என் மலர்

  செய்திகள்

  ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.கவை பலப்படுத்த அமித்ஷா 3 நாள் சுற்றுப்பயணம்
  X

  ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.கவை பலப்படுத்த அமித்ஷா 3 நாள் சுற்றுப்பயணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்தும் வகையில், தேசிய தலைவர் அமித்ஷா நாளை முதல் 3 நாள் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
  புவனேஷ்வர்:

  ஒடிசா மாநிலத்தில் 2019ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, பா.ஜ.க.வை பலப்படுத்தும் நோக்கில் முக்கிய தலைவர்கள் அங்கு சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

  இந்நிலையில், பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, நாளை முதல் 3 நாட்களுக்கு ஒடிசாவில் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

  இதுகுறித்து மாநில பா.ஜ.க. தலைவர் பசந்த் பாண்டா கூறுகையில், ’’ஒடிசாவில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் பலப்படுத்தும் வகையில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, நாளை முதல் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

  இதில் 4-ஆம் தேதி கன்ஜம் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கட்சி உறுப்பினர்களை சந்திக்கிறார். மறுநாள் ஜெய்ப்பூர் மற்றும் குர்டா மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்தும் வகையில் தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார்.  அதைதொடர்ந்து, 6-ஆம் தேதி குர்டா மாவட்ட பகுதி தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் ஜில்லா பரிஷ்த் உறுப்பினர்களை சந்தித்து பேசுகிறார்’’ என தெரிவித்தார்.
  Next Story
  ×