என் மலர்

  செய்திகள்

  குஜராத் தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாட்ஸ்அப் பிரசாரத்தை பா.ஜ.க. தொடங்கியது
  X

  குஜராத் தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாட்ஸ்அப் பிரசாரத்தை பா.ஜ.க. தொடங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிசம்பர் 9,14 தேதிகளில் இருகட்டங்களாக நடைபெறவுள்ள குஜராத் சட்டசபை தேர்தலுக்கான இணையவழி பிரசாரத்தை வாட்ஸ்அப் மூலம் பா.ஜ.க. தொடங்கியது.
  அகமதாபாத்:

  குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9,14 தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்திய மோடி அரசின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை இந்த தேர்தலில் ஓட்டுகளாக அறுவடை செய்ய காங்கிரஸ் கட்சி காய் நகர்த்தி வருகிறது.

  பிரதமர் மோடி பிறந்த மாநிலம் என்ற வகையில் இங்கு மீண்டும் ஆட்சியை பிடித்தே தீருவது என்ற முனைப்பில் பா.ஜ.க.வும் களமிறங்குகிறது.

  இந்நிலையில், தேர்தலுக்கான இணையவழி பிரசாரத்தை வாட்ஸ்அப் மூலம் பா.ஜ.க. நேற்று தொடங்கியது. நேரு குடும்பத்தினரால் குஜராத் மாநிலத்தை சேர்ந்த இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியும், துணை பிரதமருமான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உரிய மரியாதையும், முக்கியத்துவமும் அளிக்கப்படாததை கண்டித்தும், இதே மாநிலத்தவரான மறைந்த பிரதமர் மொரார்ஜி தேசாயின் புகழ் இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தற்போது இந்த வாட்ஸ்அப் பிரசாரம் பரவி வருகிறது.
  Next Story
  ×