என் மலர்
கதம்பம்
அம்மா என்ற சொல்லை எவரும் கண்டுபிடிக்கவில்லை. அது இயற்கையாக குழந்தை கண்டுபிடித்த சொல்லாகும். அது தாயை நோக்கி கூவியதால் தாய் அம்மாவானாள்.
பிறந்த குழந்தைக்கு பேசத்தெரியாது. இருந்தாலும் தனது தேவைகளை அழுகையின் மூலமே வெளிப்படுத்துகின்றது. பிறந்த குழந்தையின் முதல் ஒலி அழுகையே.
அழுவதற்காக வாயைத்திறந்தவுடன் ‘அ’ என்ற ஒலி வெளிப்படுகின்றது. அழுகையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப ‘ஆ’ என்றும் ஒலிக்கக் கேட்கலாம். ஏறக்குறைய அனைத்து உயிர் எழுத்துக்களின் ஒலிகளையும் குழந்தை அழுகையின் வாயிலாக ஒலிக்கின்றது.
அழும் குழந்தையின் திறந்த வாய் சிறது நேரத்திற்குள் மூடித்தான் ஆகவேண்டும். இரண்டு உதடுகளும் இணையும் போது ‘ம்’ என்ற ஒலி இயற்கையாக பிறக்கின்றது. இவ்வாறு தொடர்ந்து திறந்து மூடும் போது அ-ம் என்ற ஒலிகள் மாறி மாறி ஒலிக்கின்றன. அ-ம்-அ, அ-ம்-அ என்ற தொடர்ந்த ஒலியின் விளைவாக உருவான சொல்லே அம்ம-அம்மா என்பதாகும் என்கிறார் தமிழறிஞர் ம.சோ. விக்டர்.
அம்மா என்ற சொல்லை எவரும் கண்டுபிடிக்கவில்லை. அது இயற்கையாக குழந்தை கண்டுபிடித்த சொல்லாகும். அது தாயை நோக்கி கூவியதால் தாய் அம்மாவானாள். தாயும் தாயின் பாலும் தாயின் மார்பும் அம்மு எனப்பட்டன.
அம்மாவிடமிருந்து பெறப்பட்ட உணவு அம்மு எனப்பட்டது. காலப்போக்கில் மம்மு என்றும் வழங்கியது. அம்முவுக்கு இணையான உணவை இன்றைய அறிவியல் கூட செயற்கையாக தோற்றுவிக்கவில்லை.
குழந்தையின் உடல் வளர்ச்சிக்கான ஊட்டம், செரிமான தன்மை, அனைத்திற்கும் மேலாக அம்மு உணவே குழந்தைக்கு மருந்தாக அமைந்து நோய்களைக் களைகிறது. எந்த உணவோடும் ஒப்புமை கூற இயலாத அம்மு குழந்தையின் உடலை ஊதுகிறது. அதாவது வளர்ச்சியடையச் செய்கிறது. அம்மு+ஊது=அம்மூது எனப்பட்டது. அது அமுது என ஆனது. பிற்காலத்தில் அது அமிழ்து என்றும் சொல்லப்பட்டது.
தேவர்கள் உணவில் அனைத்து ஊட்டப் பொருட்களும் இருக்கும் (அம்முவைப் போல) என்று நம்பப்பட்டதால் தேவருணவை அமிழ்தம் என்றனர்.
உடலுக்கு ஊட்டம் தருவது அம்மு என்றால் அறிவுக்கு ஊட்டம் தருவது மொழியாகும். எனவே மொழியும் அமிழ்து எனப்பட்டது.
அம்ம-அம்மு-அமுது-அமிழ்து என விரிந்த சொற்கள் அக்குழந்தை பேசிய மொழிக்கும் ஏற்றி சொல்லப்பட்டு அது தமிழ் என பிறப்பெடுத்தது.
அம்முவுக்கு இணையான ஓருணவு இல்லை என்பது போல் தமிழுக்கும் இணையான ஒரு மொழி இல்லை என்பது அதன் உட்கருத்து. அதனால்தான் பாரதிதாசனார் தமிழுக்கும் அமுதென்று பேர் என பாடினார். தமிழ் இயற்கையில் பிறந்த மொழி என்பதை அச்சொல் வரலாறு விளக்குகின்றது என்கிறார் ம.சோ. விக்டர்.
-தொகுப்பு கோ. வசந்தராஜ்
பண்டத்தைப் பார்த்து இன்புறுவது ஞானம். ஞானிகள் பண்டத்தைப் பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள்.
பகவான் ராமகிருஷ்ணரிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அறிவு, ஞானம் பற்றிய ஐயம் இருந்தது. அறிவு என்றால் என்ன? ஞானம் என்பது எது? என்று குருவிடம் கேட்டனர்.
அவர் அறிவு, ஞானம் பற்றி பல நாட்கள் பாடம் எடுத்தும் அவர்கள் மூவருக்கும் அது முழுவதுமாக விளங்கவில்லை. இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை உணர முடியவில்லை.
பகவான் ராமகிருஷ்ணர் மூன்று மாணவர்களையும் அழைத்து, “இன்று உங்களுக்கு ஞானம் என்பது எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன்’’ என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார்.
அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்து அமர்ந்தார்.
முதல் மாணவனைப் பார்த்து, “நான்போய் வந்த அறையினுள் மூன்று தம்ளர் பால் உள்ளது. அதில் நீ ஒரு தம்ளர் பாலை பருகி விட்டு வா’’ என்றார். அவன் உள்ளே சென்றான். தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று தம்ளர்களில் பால் இருந்தது. தங்கத் தம்ளரில் இருந்த பாலை எடுத்து மிகுந்த சந்தோஷத்தோடு பருகினான். பிறகு வெளியே வந்தான்.,
அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் தம்ளரில் பால் இல்லாததைப் பார்த்த அவன் அதிலிருந்த பால் தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆதங்கமுற்றான். ஆயினும் அதற்கடுத்த மதிப்பினைக் கொண்ட வெள்ளி தம்ளரில் இருந்த பாலை எடுத்துக் குடித்துவிட்டு ஓரளவு நிறைவோடு வெளியே வந்தான்.
மூன்றாவது மாணவன் உள்ளே சென்றதும் காலியாகக் கிடந்த தங்க, வெள்ளி தம்ளர்களைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. எனக்கு வெண்கல தம்ளர் பாலா? யாருக்கு வேண்டும் இது? நான் என்ன அவ்வளவு இளப்பமானவனா?
எந்தவிதத்தில் நான் தாழ்ந்தவனாகி விட்டேன்?’ என்று அவன் மனதில் எண்ணங்கள் ஓடின. ஆயினும் குரு பாலைக் குடித்து வா என்றதை நினைவில் கொண்டு வருத்தத்தோடு குடித்துவிட்டு வெளியே வந்தான். அவன் முகத்தில் சுரத்தே இல்லை!
பகவான் ராமகிருஷ்ணர் மூவரையும் பார்த்து, “பாலைக் குடித்தீர்களா” என்றார்.
முதல் மாணவன் மகிழ்ச்சிப் பூரிப்புடன், “தங்கத் தம்ளரில் பால் குடித்தேன். நான் மிகவும் கொடுத்து வைத்தவன், குருவே!’’ என்றான்.
இரண்டாவது மாணவன், “எனக்கு தங்கத் தம்ளரில் பால் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் இருந்தாலும் வெள்ளி தம்ளரிலாவது கிடைத்ததே என்கிற மகிழ்ச்சி ஓரளவு இருக்கிறது, குருஜி’’ என்றான்.
