மேலும் பல்வேறு தரப்பிலிருந்தும் இந்த கொடுமைகளுக்கு எதிரான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. பல்வேறு கருத்துக்களும் பகிரப்பட்டன.
இந்நிலையில் அரியானா மாநிலம் குருகிராமத்தில் 19 வயது இளம் பெண்ணை ஆட்டோ ஓட்டுநர் உட்பட 5 நபர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 1-ஆம் தேதி இரவு வீடு திரும்புவதற்காக பேருந்திற்கு காத்திருந்த பெண்ணை ஆட்டோவில் வருமாறும் குறைந்த கட்டணம் பெற்றுக் கொள்வதாகவும் பேசி, ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை ஏற்றிச் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து ஆட்டோவில் ஏறிய 4 பேர் அந்த பெண்ணிற்கு தூக்க மருந்து கலந்த பானத்தை வற்புறுத்தி கொடுத்துள்ளனர்.
இதனால் மயக்கமடைந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.#haryanarapecase

Next Story