என் மலர்
செய்திகள்

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க சென்ற யாத்ரீகர் மாரடைப்பால் மரணம்
அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசிக்க சென்ற மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த யாத்ரீகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த மாதம் 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். முதல் நாளாக 2,280 யாத்ரீகர்கள் பஹல்காம் மலயடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

பனி லிங்கத்தை தரிசிக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த மேற்கு வங்காளம் மாநிலம் ஹவுராவைச் சேர்ந்த ஏ.கே முகர்ஜி (72) போஸ்பத்ரி என்ற இடத்தின் அருகே வரும் போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். முன்னதாக இரு தினங்களுக்கு முன்னர் இதே இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்தோ-திபெத் காவல் படையைச் சேர்ந்த உதவி காவல் அலுவலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
ஏ.கே முகர்ஜியைச் சேர்ந்து இந்த ஆண்டில் அமர்நாத் யாத்திரையின் போது மூன்று பேர் பலியாகியுள்ளனர். சுமார் 15000 பேர் இதுவரை பனி லிங்கத்தை தரிசித்துள்ளதாகவும், யாத்ரீகர்கள் வரும் பாதையில் இம்முறை எந்த பிரட்சனையும் ஏற்படவில்லை என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story