மூன்றாவது மாணவன் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே அழுகை வந்துவிட்டது. அதனூடேயே அவன், மூன்று பேர்களில் மிகவும் துரதிர்ஷ்டக்காரன் நானே குருஜி. எனக்கு வெண்கலத் தம்ளரில்தான் பால் கிடைத்தது’’ என்றான்.
பகவான் ராமகிருஷ்ணர் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டபின் பேச ஆரம்பித்தார்.
மாணவர்களே! தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று தம்ளர்களிலும் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து சுண்டக் காய்ச்சிய சுவையான பசும்பால்தான் ஒரே அளவில் இருந்தது. அதில் எந்த வேறுபாடும் இல்லை.
பாலை பருகப் போகிற மூவருக்குமே அதிலிருந்து ஒரே மாதிரியான சுவையும், சத்துவ குணமும்தான் கிடைக்கப் போகிறது. அதிலும் வேறுபாடில்லை. ஆனால் நீங்கள் மூவருமே நினைத்தது வேறு.
பால் ஊற்றி வைத்திருக்கும் தம்ளர்களின் மதிப்பைப் பற்றியே உங்கள் மனம் யோசித்தது. பாலின் குணம், சுவை, ருசி ஆகிய அனைத்தும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதை யோசிக்கவே இல்லை.
ஆகவே நீங்கள் பண்டத்தை விட்டு விட்டு பாத்திரத்தையே பார்த்துள்ளீர்கள்! பாத்திரத்தைப் பார்த்து சந்தோஷப்படுவது அறிவு.
அதில் உள்ள பண்டத்தைப் பார்த்து இன்புறுவது ஞானம். ஞானிகள் பண்டத்தைப் பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள்.
பாத்திரங்களுக்கு மதிப்பு தர மாட்டார்கள். மண்சட்டியில் ஊற்றிக்கொடுத்தால் கூட ஆனந்தமாக பருகிச் செல்வார்கள்’’
நீங்கள் அறிவு கொண்டு பார்க்காமல் ஞானம் கொண்டு பார்த்திருந்தால் மூவருமே ஒரே மாதிரியான மனோ நிலையை எட்டியிருப்பீர்கள்!’’
பகவான் ராமகிருஷ்ணர் சொல்லி முடித்ததும் மூன்று பேர்களுக்கும் அறிவிற்கும், ஞானத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளங்கியது. -அகரமுதல்வன்
ஒரு காலகட்டத்தில் இவர்கள் ஆண்ட நிலப்பரப்பு சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆண்ட நிலப்பரப்பைவிட பெரியது என்று பார்க்கும் போது அவர்களது ஆற்றல் நமக்குப் புரிகிறது.
பெங்களூருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இந்த பேளூர் செல்ல வேண்டுமென்று பலமுறை நினைத்ததுண்டு.
ஹசன் மாவட்டத்தில் உள்ள இந்த பேளூர் பெங்களூருவில் இருந்து வடமேற்கில் 200 கி. மீ. தான்!

தமிழகத்து மூவேந்தர்கள் போல கர்நாடகம், ஆந்திரம், மகாராட்டிரம், குடகு பகுதிகளை ஆண்டவர்கள் சாளுக்கியர்கள், ஹொய்சாலர்கள், விஜயநகரப் பேரரசின் மன்னர்கள். ஒரே காலகட்டத்தில் அல்ல; ஒருவர் பின் ஒருவராக!
மேற்குப் பகுதியை ஆண்டவர்கள் மேலைச் சாளுக்கியர்கள் என்றும், கிழக்குப் பகுதியை ஆண்டவர்கள் கீழைச் சாளுக்கியர்கள் என்றும் நாம் படித்திருக்கிறோம். ஒரு காலகட்டத்தில் இவர்கள் ஆண்ட நிலப்பரப்பு சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆண்ட நிலப்பரப்பைவிட பெரியது என்று பார்க்கும் போது அவர்களது ஆற்றல் நமக்குப் புரிகிறது.

சாளுக்கியர்கள் காலத்துக்குப் பின்னர் வந்தவர்கள் ஹொய்சாலர்கள். இந்த மரபில் வந்த விஷ்ணுவர்த்தன் கி. பி. 1110 ல் அரியணை ஏறினான். அவன் அரியணை ஏறிய ஏழாம் ஆண்டு இந்த சென்ன கேசவன் ஆலயம் கட்டடப் பணி தொடங்கியது.
விஷ்ணுவர்தன் 1140ல் காலமான பிறகு, அவன் வாரிசுகள் தொடர்ந்தார்கள். பணி நிறைவடைய கிட்டத்தட்ட 103 ஆண்டுகள் ஆனது! மூன்று தலைமுறை! இங்கே நாம் காணும் சிற்பங்களுக்கு ஈடாக வேறெங்கும் காண முடியுமா என்று தெரியவில்லை.
தாராசுரம் கோயில் சிற்பங்களை இதற்கு இணையாக நாம் கருதலாம் என்றாலும், அளவிலும் அழகிலும் இந்தக் கோயில் உயர்ந்தே நிற்கிறது!

எடுத்துக் காட்டாக, நுட்பமானச் சிற்பங்கள் அமைந்த தூண் பால் பேரிங் போன்ற ஒன்றால் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தத் தூணை நாம் சுழற்ற முடியும்! ஒவ்வொன்றையும் பெரிதாக்கிப் பாருங்கள்!
வியப்பில் பிளந்த வாயை மூட முடியாமல் நிற்கிறோம்!
மொத்தத்தில் சாளுக்கியர்களின் தலை சிறந்த கலைப்படைப்பு இது! ‘
சென்ன’ என்ற சொல்லுக்கு ‘ அழகிய ‘ என்று பொருள்.
ஹேமாவதி ஆற்றின் துணையாறான யாகாச்சி கரையில் அமைந்துள்ளது பேளூர்!
வாழ்நாளில் ஒரு முறையாவது கண்டு மகிழ வேண்டிய கலைக் கருவூலம்! தமிழையாண்ட கோதை ஆண்டாளுக்கு தனி சன்னதி அல்ல; தனியாக கோயிலே இருப்பது நம்மை மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கிறது!
எல்லாம் உடையவர் இராமானுசர் தொடர்பினால் வந்திருக்கிறது!
கேசவப் பெருமாள் இறைவனாக வீற்றிருப்பதால் இது வைணவக் கோயில்தான். ஆனால் சைவ, சமண, பௌத்த சமயங்களைச் சார்ந்த கடவுளரின் சிற்பங்களும் இங்கே இடம் பெற்றுள்ளன என்பது மிகச் சிறப்பான ஒன்று! வரலாற்றைச் சொல்ல பல பக்கங்கள் வேண்டும். நான் குறித்தவை மிகக் குறைவே. போய் வாருங்கள்!- மா. பாரதிமுத்துநாயகம் —
“எங்களை நத்திப் பிழைக்க வந்த நீங்கள்தான் எங்களின் தாய் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, நாங்கள் உங்கள் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை” கணீரென்ற ஆங்கிலக் குரலோடு புயலென உள்ளே வந்து நின்றார் அந்தப்பெண்.
சிவகங்கை அரண்மனையில் ஆலோசனை கூட்டம் தொடங்க இருந்தது. ஆங்கிலேயருக்கே இருந்த ஆணவத்தோடு கால்மேல் கால் போட்டு கர்வத்தோடு அமர்ந்திருந்தான் கவர்னர் லாட்டீ காட்.
