search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    50 லட்சம் வீடுகள் வாக்குறுதியை நிறைவேற்ற 50 ஆண்டுகள் தேவையா?: மோடிக்கு ராகுல் கேள்வி
    X

    50 லட்சம் வீடுகள் வாக்குறுதியை நிறைவேற்ற 50 ஆண்டுகள் தேவையா?: மோடிக்கு ராகுல் கேள்வி

    குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வீடுகள் கட்டி தருவதாக வாக்குறுதி அளித்த மோடி அதை நிறைவேற்ற இன்னும் 45 ஆண்டுகள் தேவையா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வீடுகள் கட்டி தருவதாக வாக்குறுதி அளித்த மோடி அதை நிறைவேற்ற இன்னும் 45 ஆண்டுகள் தேவையா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ‘கடந்த 22 ஆண்டுகளில் நீங்கள் குஜராத்துக்கு செய்தது என்ன? என்பதை மக்கள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். 2012-ம் ஆண்டு குஜராத் மாநில சட்டசபை தேர்தலின்போது அந்நாள் முதல் மந்திரி மோடி வீடு இல்லாத மக்களுக்கு ஐந்தாண்டுகளில் 50 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

    ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் 4.72 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டித் தரப்பட்டுள்ளன. உங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் 45 ஆண்டுகள் தேவையா? என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×