search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா சட்டசபை தேர்தல்"

    ஒடிசா சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வென்ற பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் இன்று கவர்னரை சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடித்தத்தை அளித்தார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது.

    பாஜக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.  

    இந்த தேர்தலில் நவீன் பட்நாயக், ஹிஞ்சிலி தொகுதியில் பாஜக வேட்பாளர் பீதாம்பர் ஆச்சார்யாவை 60,160 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.



    இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜு ஜனதா தளம் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டசபை கட்சி தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், ஒடிசா கவர்னர் கணேஷி லால்-ஐ சந்தித்த நவீன் பட்நாயக், எம்.எல்.ஏ.க்களின் கையொப்பத்துடன் கூடிய ஆதரவு கடிதத்தை அவரிடம் அளித்தார். ஆட்சி அமைக்க வருமாறு நவீன் பட்நாயக்குக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    ஒடிசா முதல்வராக 2000ல் முதல் முறையாக பதவியேற்ற நவீன் பட்நாயக், அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.

    பிஜு ஜனதா தளம் கட்சி பிரமுகர்கள் முன்னர் தெரிவித்திருப்பதைப்போல் நவீன் பட்நாயக் ஐந்தாவது முறையாக வரும் 29-ம் தேதி அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்பார் என தெரிகிறது.  
    ஒடிசா சட்டசபை தேர்தலில் கடைசி நேரத்தில் 2 காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என திடீரென மறுத்து விட்டனர். #Congress #CongressCandidate #Odisha
    புவனேசுவரம்:

    பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. இங்கு 4-ம் கட்ட தேர்தல் 29-ந் தேதி நடக்கிறது.

    இங்கு பர்சானா, நிமாபாரா ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களாக சீதாகந்த் மோகபத்ரா, சத்யபிராத் பத்ரா ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள்.

    இந்த நிலையில், இவர்கள் இருவரும் போட்டியிட முடியாது என நேற்று முன்தினம் இரவு திடீரென மறுத்து விட்டனர்.

    அதைத் தொடர்ந்து அவ்விரு தொகுதிகளில் புதிய வேட்பாளர்களாக அஜய் சமால், திலீப் நாயக் ஆகியோர் அறிவிக்கப்பட்டு, நேற்று கடைசி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே ஒடிசா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்த 4 பேர் போட்டியிட மறுத்து விட்டது நினைவுகூரத்தக்கது. #Congress #CongressCandidate #Odisha 
    ஒடிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரும் அம்மாநில முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் ஹின்ஜிலி, பிஜெப்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். #NaveenPatnaik #Odishaassemblypolls
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநில சட்டசபைக்கான தேர்தலில் 147 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் ஆட்சியை மீண்டும் பிடிக்க முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரும் அம்மாநில முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் ஹின்ஜிலி, பிஜெப்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #NaveenPatnaik #Odishaassemblypolls
    4 கட்டங்களாக நடைபெறும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் கோரேய் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளராக காஜல் நாயக் என்ற திருநங்கை களமிறக்கப்பட்டுள்ளார். #BSPtransgendercandidate #transgendercandidate #Odishaassembly #Odishapolls #KajalNayak
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநில சட்டசபைக்கான தேர்தலில் 147 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக கோரேய் தொகுதியில் காஜல் நாயக் என்ற திருநங்கை போட்டியிடுகிறார். ஜாஜ்பூர் பகுதியை சேர்ந்த காஜல் நாயக், திருநங்கையர் சங்கத்தலைவராகவும் சமூகச் செயற்பாட்டாளராகவும் உள்ளார்.



    நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பி பல கட்சிகளை அணுகினேன். ஆனால், யாரும் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. என்னை வேட்பாளராக அறிவித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என காஜல் நாயக் குறிப்பிட்டுள்ளார். #BSPtransgendercandidate  #transgendercandidate #Odishaassembly #Odishapolls #KajalNayak
    2019 ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும், ஒடிசா சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என அமித்சா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #BJP #AmitShah
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    147 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. பாராளுமன்றத் தேர்தலோடு அங்கு சட்ட சபை தேர்தலும் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒடிசா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் ஆர்வத்துடன் பா.ஜனதா இருக்கிறது. இதற்காக பா.ஜனதா மேலிடம் அங்கு அடிமட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஒருநாள் பயணமாக ஒடிசா சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    2,400-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து அளவிலான உறுப்பினர்களை அவர் சந்தித்து ஆலோசனை செய்தார். கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மூத்த நிர்வாகிகளிடம் அமித்ஷா விரிவாக விவரித்தார்.

    ஒடிசா மாநிலத்தில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறிய தாவது:-

    நவீன் பட்நாயக் அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது. இந்துக்களை பாதுகாக்க இந்த அரசு தவறிவிட்டது.

    2019 ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும், ஒடிசா சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெறும். மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 120 இடங்களில் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார். #BJP #AmitShah
    ×