சிறிது நேரத்தில் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் உள்ளே நுழைகிறார். மன்னனைப் பார்த்ததும் இன்னும் அதிகாரத் தோரணை மேலிடுகிறது அவனுக்கு. இன்னும் கொஞ்சம் பின்னால் சாய்ந்து கொண்டு காலை ஆட்டிக்கொண்டே மன்னனைப் பார்க்கிறான்.
“எங்களுக்குக் கொடுக்க வேண்டிய வரியை வெகுகாலமாகவே நீ கட்டவில்லை. உடனே கட்டிவிடு. இல்லையேல் விளக்கம் கொடு” என ஆங்கிலத்தில் சற்று உரக்கவே சொன்னான். மன்னருக்கு ஆங்கிலம் தெரியாது.
கவர்னருடன் வந்த மொழிபெயர்ப்பாளனோ ஏதும் பேசாமல் அமைதியாக நின்றான். மன்னரால் கவர்னரின் பேச்சைப் புரிந்து கொள்ள இயலாமையைக் கண்டு எகத்தாளச் சிரிப்புடனும் கேலிப்பார்வையுடனும் மன்னனையே பார்த்துக் கொண்டிருந்தான் கவர்னர்.
“எங்களை நத்திப் பிழைக்க வந்த நீங்கள்தான் எங்களின் தாய் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, நாங்கள் உங்கள் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை” கணீரென்ற ஆங்கிலக் குரலோடு புயலென உள்ளே வந்து நின்றார் அந்தப்பெண். அந்த நிமிடம் கவர்னருக்கு ஆடிப்போய்விட்டது. ஏன் என்று தெரியாமலே எழுந்து நின்றான்.
யார் நீ? என்று கேட்பதற்காக கவர்னர் வாய் திறப்பதற்குள், “உனக்கு ஆங்கிலம் மட்டும்தானே தெரியும்? இதோ இப்பொழுது நான் பேசியதை தெலுங்கில் சொல்கிறேன் கேள். மலையாளத்தில் சொல்கிறேன் கேள். கன்னடத்தில் கூறுகிறேன் கேள். உருதுவில் கூறுகிறேன் கேள்” என அத்தனை மொழிகளிலும் வெடித்துச் சிதறினாள். அறையை விட்டு வெளியே ஓடிவிடலாமா? என்ற எண்ணம் மட்டுமே லாட் டீயின் மனத்தில் இருந்திருக்கும்.
ஆனால் அவள் விட்டபாடில்லை. “இது எங்கள் மண். எங்கள் நாடு. எங்கள் மக்கள். இங்கிருக்கும் ஒவ்வொரு துரும்பும், ஒவ்வொரு அணுவும், எங்களின் உழைப்பைச் சொல்லும்.
எங்கள் மக்களின் உழைப்பாலும், உதிரத்தாலும், வியர்வையாலும் உருவானது எங்கள் நாடு. இங்கே ஓடுகின்ற நதிகளும், நிற்கின்ற மரங்களும், வீசுகின்ற காற்றும், அடிக்கின்ற வெயிலும், பெய்கின்ற மழையும் எங்கள் மண்ணின் பெருமையைச் சொல்லும்.
அன்புக்கு எங்கள் தலை என்றும் குனியும். ஆணவத்தோடு நெருங்கினால் உங்கள் தலை மண்ணில் உருளும்.
எங்கிருந்தோ பிழைக்க வந்த நீ, எங்களிடமே வரி கேட்கின்றாயா? வரி கொடுத்து எமக்குப் பழக்கமில்லை. உதவி என்று கேள். வாரி வாரி வழங்குவோம்” என்று அவள் வாயிலிருந்து புறப்பட்ட அணுகுண்டுச் சொற்களால் நிலைகுலைந்தான் கவர்னர்.
இனியும் இங்கே நின்றால் தம் உயிரும் மிஞ்சாதோ என அஞ்சி, அரண்மனையை விட்டு வெளியேறினான்.
அன்று முத்துவடுகநாதர் அவையில் அன்று வீரமுழக்கமிட்ட பெண், வீரத்தமிழச்சி வேலு நாச்சியார்தான் அந்த வீர மங்கை.
கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள் வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்து ஆயுதப் பயிற்சிகளையும் கற்றுத் தேர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஆங்கிலம், உருது என 10 மொழிகளை கற்றறிந்த வேலுநாச்சியார், சிறு வயதிலேயே எதற்கும் அஞ்சாத துணிவும், நெஞ்சுரமும் கொண்டவராக திகழ்ந்தார்.
இந்திய விடுதலைப்போர் வரலாற்றில் ஆங்கிலேயரைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றி தம் கொடியை ஏற்றிய ஒரே அரசி! — சந்திரசேகரன் சுப்பிரமணியம்
எந்த கோயில் கோபுரங்களாவது தமிழக கோயில் கோபுரங்களைப் போல் உள்ளதா? இருக்கின்றதா? என ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அளித்த பதிலை நேரு ஏற்றுக்கொண்டார்.
நேரு ஆட்சியில் இருந்தபோது மாநிலங்களுக்கானத் தனி முத்திரைகளை முடிவு செய்வது குறித்து, அந்தந்த மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதுகின்றார்.
தமிழகத்தில் அப்போது ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தார். அவர் தமிழகத்தின் தனி முத்திரைக் குறித்து அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை- ஆய்வு நடத்தினார்.
கடைசியாக, திருவில்லிப்புத்தூரின் கோயில் கோபுரத்தையே ‘தமிழகத்தின் தனி முத்திரை’ சின்னம் என்று தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.
அதைக்கண்ட நேருக்கு அதிருப்தி. “என்ன இது, நாம் மதசார்பற்ற ஜனநாயக நாடென்று இருக்கின்றோம், நீங்கள் இப்படி ஒரு இந்து கோயில் கோபுரத்தை ‘மாநில சின்னமாக’ அனுப்பி வைத்துள்ளீர்கள். இது சரியா? என்று கேட்கின்றார்.
அதாவது, எல்லா மதத்தவரும் உள்ள நாட்டில்- மாநிலத்தில் தனிப்பட்ட ஒரு மதத்தினருக்கான இந்து ‘கோயில் கோபுரத்தை’ சின்னமாக எப்படி அறிவிக்கலாம் என்பது நேருவின் அதிருப்தி கேள்வி.
பதிலளித்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், “நான் தேர்வு செய்தது இந்து மதத்தின் கோயில் என்ற அடிப்படையில் அல்ல. அந்த கோயில் கோபுரம் இந்து மதத்திற்கானதும் அல்ல.
தமிழகத்தைத் தாண்டி மற்ற எல்லா மாநிலங்களிலும்தான் இந்து மதம் உள்ளது. இந்து கோயில்கள் உள்ளன. எந்த கோயில் கோபுரங்களாவது தமிழக கோயில் கோபுரங்களைப் போல் உள்ளதா? இருக்கின்றதா? அப்படியே இருந்தாலும் அது தமிழர்கள் கட்டிய கோயிலாகத்தான் இருக்கும்.
இந்த மாதிரியான கோயில் கோபுரங்கள் தமிழர்களின் கலைப் பண்பாட்டு வடிவங்கள். தமிழர்களின் கட்டிடக்கலை. இப்படியானது வேறு எந்த நாட்டிலும்- மாநிலங்களிலும் இல்லை.
அதனாலேயே நான் கோயில் கோபுரங்களைத் தனிச்சின்னமாக, தமிழர்களின் அடையாளமாக, தமிழகத்தின் முத்திரையாகத் தேர்வு செய்தேன்” என்று விளக்கமளித்தார்.
