என் மலர்
செய்திகள்

அரசியல் கட்சிகள் 2000 ரூபாய்க்கு மேல் நன்கொடை பெறுவதை தடுக்க புதிய வரியா?: மத்திய அரசு தகவல்
இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை பெறுவதை தடுக்கும் விதமாக மத்திய அரசு புதிய வரியை அமல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை:

இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தொழில் அதிபர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம் இருந்து நன்கொடை பெறுவதை வழக்கில் வைத்துள்ளன.
முக்கிய அரசியல் கட்சிகள் பல நூறு கோடி ரூபாயை நன்கொடை என்ற பெயரில் சம்பாதித்து வைத்துள்ளன.
கட்சி நிர்வாகத்தை நடத்தவும், தேர்தல் செலவுகளை எதிர்கொள்ளவும், பெரிய அளவில் நன்கொடை பெறுவது அவசியமானதாகும் என்று அரசியல் கட்சிகள் கூறுகின்றன. ஆனால் தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் திரட்டும் நன்கொடையில் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு, 1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்தி, பல நூறு கோடி ரூபாய்க்கு வரி கட்டாமல் உள்ளன.
இந்த நிலையில் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையை சீரமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடந்த டிசம்பர் மாதம் தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:-
அரசியல் கட்சிகள் அதிக அளவு தொகையை நன்கொடையாகப் பெற சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லாமல் உள்ளது. என்றாலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29சி பிரிவில் நன்கொடை விபரங்களை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரூ. 20 ஆயிரத்துக்கும் மேல் பெறும் தொகைக்கே இந்த சட்ட விதி பொருந்துவதாக உள்ளது.
அந்த விதியை திருத்தி ரூ.2000 அல்லது அதற்கு மேல் பெயரிடப்படாமல் நன்கொடை பெறுவதற்கு அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் நன்கொடைகளுக்கான வரி விலக்கு, பாராளுமன்ற, சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.
கட்சித் தொண்டர்கள் ரூ.10, ரூ.20 என்று கொடுக்கும் சிறு தொகையையும் கட்சிகள் கட்டாயம் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். அதோடு நன்கொடையாளர்களின் சுய விவரம் அனைத்தையும் முழுமையானதாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து வந்தது. விரைவில் இதில் அதிரடி நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு பிறகு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை அமல்படுத்தியது.
மூன்றாவது பெரிய நடவடிக்கையாக, அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையை கட்டுப்படுத்தி, சீர்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மும்பையில் நேற்று நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி இதை சூசகமாக தெரிவித்தார்.
அதிக தொகையை நன்கொடையாகப் பெறும் அரசியல் கட்சிகளுக்கு, அந்த தொகைக்கு ஏற்ப வரி விதிக்கவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த நடவடிக்கை மூலம் அரசியல் கட்சிகளின் நன்கொடை என்ற பெயரில் நடைபெறும் அனைத்து விதமான முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இரண்டுக்கும் பெரும்பாலான மக்களிடம் ஆதரவு கிடைத்தது. அதுவும் ஜி.எஸ்.டி.க்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு ஏற்படக்கூடும் என்ற நிலை மாறி சுமூகமான முறையில் அது அமலாகி வருவதால், அரசியல் கட்சிகளின் நன்கொடை விவகாரத்தையும் கையில் எடுத்து சுத்தப்படுத்தி விட மத்திய அரசு தீவிரமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து நிதி மந்திரி அருண்ஜெட்லி மும்பை விழாவில் பேசுகையில் கூறியதாவது:-
உயர்மதிப்பு பண நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. அமல் மூலம் இனி எத்தகைய சீர்திருத்தத்தையும் எளிதாக செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ரூபாய் நோட்டுகள் செல்லாது நடவடிக்கைக்குப் பிறகு 92 லட்சம் பேர் வருமான வரி வளையத்துக்குள் வந்துள்ளனர்.
அதுபோல ஜி.எஸ்.டி. மூலம் 80 லட்சம் பேர் வரி சீர்திருத்த நடவடிக்கையின் கீழ் வந்துள்ளனர். இந்த வரி சீர்திருத்தங்கள் மூலம் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி அதிகரித்து வருகிறது.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் ஓரிரு ஆண்டுகளில் முழுமையாக செய்து முடிக்கப்படும்.
இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார்.

Next Story