search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய பொதுக்குழு கூட்டம்"

    • ஜே.பி.நட்டா, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு.
    • பிரதமர் மோடிக்கு கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து கவுரவித்தனர்.

    பா.ஜ.க கட்சியின் தேசிய பொதுக்குழு கூட்டம் 2வது நாளாக நடைபெற்று வருகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பிரதமர் மோடிக்கு கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து கவுரவித்தனர்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

    பாஜகவினர் 24 மணி நேரமும் நாட்டிற்காக சேவையாற்றி வருகின்றனர். வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதே நோக்கம்.

    நான் நாட்டு மக்களுக்காக வாழ்கிறேன். நாட்டு மக்களின் கனவு தான், எனது கனவு. நாட்டு மக்களுக்காக பகல், இரவு பாராமல் வேலை செய்து வருகிறோம்.

    நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான நமது உறுதியை வலுப்படுத்தும் விஷயங்கள் இவை.

    ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

    தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை பெறும். 400ல் பாஜக 370 இடங்களை தாண்ட வேண்டும்.

    அடுத்த 100 நாட்கள் புதிய உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் பணியாற்ற வேண்டும். 18 வயதை எட்டிய இளைஞர்கள், நாட்டின் 18வது மக்களவையை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.

    சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் நாம் சென்றடைய வேண்டும். அனைவரின் நம்பிக்கையையும் பெற வேண்டும்.

    இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

    இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றும் உறுதியை நாங்கள் எடுத்துள்ளோம், இது மோடியின் உத்தரவாதம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×