பிரதமர் நேருக்கு உண்மை தெளிந்தது. கோயில் கோபுரத்தையே தமிழகத்தின் ‘தனிச் சின்னமாக’ ஏற்றுக்கொண்டு அறிவித்தார் என்கிறார் பத்திரிகையாளர் பா.ஏகலைவன்- தொகுப்பு கோ.வசந்தராஜ்
உலகிலேயே தோஷம் தாக்க முடியாத ஒன்று தண்ணீர்தான்! குளிக்கும்போது, நமது உடல் முழுவதும் நீரில் மூழ்கி இருக்கும் போது உலகத் தொடர்பை இழக்கிறோம்.
எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்னர் குளிப்பது விசேஷம். குளிப்பது அழுக்கு போறதுக்கு மட்டும் அல்ல. நம்மை சதா சர்வகாலமும் ஆக்கிரமித்து இருக்கும் காற்றின் பிடியிலிருந்து விலகி இருக்கவும்தான். எப்படி மீன் தண்ணீரில் இருக்கிறதோ அதுபோல் நாம் காற்றுக்குள் இருக்கிறோம்!
ஒன்பது கிரகங்கள் சதா சர்வ காலமும் வழி நடத்திக்கொண்டு இருக்கிறது. அவற்றின் கதிர்கள் காத்தோட கலந்துதான் நமது உடலை வந்தடைகிறது. நாம் சுவாசிக்கும் போது அது நமக்குள்ளேயும் நுழைகிறது. ஒவ்வொரு கணமும் எல்லோருக்கும் இதுதான் நடக்கிறது.
மனித உடம்பு தூசு, தும்பு போன்ற அழுக்குகளால் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை, மற்ற மனிதர்களின் பார்வை என்னும் திருஷ்டி, எண்ணங்களின் தாக்குதல், உடம்பில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு தாக்குதல் உட்பட பல பாதிப்புகளுக்கு ஆளாகிறது.
இந்த பாதிப்புகள் இரண்டு விதம்; ஒன்று நல்ல விதம், இன்னொன்று கெட்ட விதம். ஒருவர் நம்மைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தால் அது நல்ல விதம், பொறாமைப்பட்டால் அது கெட்ட விதம்! இவற்றை நாம் கண்டறிய இயலாது, அது சாத்தியமும் இல்லை. ஆனால் இத்தகைய பாதிப்புகள் இல்லாமல் நானும் இல்லை, நீங்களும் இல்லை. இந்த பாதிப்பு கூடிக்கொண்டே போகும்போது ஒரு கட்டத்தில் உடம்பு வலி, மன அசதி, மன அழுத்தம் என்றெல்லாம் பாடாய் படுத்தும். நாம் இதை நமது உடலின் தன்மை என்று நினைத்துக் கொள்கிறோம்.
இந்த உலகிலேயே தோஷம் தாக்க முடியாத ஒன்று தண்ணீர் தான்! குளிக்கும் போது, நமது உடல் முழுவதும் நீரில் மூழ்கி இருக்கும் போது உலகத் தொடர்பை இழக்கிறோம். நீர் உச்சந்தலையில் படும்போது, உடம்பில் இருக்கும் சர்வநாடிகளும் ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்பி நமது உடலில் உதறல் ஏற்படுகிறது. இதனால் நம்மை ஆக்கிரமித்து இருக்கும் கதிர்கள் அனைத்தும் உதிர்ந்து நீரில் அடித்துச் செல்லப்படுகிறது. குளித்து முடித்தவுடன் காற்று உலகத்துடன் புதிதாகத் தொடங்குகிறது!
உற்சாகம் உடம்புக்கு மட்டுமல்ல, மனத்துக்கும் உண்டாகும்!
இறந்த வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க காரணம் இதுதான். சவத்தீட்டு என்று சொல்வதும் அந்த சவம் கிடக்கும் இடத்தில் இருக்கும் கதிர்களைத்தான். எல்லார் மனமும் துக்கத்தில் இருக்கும் இடத்தில் சூழ்நிலை நல்ல கதிர்களுடன் நல்லவிதமாக இருக்காது. இவை நாம் குளிக்கும்போது நீரோடு அடித்துச் செல்லப்படுகிறது.
கோயிலுக்கு போய்ட்டு வந்தா குளிக்க கூடாது என்று சொல்லும் காரணமும் முக்கியம். கோயில் நல்ல சக்தி, நல்ல சூழ்நிலை, நல்ல கதிர்வீச்சு நடமாடும் ஒரு இடம். அத்தகைய கதிர்வீச்சை, குளித்து நீருடன் கலந்து வீனாக்கக் கூடாது என்பதால்தான்!
இந்திரா சவிந்தர்ராஜனின் “கன்னிகள் ஏழு பேர் “ என்ற நூலில் இருந்து... -இளங்கோவன்
நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..? என்பது குறித்து முழு விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?
அருகம்புல் பொடி: அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
நெல்லிக்காய் பொடி: பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது.
கடுக்காய் பொடி: குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
வில்வம் பொடி: அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.
அமுக்கரா பொடி: தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
சிறுகுறிஞான் பொடி: சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
நவால் பொடி: சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
வல்லாரை பொடி: நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
தூதுவளை பொடி: நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
துளசி பொடி: மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
ஆவரம்பூ பொடி: இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
கண்டங்கத்திரி பொடி: மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
ரோஜாபூ பொடி: இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
ஓரிதழ் தாமரை பொடி: ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.
ஜாதிக்காய் பொடி: நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
திப்பிலி பொடி: உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
வெந்தய பொடி: வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
நிலவாகை பொடி: மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
நாயுருவி பொடி: உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
கறிவேப்பிலை பொடி: கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.
வேப்பிலை பொடி: குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
திரிபலா பொடி: வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
அதிமதுரம் பொடி: தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
துத்தி இலை பொடி: உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
செம்பருத்திபூ பொடி: அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
கரிசலாங்கண்ணி பொடி: காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
சிறியா நங்கை பொடி: அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
கீழாநெல்லி பொடி: மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
முடக்கத்தான் பொடி: மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது
கோரைகிழங்கு பொடி: தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
குப்பைமேனி பொடி: சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
பொன்னாங்கண்ணி பொடி: உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
முருஙகைவிதை பொடி: ஆண்மை சக்தி கூடும்.
லவங்கபட்டை பொடி: கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
வாதநாராயணன் பொடி: பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
பாகற்காய் பவுடர்: குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
வாழைத்தண்டு பொடி: சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
மணத்தக்காளி பொடி: குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
சித்தரத்தை பொடி: சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
பொடுதலை பொடி: பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
சுக்கு பொடி: ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
ஆடாதொடை பொடி: சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
கருஞ்சீரகப்பொடி: சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
வெட்டி வேர் பொடி: நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
வெள்ளருக்கு பொடி: இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
நன்னாரி பொடி: உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
நெருஞ்சில் பொடி: சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
பிரசவ சாமான் பொடி: பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
கஸ்தூரி மஞ்சள் பொடி: தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
பூலாங்கிழங்கு பொடி: குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
வசம்பு பொடி: பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
சோற்று கற்றாழை பொடி: உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
மருதாணி பொடி: கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
கருவேலம்பட்டை பொடி: பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.
-தஞ்சை வராகி
இசைக்கு மயங்காத இதயங்கள் எதுவுமே இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அந்த இசை என்ற மாபெரும் உலகத்துக்கு, இனம், மதம், நாடு, மொழி என்ற எல்லைகள் எதுவுமே இல்லை.
இளையராஜாவின் குரலை கேட்டதும் அந்த வெளிநாட்டு பெண் அசையாமல் அப்படியே நின்று விட்டார்.
