என் மலர்

  செய்திகள்

  2019 பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் காங்கிரசுக்கு ஒரு எம்.பி. கூட கிடைக்காது: முதல்-மந்திரி ஆதித்யநாத் கணிப்பு
  X

  2019 பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் காங்கிரசுக்கு ஒரு எம்.பி. கூட கிடைக்காது: முதல்-மந்திரி ஆதித்யநாத் கணிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்று அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.

  லக்னோ:

  ஒரு காலத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சக்தியாக இருந்து வந்தது. நாளடைவில் இதன் செல்வாக்கு சரிந்து இப்போது இந்த கட்சி மாநிலத்தில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

  கடந்த பாராளுமன்ற தேர்தலில் 2 இடங்களில் மட்டும் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும் வெற்றி கிடைத்தது.

  2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்று அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.


  பாரதிய ஜனதா கூட்டணி கட்சியான அப்னாதளம் கட்சியின் நிகழ்ச்சி ஒன்று லக்னோவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய யோகிஆதித்யநாத் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

  இன்று காங்கிரஸ் கட்சியை விட அப்னாதளம் பெரிய கட்சியாக உள்ளது. உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு 2 எம்.பி.க்கள் தான் உள்ளனர். அப்னாதளத்துக்கும் 2 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். காங்கிரசுக்கு இங்கு 7 எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர். ஆனால் அப்னாதளத்துக்கு 9 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.

  இதை பார்க்கும்போது காங்கிரஸ் கட்சியை விட அப்னாதளம் பெரிய கட்சியாக மாறி இருக்கிறது. வரப்போகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு உத்தரபிரதேசத்தில் ஒரு இடம்கூட கிடைக்காது.

  இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.

  Next Story
  ×