என் மலர்

  செய்திகள்

  காங்கிரஸ் தலைவர்களை காலணியால் தாக்க வேண்டும் - பா.ஜ.க எம்.பி ராஜ்குமார் சைனி சர்ச்சை பேச்சு
  X

  காங்கிரஸ் தலைவர்களை காலணியால் தாக்க வேண்டும் - பா.ஜ.க எம்.பி ராஜ்குமார் சைனி சர்ச்சை பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னர் ஆட்சியில் இருக்கு போது வளர்ச்சியை உருவாக்காத அரியானா காங்கிரஸ் தலைவர்களை காலணியால் தாக்க வேண்டும் என பா.ஜ.க. மக்களவை எம்.பி ராஜ்குமார் சைனி சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசியுள்ளார்.
  சண்டிகர்:

  அரியானா மாநிலத்தில் ஜின்த் மாவட்டத்தின் சிங்ஹானா கிராமத்தில் அம்பேத்காரின் 126-வது பிறந்த நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் பா.ஜ.க.வை சேர்ந்த குருஷேத்ரா தொகுதி மக்களவை உறுப்பினர் ராஜ்குமார் சைனி கலந்து கொண்டார்.

  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ்குமார் சைனி ,”காங்கிரஸ் கட்சி ஹரியானாவில் பலமுறை ஆட்சி செய்திருக்கிறது. மக்களுக்கு அது எந்த ஒரு முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை. மக்களை தற்பொழுது பிச்சைக்காரர்கள் ஆக்கியிருக்கிறது.  தற்பொழுது பாஜக ஆட்சிக்கு வந்த உடன், மக்கள் தவறான ஒரு முடிவை எடுத்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. இது போல வளர்ச்சியை உருவாக்காத ஹரியானா காங்கிரஸ் தலைவர்களை காலணியால்தான் தாக்க வேண்டும்” என அவர் சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசினார்.

  மேலும், மாநிலத்தில் மக்களிடையே நிலவிய சுமுகத் தன்மையை சீரழித்ததில் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங்க் ஹூடாவுக்கு பெரும் பங்கு உண்டு என்றும் ராஜ்குமார் குற்றம் சாட்டினார், அத்துடன் இட ஒதுக்கீட்டினை பொறுத்த வரையில், ஜாதிகளின் அளவிற்கேற்ப இட ஒதுக்கீட்டினை தான் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
  Next Story
  ×