மகாபலிபுரத்தில் ஒரு மாலை நேரத்தில் நடந்த விஷயம் இது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி அவர். மகாபலிபுரம் சிற்பங்களை பார்த்து ரசித்துவிட்டு, தான் தங்கியிருந்த விடுதிக்கு வந்திருந்தார்.
அந்த விடுதியில்தான் இளையராஜாவும் தங்கி இருந்தார்.
‘ரிஷிமூலம்‘ என்ற சிவாஜி படத்திற்கான பாடல் கம்போசிங் நடந்து கொண்டிருந்த நேரம். அதற்காகத்தான் அந்த மகாபலிபுரம் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார்கள் படக்குழுவினர். மூன்று நாட்களாக இடைவிடாமல் இசை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.
‘ரிஷிமூலம்‘ படத்தில் ஒரு பாடல்.
“நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத...”
இந்தப் பாடலுக்கான மெட்டை இளையராஜா விதம்விதமாக பாடிக் காட்டினார். படக் குழுவினர் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
மகாபலிபுரத்தின் மாலை நேரத்து ரம்மியமான சூழலில் இளையராஜாவின் குரல் வழக்கத்தைவிட இனிமையாக ஒலித்தது.
இப்படி அவர் மெட்டுப் போட்டு பாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான், தற்செயலாக அந்த பிரான்ஸ் நாட்டு பெண், இளையராஜா குழுவினர் தங்கியிருந்த அறையை கடந்து சென்றார்.
அப்போது மெல்லிய குரலில் இளையராஜா பாடிக் கொண்டிருக்க...
அந்தக் குரலைக் கேட்டதும் அந்தப் பெண் நடப்பதை நிறுத்திவிட்டு அசையாமல் அப்படியே நின்றார்.
அறைக்குள்ளிருந்து இளையராஜாவின் குரல் தொடர்ந்து வர, அறைக்கு வெளியே அந்தப் பெண் மகாபலிபுரம் சிலைபோல மணிக்கணக்காக நின்றுகொண்டிருந்தார்.
வெகுநேரம் பாடிக்கொண்டிருந்த இளையராஜா, தன் குரலுக்கு சற்று ஓய்வு கொடுக்க... அப்போதுதான் அந்தப் பெண் தன் சுயநினைவுக்கு வந்தார்.
இந்த நேரத்தில் இளையராஜா தன் அறையிலிருந்து மெல்ல வெளியே எட்டிப் பார்த்தார்.
யார் அந்த பெண் ? வெகு நேரமாக அந்த இடத்திலேயே அசையாமல் நிற்கிறாரே !
அதே நேரம் அந்தப் பெண்ணும் இளையராஜா அறைக்கு அருகே மெல்ல வந்து, ‘நான் உள்ளே வரலாமா’ என சைகையிலேயே அனுமதி கேட்க, இளையராஜா உடன் இருந்தவர்கள் அவரை உள்ளே வரச் சொல்ல,
அந்தப் பெண் மெல்ல மெல்ல அடியெடுத்து அறைக்குள் நுழைந்தார். அந்த அறையைச் சுற்றிலும் பார்த்தார். எல்லோரும் விரிப்பை விரித்து தரையில் அமர்ந்திருந்தார்கள்.
‘உட்காருங்கள்’ என இளையராஜா சொல்ல, அந்தப்பெண் இளையராஜாவுக்கு எதிரே பணிவோடு தரையில் அமர்ந்தார்.
கண்களை இமைக்காமல் இளையராஜா முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
இளையராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேர மௌனத்துக்குப் பின் அந்த பிரான்ஸ் பெண் மெல்லிய குரலில் இளையராஜாவை நோக்கிக் கேட்டார்..
“இப்போது நீங்கள் பாடிக் கொண்டிருந்தீர்களே. அந்த பாடலை இன்னும் ஒருமுறை எனக்காக பாட முடியுமா ?”
“அதனாலென்ன, பாடுகிறேன்” என்று சொன்ன இளையராஜா மீண்டும் ஒருமுறை மெல்லிய குரலில் அந்த ‘நேரமிது’ பாடலை பாட ஆரம்பிக்க, எதிரில் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது.
பாட்டை முடித்துவிட்டார் இளையராஜா.
ஆனால் அதன் பிறகும் கூட அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர் வழிவது நிற்கவில்லை.
இளையராஜாவும் மற்றவர்களும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.
இளையராஜா புரிந்துகொண்டார். இசை செய்யும் மாயங்கள் ஜாலங்கள் அவருக்கு நன்றாகவே தெரியும்.
ஜாதி இனம் மொழி எல்லாவற்றையும் கடந்தது இசை. இப்போது, தான் பாடிய அந்த இசையின் ஏதோ ஒரு வடிவம் அந்தப் பெண்ணை கவர்ந்திருக்கிறது என்பதை இளையராஜா புரிந்துகொண்டார்.
சிறுது நேரத்துக்கு பின் அந்த பெண் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னார்..
“நீங்கள் பாடிய இந்த இசைக்கும் எனக்கும் பல ஜென்மங்களாக தொடர்பு இருப்பது போல் உணர்கிறேன்.’’
இளையராஜா மௌனமாக புன்னகைத்தார்.
அந்தப் பெண் தொடர்ந்து கேட்டார். “எனக்காக நீங்கள் ஒன்று செய்ய முடியுமா ? எனக்கு பியானோ வாசிக்க தெரியும். அதில் நான் இசைப்பதற்காக, இப்போது நீங்கள் பாடினீர்களே, அந்த மியூசிக் நோட்ஸை எழுதி தர முடியுமா ?”
எதுவும் சொல்லாமல் தன் முன்னால் இருந்த ஒரு பேப்பரை எடுத்து, தான் பாடிய பாடலுக்கான இசைக்குறிப்புகளை எழுதிக்கொடுத்தார் இளையராஜா.
மிகுந்த மரியாதையோடு கை குவித்து வணங்கி வாங்கிக் கொண்டார் அந்தப் பெண்.
மீண்டும் கண்களில் நீர் துளிர்க்க இளையராஜாவை வணங்கி விட்டு அந்தப் பெண் சொன்னார்.

“நான் புறப்படுகிறேன். இதற்கு முன்னால் எத்தனையோ முறை இந்தியாவுக்கு வந்து இருக்கிறேன். ஆனால் இந்த தடவை வந்ததை என் வாழ்நாளில் ஒருபோதும் நான் மறக்கவே மாட்டேன். உங்கள் அனைவருக்கும் என் நன்றி.”
இளையராஜாவும் கை குவித்து வணங்கி வழி அனுப்பினார்.
வாசல் வரை சென்ற அந்தப் பெண் திரும்பிப் பார்த்து சொன்னார்.. “ஒருவேளை உங்களை நான் சந்திப்பதற்கும், இந்த இசைக் குறிப்புகளை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காகவும்தான் இந்த முறை இந்தியாவுக்கு வந்தேனோ என்னவோ! போய் வருகிறேன்.”
அந்தப் பெண் புறப்பட்டு போன பின்னரும் கூட, வெகுநேரம் அந்த அறையில் அமைதி நிலவியது. ஆனால் அந்த மௌனத்தில் கூட ஏதோ ஒரு இசை கலந்திருந்தது.
இசைக்கு மயங்காத இதயங்கள் எதுவுமே இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அந்த இசை என்ற மாபெரும் உலகத்துக்கு, இனம், மதம், நாடு, மொழி என்ற எல்லைகள் எதுவுமே இல்லை. -ஜான்துரை ஆசிர் செல்லையா
தமிழில் திங்கள் என்ற சொல் நிலவையும் மாதத்தையும் குறிப்பது போல், ‘மூன்’ என்ற ஆங்கில சொல் நிலவையும், மாதத்தையும் குறிக்கும்.
