என் மலர்

  செய்திகள்

  நவ.2-ம் தேதி ஆம் ஆத்மி கட்சி தேசிய பொதுக்குழு கூட்டம்
  X

  நவ.2-ம் தேதி ஆம் ஆத்மி கட்சி தேசிய பொதுக்குழு கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுக்குழு கூட்டம் வரும் நவம்பர் இரண்டாம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
  புதுடெல்லி:

  ஊழலுக்கு எதிரான சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் அறவழிப் போராட்டத்தில் பங்கேற்ற அரசு பணியாளரான அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி என்ற புதிய கட்சியை தொடங்கி டெல்லியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றினார்.

  அரியானா மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் அளவுக்கு நாட்டின் பிற பகுதிகளிலும் அந்த கட்சி காலூன்றி வருகிறது. இமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுக்குழு கூட்டம் வரும் நவம்பர் இரண்டாம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

  டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்த சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
  Next Story
  ×