என் மலர்

    செய்திகள்

    ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் பலி
    X

    ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தில் விடுப்பில் வீட்டிற்கு சென்ற எல்லைப்பாதுகாப்பு படை வீரர் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் பலியானார். மேலும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களும், தீவிரவாதிகளும் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை எதிர்த்து எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இரு நாடுகளை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், எல்லைப்பாதுகாப்பு படையில் பணியாற்றிவந்த ரமீஸ் அகமது பாரே என்பவர், விடுப்பு எடுத்து கொண்டு பந்திபோரா மாவட்டத்தின் ஹஜின் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இன்று, அவர் வீட்டில் இருக்கும் போது சில தீவிரவாதிகள் எதிர்பாராத விதமாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.



    இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ரமீஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த தாக்குதலில் அவர் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர். உடனடியாக அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    காயமடைந்தவர்கள் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விடுப்பில் வீட்டிற்கு வந்தவர் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து பேசிய ராணுவ அதிகாரி ஒருவர், ‘எல்லையில் ராணுவத்தை எதிர்கொள்ள முடியாததால் இப்படிப்பட்ட செயலை தீவிரவாதிகள் செய்துள்ளனர். கடினமான போராட்டங்களில் தாக்குப்பிடிக்க முடியாததால் இப்போது எளிமையானவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்’, என அவர் கூறினார்.
    Next Story
    ×