புதுமணத் தம்பதிகளின் இல்லற வாழ்வின் தொடக்கக் காலத்தை ஆங்கிலத்தில் ‘ஹனிமூன்’ என்பார்கள். அதனை தமிழில் தேன்நிலவு என்று கூறுவார்கள். இது தவறான மொழி பெயர்ப்பாகும் என்கிறார் தமிழறிஞர் பேராசிரியர் கு.அரசேந்திரன். அதனை ‘தேன் மாதம்’ என்றே சொல்ல வேண்டும் என்கிறார். அதற்கான காரணத்தை இப்படி விவரிக்கிறார்...
“ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்” என்பார்கள். அதாவது திருமணமான ஒரு மாத காலம் அவர்களின் இல்லற வாழ்க்கை தேன் போன்று தித்திப்பதாக இருக்கும். இதனைத்தான் ஆங்கிலத்தில் ‘ஹனிமூன்’ என்றார்கள்.
ஹனி-என்றால் தேன். மூன் என்றால் ஆங்கிலத்தில் நிலவையும் குறிக்கும் மாதத்தையும் குறிக்கும். எனவே ‘ஹனி மூன்’ என்பதை ‘தேன் மாதம்’ என்றே உணர வேண்டும். மாறாக ‘தேன்நிலவு’ என தவறாக கூறி விட்டார்கள்.
இந்த ‘ஹனி மூன்’ என்ற வார்த்தை எப்படி உருவானது என்பதை பார்ப்போம்.
தேனைக் குறிக்கும் ஹனி என்ற ஆங்கில சொல் காஞ்சனம் என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து உருவானதாக கூறுவார்கள். காஞ்சனம் என்றால் தங்கம். இதன் மூலவேர் தமிழில் உள்ள ‘காய்’ ஆகும். காய், காய்தல் என்றால் வெப்பம், தககப்பு, பளபளப்பு.
தங்கம் தகதகவென பிரகாசிப்பதால் காஞ்சனம் என்றனர்.
இந்த காஞ்சனம் என்ற சொல் காஞ்சனே-ஹானே என மருவி ஆங்கிலத்தில் ஹனி என்றானது. தேன், உருக்கிய தங்கம் போல் இருப்பதால் அப்பெயர் பொருத்தம்தான்.
இதே போல் ‘மூன்’ என்ற ஆங்கிலச்சொல், தமிழின் ‘மா’ என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். மா- என்றால் அளவு என்பது பொருளாகும். அதிலிருந்து தான் மாத்திரை உண்டானது. மாத்திரை என்றால் கால அளவை குறிக்கும். இது எம்மாம் பெருசு, இவன் எனக்கு எம்மாத்திரம்? என்பவையெல்லாம் அளவை, தரத்தை குறிப்பதை அறியலாம். ஆங்கிலத்தில் மீட்டர், மெஸர் என்ற அளவையெல்லாம் ‘மா’ வில் இருந்து உண்டானவையே.
தமிழ் ‘மா’ தான் மான்-மோன் என்றாகி பின்னர் மூன் என ஆங்கிலத்தில் நிலவை குறிக்கும் சொல்லானது. தமிழில் திங்கள் என்ற சொல் நிலவையும் மாதத்தையும் குறிப்பது போல், ‘மூன்’ என்ற ஆங்கில சொல் நிலவையும், மாதத்தையும் குறிக்கும்.
மூன்-மோன்-மோந்த் என்றாகி பின்னர் மாதத்தை குறிக்கும் மந்த் ஆனது. திங்கள் (நிலவு) கிழமையை குறிக்கும் மூன்டே தான் மண்டே ஆனது.
ஆக ‘ஹனிமூன்’ என்ற ஆங்கில வார்த்தையில் இரண்டு தமிழ் சொற்கள் இருக்கின்றன. அதனை தமிழில் தேன் மாதம் என்று சொல்வதே சரியானதாகும்.
“ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்” என்பார்கள். அதாவது திருமணமான ஒரு மாத காலம் அவர்களின் இல்லற வாழ்க்கை தேன் போன்று தித்திப்பதாக இருக்கும். இதனைத்தான் ஆங்கிலத்தில் ‘ஹனிமூன்’ என்றார்கள்.
ஹனி-என்றால் தேன். மூன் என்றால் ஆங்கிலத்தில் நிலவையும் குறிக்கும் மாதத்தையும் குறிக்கும். எனவே ‘ஹனி மூன்’ என்பதை ‘தேன் மாதம்’ என்றே உணர வேண்டும். மாறாக ‘தேன்நிலவு’ என தவறாக கூறி விட்டார்கள்.
இந்த ‘ஹனி மூன்’ என்ற வார்த்தை எப்படி உருவானது என்பதை பார்ப்போம்.
தேனைக் குறிக்கும் ஹனி என்ற ஆங்கில சொல் காஞ்சனம் என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து உருவானதாக கூறுவார்கள். காஞ்சனம் என்றால் தங்கம். இதன் மூலவேர் தமிழில் உள்ள ‘காய்’ ஆகும். காய், காய்தல் என்றால் வெப்பம், தககப்பு, பளபளப்பு.
தங்கம் தகதகவென பிரகாசிப்பதால் காஞ்சனம் என்றனர்.
இந்த காஞ்சனம் என்ற சொல் காஞ்சனே-ஹானே என மருவி ஆங்கிலத்தில் ஹனி என்றானது. தேன், உருக்கிய தங்கம் போல் இருப்பதால் அப்பெயர் பொருத்தம்தான்.
இதே போல் ‘மூன்’ என்ற ஆங்கிலச்சொல், தமிழின் ‘மா’ என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். மா- என்றால் அளவு என்பது பொருளாகும். அதிலிருந்து தான் மாத்திரை உண்டானது. மாத்திரை என்றால் கால அளவை குறிக்கும். இது எம்மாம் பெருசு, இவன் எனக்கு எம்மாத்திரம்? என்பவையெல்லாம் அளவை, தரத்தை குறிப்பதை அறியலாம். ஆங்கிலத்தில் மீட்டர், மெஸர் என்ற அளவையெல்லாம் ‘மா’ வில் இருந்து உண்டானவையே.
தமிழ் ‘மா’ தான் மான்-மோன் என்றாகி பின்னர் மூன் என ஆங்கிலத்தில் நிலவை குறிக்கும் சொல்லானது. தமிழில் திங்கள் என்ற சொல் நிலவையும் மாதத்தையும் குறிப்பது போல், ‘மூன்’ என்ற ஆங்கில சொல் நிலவையும், மாதத்தையும் குறிக்கும்.
மூன்-மோன்-மோந்த் என்றாகி பின்னர் மாதத்தை குறிக்கும் மந்த் ஆனது. திங்கள் (நிலவு) கிழமையை குறிக்கும் மூன்டே தான் மண்டே ஆனது.
ஆக ‘ஹனிமூன்’ என்ற ஆங்கில வார்த்தையில் இரண்டு தமிழ் சொற்கள் இருக்கின்றன. அதனை தமிழில் தேன் மாதம் என்று சொல்வதே சரியானதாகும்.
-தொகுப்பு கோ.வசந்தராஜ்
எண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நாள்களாக சில நாள்கள் சொல்லப்படுகின்றன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.
நம் முன்னோர், நோய் உடலை அண்டாமல் காக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய வழிகளைப் பின்பற்றினர். அவற்றில் எண்ணெய்க் குளியலுக்கு முக்கியப் பங்கு உண்டு.
