search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பால், காய்கறிகளை சாலையில் கொட்டி மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம்
    X

    பால், காய்கறிகளை சாலையில் கொட்டி மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம்

    முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தை அடுத்து, மகாராஷ்டிரா விவசாயிகள் பால், காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மும்பை:

    மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக உள்ளார். மகாராஷ்டிர மாநில விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கு சிறந்த கொள்முதல் விலை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து போராடி வந்தனர்.

    இதனிடையே, தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் கடந்த செவ்வாய்க்கிழமை விவசாயிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.

    பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தை அடுத்து, மகாராஷ்டிரா விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பால், காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



     கோயில் நகரம் என்று அழைக்கப்படும் ஷீரடியில் நூறு லிட்டர் பால், ஏராளமான தக்காளிகள் மற்றும் மிளகாய்களை சாலைகளில் கொட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



    விவசாயிகளின் இந்த போராட்டத்தால் பால், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×