என் மலர்
செய்திகள்

வாலிபரை ஜெயில் தண்டனையில் இருந்து காப்பாற்றிய பஸ் டிக்கெட்
கஞ்சா கடத்தல் வழக்கில் 15 ஆண்டுக்கால ஜெயில் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் செலுத்துவதில் இருந்து வாலிபர் ஒருவரை அவர் வைத்திருந்த பஸ் டிக்கெட் காப்பாற்றியுள்ளது.
புதுடெல்லி:
இமாசலபிரதேச மாநிலம் சிலோ அருகில் உள்ள மஜோத்லி என்ற இடத்தைச் சேர்ந்தவர் நரேஷ்குமார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு நேர்வா என்ற இடத்தில் இருந்து சாமுண்டா நகருக்கு மாநில அரசு பஸ்சில் பயணம் செய்தார்.
அப்போது அவர் 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். கீழ் கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார். இதை எதிர்த்து சிம்லா ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நரேஷ்குமாரின் விடுதலையை ரத்து செய்ததுடன் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின்கீழ் 15 வருடம் ஜெயில் தண்டனையும், 2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.
இதைத் தொடர்ந்து தீர்ப்பை எதிர்த்து நரேஷ் குமார் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி நாகேஸ்வரராவ் இந்த வழக்கை மீண்டும் விசாரித்தார்.
அப்போது நரேஷ்குமார் வக்கீல் நவீன் சின்கா பல்வேறு வாதங்களை எடுத்து வைத்தார். போலீசார் கைது செய்ததில் முரண்பாடுகள் இருப்பதை பஸ் டிக்கெட்டை ஆதாரமாக வைத்து வாதாடினார்.
போலீசார் நரேஷ்குமாரை பஸ்சில் கைது செய்தபோது காலை 6.15 மணி என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் நரேஷ்குமார் காலை 6.51 மணிக்குத்தான் பஸ்சில் ஏறி இருக்கிறார். மேலும் அவர் பஸ் ஏறிய இடத்துக்கும் போலீசார் கைது செய்த இடத்துக்கும் இடைப்பட்ட தூரம் 26 கி.மீ. அந்த இடத்தை கடக்க 1 மணி நேரம் ஆகும்.
மேலும் போலீசார் கைது செய்ததாக கூறப்படும் இடத்துக்கு காலை 8 மணிக்குத்தான் வந்தடைந்துள்ளது என்பதை ஆதாரத்துடன் எடுத்துரைத்தார்.
இதில் போலீசார் நேரில் பார்த்த காட்சியும் போலி என்பதை வக்கீல் குறிப்பிட்டு வாதாடினார். வக்கீல் வாதத்தின் அடிப்படையில் நரேஷ்குமார் கைது செய்யப்பட்டதில் முரண்பாடுகள் இருப்பதால் அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story