எண்ணெய்க் குளியலின் பயன்கள்:
‘வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்குக் கொடு’ என்பது பழமொழி. ‘நோய் வந்து வைத்தியரிடம் சென்று செலவு செய்வதைவிட எண்ணெய்ப் பொருள்களைத் தயாரிக்கும் வியாபாரிகளிடம் எண்ணெய் வாங்கிக் குளித்து வந்தால் நோய்கள் அண்டாது’ என்னும் பொருள்பட சொல்லப்பட்டது.
நோய் எதிர்ப்பாற்றலையும் மெய், வாய், கண், செவி, நாசி ஆகிய ஐம்புலன்களின் செயல்பாட்டையும் அதிகரிக்கும். உடலில் பித்தம் அதிகமாவதால் ஏற்படும் `குருதி அழல்’ எனப்படும் உயர் ரத்தஅழுத்தம், மூலச்சூட்டினால் உண்டாகும் உடல் உபாதைகள், மனநிலையில் சமநிலையின்மை போன்றவற்றிலிருந்து காக்கும். ‘காளஞ்சகப்படை’ எனப்படும் சொரியாசிஸ் உள்ளிட்ட சரும நோய்கள் மற்றும் சர்க்கரைநோய் போன்றவை வராமல் தடுக்கும். இப்படியாக, எண்ணெய்க் குளியலால் பெறக்கூடிய பலன்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். நவீன அறிவியல் ஆராய்ச்சிகளும் இவற்றை உறுதி செய்கின்றன.
எப்படிக் குளிக்க வேண்டும்?
`நாள் இரண்டு, வாரம் இரண்டு’ என்பது சித்தர்கள் வாக்கு. நாள் இரண்டு மலம் கழித்தல்; வாரம் இரண்டு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்துகிறது.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எப்படி அவசியமோ, அதேபோல முறைப்படிக் குளிப்பதும் அவசியமானது.
உதாரணமாக, எண்ணெயைத் தலையில் தேய்த்ததும் உடனடியாக ஷாம்புவால் தலையை அலசுவது என்பது எண்ணெய்க் குளியலே அல்ல. அதற்கென ஒரு சில வரையறைகள் உண்டு. அவற்றைப் பின்பற்றினால் மட்டுமே முழுப்பலனை அடையமுடியும்.
முதலில் உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்க்கவேண்டும். குறிப்பாக நவ துவாரங்களான கண், மூக்கு, காது, வாய், தொப்புள், ஆசனவாய் போன்ற இடங்களில் எண்ணெய் விட்டு சிறிதுநேரம் ஊற வைக்கவேண்டும். குறிப்பாக, உடல் உறுப்புகள், மூட்டு இருக்கும் இடங்களில் சற்று பொறுமையாக வட்ட வடிவில் தேய்க்கவேண்டும். இது மூட்டுகளுக்கு நெய்ப்புத் தன்மையைக் கொடுக்கும்.
10 முதல் 20 நிமிடம் வரை உடலில் எண்ணெய் ஊறியதும் குளிக்கலாம். குளிப்பதற்கு வெந்நீரும், தேய்ப்பதற்குச் சீயக்காய் சேர்ந்த பொடியும் பயன்படுத்தலாம். குளித்ததும் நன்றாகத் தலை மற்றும் உடலை உலர்த்த வேண்டியது அவசியம். எண்ணெயை முழுமையாக தேய்த்துக் குளிக்காவிட்டாலும் உச்சந்தலை, உள்ளங்கால், தொப்புள் ஆகிய மூன்று இடங்களிலாவது தேய்த்துக் குளிக்கலாம். எண்ணெய் தேய்த்த பிறகு மிதமான சூடுள்ள வெந்நீரில் குளிக்கவேண்டும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நாள்களாக சில நாள்கள் சொல்லப்படுகின்றன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.
எந்த எண்ணெய் நல்லது?
நம் ஊரில் நம் தட்பவெப்ப நிலையில் விளையக்கூடிய எள் எண்ணெய்யைத்தான் ‘நல்லெண்ணெய்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
‘தைலம்’ என்றால் வடமொழியில் ‘எண்ணெய்’ என்று பொருள்.
‘மூட்டு வலி, உடல் வலி உள்ளவர்கள் மிதமான சூட்டில் தினமும் நல்லெண்ணெயைத் தடவினால் மூட்டுகளில் வலி குறைவதுடன், பலப்படவும் உதவும்.

வறண்ட சருமம், சிறு புண்கள் போன்றவற்றுக்குத் தேங்காய் எண்ணெய் நல்ல பலன் தரும். சித்த மருத்துவர் ஆலோசனையுடன் நம் உடலுக்கு நலம் தரும் எண்ணெய்களையும் பயன்படுத்தலாம்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் சளி பிடித்துவிடும், காய்ச்சல் வரும் என்றெல்லாம் அச்சம் கொள்கிறார்கள். நீண்ட நாட்களாகவோ, ஆண்டுகளாகவோ எண்ணெய்க் குளியல் செய்யாதவர்கள் எண்ணெய்க் குளியல் செய்ய விரும்பும்போது ஆரம்பத்தில் இதுபோன்ற அறிகுறிகள் தோன்றலாம்; அதற்காகப் பயப்படத் தேவையில்லை.
ஆனால் அதற்கும் ஒரு வழிமுறைகளைத் தந்திருக்கிறார்கள் சித்தர்கள். அதாவது, நல்லெண்ணெயை ஒரு கரண்டியில் எடுத்து லேசாகச் சூடாக்கி அதனுடன் அரை டீஸ்பூன் புழுங்கலரிசி, வெள்ளைப்பூண்டு 2 பல், மிளகு 4, சிறிதளவு சீரகம் சேர்த்தால் பொரிந்துவிடும்.
அதன்பிறகு அந்த எண்ணெய்யை உடல் முழுவதும் கதகதப்பாக தேய்க்கலாம். இதனால் சளி, காய்ச்சல் தொந்தரவு வராது.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குளிப்பதற்கும் தைலங்கள் இருக்கின்றன. உடல் சூடானவர்களுக்கு சந்தனாதித் தைலம் மற்றும் சீரகத் தைலம், கபாலத்தில் நீர் கோத்திருந்தால் சுக்குத் தைலம், அரக்கு தைலம் எனக் குளியலுக்கென ஏராளமான தைலங்களை சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எண்ணெய்க் குளியல் நாளன்று தவிர்க்க வேண்டியவை!
எண்ணெய்க் குளியல் செய்யும்நாளில் உடல் இயக்கத்துக்கு நல்ல ஓய்வு தேவை. உடல் சூடு தணிந்திருக்கும் வேளையில் தயிர், பால், மோர், நீர்க் காய்கறிகள், திராட்சை, வாழைப்பழங்கள், குளிர்ந்த பானங்கள் போன்ற குளிர்ச்சி உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.
மேலும் மாமிசம், மது, புகையைத் தவிர்க்கவேண்டியது அவசியம். எளிதில் செரிமானமாகும் அரிசி உணவுகளையே அன்றைய தினம் சாப்பிடவேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளன்று பகல் தூக்கம் கூடாது. மிளகு ரசம் அருந்தலாம்.
எண்ணெய்க் குளியலின் பயன்கள்:
‘வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்குக் கொடு’ என்பது பழமொழி. ‘நோய் வந்து வைத்தியரிடம் சென்று செலவு செய்வதைவிட எண்ணெய்ப் பொருள்களைத் தயாரிக்கும் வியாபாரிகளிடம் எண்ணெய் வாங்கிக் குளித்து வந்தால் நோய்கள் அண்டாது’ என்னும் பொருள்பட சொல்லப்பட்டது.
