என் மலர்

  செய்திகள்

  வருகை பட்டியலில் ராகுல் கையெழுத்து: காங்கிரஸ் - பா.ஜ.க காரசார வாக்குவாதம்
  X

  வருகை பட்டியலில் ராகுல் கையெழுத்து: காங்கிரஸ் - பா.ஜ.க காரசார வாக்குவாதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோம்நாத் கோயிலில் இந்து அல்லாதோர் வருகைபதிவேட்டில் ராகுல் காந்தி கையெழுத்திட்டதாக பா.ஜ.க குற்றம் சாட்ட காங்கிரஸ் கட்சி அதை மறுத்துள்ளது.
  அகமதாபாத்:

  காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் இரண்டு நாள் பிரசாரத்தில் உள்ளார். குஜராத்தில் புகழ்பெற்ற சோம்நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். இந்நிலையில் கோவிலில் ராகுல் காந்தி இந்து அல்லாதோர் வருகை பட்டியலில் கையெழுத்து இட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பட்டது.

  பா.ஜ.க.வினரால் கடுமையான விமர்சனம் மற்றும் கேள்விகளுடன் இந்த புகைப்படம் பரப்பட்டது. பா.ஜ.கவின் குஜராத் மாநில தலைவர் ராஜு தருவ் பேசுகையில், “ராகுல் காந்தி தொடர்ச்சியாக கோவில்களுக்கு செல்கிறார். காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்கிறது. கோவில் வருகைப் பதிவேட்டில் இந்து இல்லை என குறிப்பிட்டு உள்ளார்,” என்றார்.

  இவ்விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் டுவிட்டரில் புகைப்படம் வெளியிடப்பட்டு, சோம்நாத் கோவிலில் ஒரு வருகைப் பதிவேடு மட்டுமே இருந்தது, அதில்தான் ராகுல் காந்தி கையெழுத்திட்டார். இதுதவிர்த்து வேறு புகைப்படம் வெளியிடப்பட்டால் அது சித்தரிக்கப்பட்டது என்று கூறியுள்ளது.

  காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுர்ஜேவாலா பேசுகையில், கோவில் வருகை பதிவேட்டில் ராகுல் காந்தி கையெழுத்திட்டார். இப்போது வெளியாகி உள்ள கையெழுத்து மாறுபட்டது, அது ராகுல் காந்தியின் கையெழுத்தும் கிடையாது, புகைப்படத்தில் இடம்பெற்று உள்ள விண்ணப்ப நகலும் கோவிலில் வழங்கப்பட்டது கிடையாது என கூறியுள்ளார்.
  Next Story
  ×