என் மலர்

  செய்திகள்

  காந்தியின் 150-வது பிறந்தநாள் - ஜனாதிபதி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  X

  காந்தியின் 150-வது பிறந்தநாள் - ஜனாதிபதி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று தொடங்கியது. #MahatmaGandhi #PresidentRamnathKovind #PMModi
  புதுடெல்லி:

  மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி வரை ஓர் ஆண்டு காலம் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாடவும், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

  மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடுவது தொடர்பாகவும், திட்டங்களை வகுப்பது தொடர்பாகவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு பரிந்துரைக்கும் திட்டங்களை மத்திய அரசு பரிசீலித்து நிறைவேற்றும்.

  இந்த குழுவில் முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், தேவேகவுடா, மன்மோகன் சிங், முன்னாள் துணை பிரதமர் அத்வானி, மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற சபாநாயகர், மாநில முதல்-மந்திரிகள் என 114 பேர் இடம்பெற்று உள்ளனர்.

  சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகாஜூன கார்கே (காங்கிரஸ்), அமித்ஷா (பா.ஜனதா), முலாயம் சிங் (சமாஜ்வாடி), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சுதாகர் ரெட்டி (இந்திய கம்யூனிஸ்டு), வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கிறார்கள்.

  இதற்கிடையே, இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல் மந்திரி பழனிசாமி இன்று காலை 6 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்றார்.

  இந்நிலையில், இந்த குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் ராஷ்ட்ரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று மாலை தொடங்கியது.

  இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், தமிழக முதல் மந்திரி பழனிசாமி உள்பட பல்வேறு மாநில முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர். #MahatmaGandhi #PresidentRamnathKovind #PMModi
  Next Story
  ×