என் மலர்

  செய்திகள்

  வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் மன்மோகன் சிங்கை விட மோடி குறைவுதான்: அமித் ஷா
  X

  வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் மன்மோகன் சிங்கை விட மோடி குறைவுதான்: அமித் ஷா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விட தற்போதைய பிரதமர் மோடி குறைவான நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளதாக பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
  பணாஜி:

  பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா கோவா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தலைநகர் பணாஜியில் உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, பேசிய அமித் ஷா,” அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு செல்வதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விட மோடி குறைவான நாடுகளுக்கே சென்றுள்ளார். மன்மோகன் சிங் வெளிநாடுகளுக்கு சென்றாலும் அது எந்த வகையில் பயனளிக்கும் என யாருக்கும் தெரியாது” எனக் கூறினார்.

  மேலும் அமித் ஷா பேசுகையில்,” மன்மோகன் சிங் ஆங்கிலத்தில் எழுதி வைக்கப்பட்ட உரைகளையே வாசித்து விட்டு வருகிறார். மலேசியாவில் படிக்க வேண்டியதை, தாய்லாந்தில் படிப்பார். அவருடைய பதவிக்காலத்தில் அவர் சீனா, அமெரிக்கா, ரஷ்யா நாடுகளுக்கு சென்றால் யாருக்கும் தெரியாது. ஆனால், தற்போது, மோடி எங்கு சென்றாலும் விமான நிலையங்களில் மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்” என கூறினார்.

  முன்னதாக, அமித் ஷா பணாஜி விமான நிலையத்தில் விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தி தொண்டர்களிடம் பேசினார் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
  Next Story
  ×