என் மலர்

  செய்திகள்

  நாட்டின் வளத்தை சுரண்டி சொத்து சேர்த்தவர்கள் கொள்ளைக்காரர்களை போல் தான் சிந்திப்பார்கள்: மோடி
  X

  நாட்டின் வளத்தை சுரண்டி சொத்து சேர்த்தவர்கள் கொள்ளைக்காரர்களை போல் தான் சிந்திப்பார்கள்: மோடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

  மோர்பி:

  குஜராத் மாநிலத்தில் வருகிற 9-ந்தேதியும், 14-ந் தேதியும் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில், சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள 89 தொகுதிகளிலும் 9-ந் தேதி வாக்கு பதிவு நடக்கிறது.

  முதல் கட்ட வாக்கு பதிவு நடைபெறும் இந்த பகுதிகளில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆளும் கட்சியான பா.ஜனதா, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் தொகுதிகளில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  இதே போல் பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளராக உள்ள பிரதமர் மோடி, கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோர் ஆதரவு திரட்டி வருகிறார்கள். காங்கிரசுக்கு துணை தலைவர் ராகுல்காந்தி ஆதரவு திரட்டி வருகிறார்.  இந்நிலையில், மோர்பி நகரில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய மோடி, ஜி.எஸ்.டி. வரியை கபார் சிங் வரி என விமர்சித்த ராகுல் காந்தியை கடுமையாக தாக்கி பேசினார். 

  அப்போது அவர் பேசுகையில், “நாட்டின் வளங்களை சுரண்டி சொத்து சேர்த்தவர்கள் கொள்ளைக்காரர்களை போல தான் சிந்திப்பார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது தண்ணீருக்காக மக்களுக்கு அடிபம்புகள் அளித்து ஏமாற்றியது. ஆனால் பா.ஜ.க. அரசு சவுனி திட்டத்தின் மூலம் பெரிய குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவந்து அனைத்து அணைகளிலும் நீரை நீரப்பும்”, என அவர் பேசினார்.  இதை தொடர்ந்து பிரதமர் மோடி சோமநாதபுரம் அருகே உள்ள பராச்சி என்ற இடத்தில் பிரசாரம் செய்கிறார். இதே பகுதியில் ராகுல் காந்தியும் இன்று பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×