எண்ணெய், தட்பவெப்ப நிலைக்கேற்ப உடல் சூட்டைப் பராமரிக்கும். உடல் சோர்வு நீக்கி நிம்மதியான உறக்கம் தரும்; சிரங்கு, புண் போன்ற சருமம் தொடர்பான நோய்களை நீக்கும்; எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடலிலுள்ள நச்சுகள் வெளியேறி உடல் நாற்றம் விலகும். சருமத்திலுள்ள ஈரத் தன்மையைப் பராமரித்து முகமும் உடலும் பொலிவு பெறச் செய்வதுடன் இளமையையும் தக்க வைக்கும்.
எப்படிக் குளிக்க வேண்டும்?
`நாள் இரண்டு, வாரம் இரண்டு’ என்பது சித்தர்கள் வாக்கு. நாள் இரண்டு மலம் கழித்தல்; வாரம் இரண்டு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்துகிறது.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எப்படி அவசியமோ, அதேபோல முறைப்படிக் குளிப்பதும் அவசியமானது.
உதாரணமாக, எண்ணெயைத் தலையில் தேய்த்ததும் உடனடியாக ஷாம்புவால் தலையை அலசுவது என்பது எண்ணெய்க் குளியலே அல்ல. அதற்கென ஒரு சில வரையறைகள் உண்டு. அவற்றைப் பின்பற்றினால் மட்டுமே முழுப்பலனை அடையமுடியும்.
முதலில் உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்க்கவேண்டும். குறிப்பாக நவ துவாரங்களான கண், மூக்கு, காது, வாய், தொப்புள், ஆசனவாய் போன்ற இடங்களில் எண்ணெய் விட்டு சிறிதுநேரம் ஊற வைக்கவேண்டும். குறிப்பாக, உடல் உறுப்புகள், மூட்டு இருக்கும் இடங்களில் சற்று பொறுமையாக வட்ட வடிவில் தேய்க்கவேண்டும். இது மூட்டுகளுக்கு நெய்ப்புத் தன்மையைக் கொடுக்கும்.
10 முதல் 20 நிமிடம் வரை உடலில் எண்ணெய் ஊறியதும் குளிக்கலாம். குளிப்பதற்கு வெந்நீரும், தேய்ப்பதற்குச் சீயக்காய் சேர்ந்த பொடியும் பயன்படுத்தலாம். குளித்ததும் நன்றாகத் தலை மற்றும் உடலை உலர்த்த வேண்டியது அவசியம். எண்ணெயை முழுமையாக தேய்த்துக் குளிக்காவிட்டாலும் உச்சந்தலை, உள்ளங்கால், தொப்புள் ஆகிய மூன்று இடங்களிலாவது தேய்த்துக் குளிக்கலாம். எண்ணெய் தேய்த்த பிறகு மிதமான சூடுள்ள வெந்நீரில் குளிக்கவேண்டும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நாள்களாக சில நாள்கள் சொல்லப்படுகின்றன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.
எந்த எண்ணெய் நல்லது?
நம் ஊரில் நம் தட்பவெப்ப நிலையில் விளையக்கூடிய எள் எண்ணெய்யைத்தான் ‘நல்லெண்ணெய்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
‘தைலம்’ என்றால் வடமொழியில் ‘எண்ணெய்’ என்று பொருள்.
‘மூட்டு வலி, உடல் வலி உள்ளவர்கள் மிதமான சூட்டில் தினமும் நல்லெண்ணெயைத் தடவினால் மூட்டுகளில் வலி குறைவதுடன், பலப்படவும் உதவும்.
அதிக உடல் சூடு, மூலம், மலச்சிக்கல் சார்ந்த பிரச்சனைகளுக்கு விளக்கெண்ணெய் தடவிக் குளிப்பது நல்ல பலன் தரும்.

வறண்ட சருமம், சிறு புண்கள் போன்றவற்றுக்குத் தேங்காய் எண்ணெய் நல்ல பலன் தரும். சித்த மருத்துவர் ஆலோசனையுடன் நம் உடலுக்கு நலம் தரும் எண்ணெய்களையும் பயன்படுத்தலாம்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் சளி பிடித்துவிடும், காய்ச்சல் வரும் என்றெல்லாம் அச்சம் கொள்கிறார்கள். நீண்ட நாட்களாகவோ, ஆண்டுகளாகவோ எண்ணெய்க் குளியல் செய்யாதவர்கள் எண்ணெய்க் குளியல் செய்ய விரும்பும்போது ஆரம்பத்தில் இதுபோன்ற அறிகுறிகள் தோன்றலாம்; அதற்காகப் பயப்படத் தேவையில்லை.
ஆனால் அதற்கும் ஒரு வழிமுறைகளைத் தந்திருக்கிறார்கள் சித்தர்கள். அதாவது, நல்லெண்ணெயை ஒரு கரண்டியில் எடுத்து லேசாகச் சூடாக்கி அதனுடன் அரை டீஸ்பூன் புழுங்கலரிசி, வெள்ளைப்பூண்டு 2 பல், மிளகு 4, சிறிதளவு சீரகம் சேர்த்தால் பொரிந்துவிடும்.
அதன்பிறகு அந்த எண்ணெய்யை உடல் முழுவதும் கதகதப்பாக தேய்க்கலாம். இதனால் சளி, காய்ச்சல் தொந்தரவு வராது.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குளிப்பதற்கும் தைலங்கள் இருக்கின்றன. உடல் சூடானவர்களுக்கு சந்தனாதித் தைலம் மற்றும் சீரகத் தைலம், கபாலத்தில் நீர் கோத்திருந்தால் சுக்குத் தைலம், அரக்கு தைலம் எனக் குளியலுக்கென ஏராளமான தைலங்களை சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எண்ணெய்க் குளியல் நாளன்று தவிர்க்க வேண்டியவை!
எண்ணெய்க் குளியல் செய்யும்நாளில் உடல் இயக்கத்துக்கு நல்ல ஓய்வு தேவை. உடல் சூடு தணிந்திருக்கும் வேளையில் தயிர், பால், மோர், நீர்க் காய்கறிகள், திராட்சை, வாழைப்பழங்கள், குளிர்ந்த பானங்கள் போன்ற குளிர்ச்சி உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.
மேலும் மாமிசம், மது, புகையைத் தவிர்க்கவேண்டியது அவசியம். எளிதில் செரிமானமாகும் அரிசி உணவுகளையே அன்றைய தினம் சாப்பிடவேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளன்று பகல் தூக்கம் கூடாது. மிளகு ரசம் அருந்தலாம்.
நடுவர் பேராசிரியர் சத்தியசீலன் “அவரின் குற்றச்சாட்டுகளை உண்மையாக இருக்கும் என நினைக்கிறேன்” என பேராசிரியர் அறிவொளியை நோக்கிக் கூறினார்.
ஒரு சமயம் திருச்சியில் பேராசிரியர் சத்தியசீலன் தலைமையில் ‘கர்ணன் குற்றவாளியா? இல்லையா?’ என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது.
குற்றவாளியே என பேராசிரியர் இராசகோபால் அவர்களும், மறுத்து பேராசிரியர் அறிவொளி அவர்களும் பேசினார்கள்.
கர்ணன் மீது வலுவாக நான்கு குற்றங்களை பேராசிரியர் இராசகோபால் சுமத்தினார்.
நடுவர் பேராசிரியர் சத்தியசீலன் “அவரின் குற்றச்சாட்டுகளை உண்மையாக இருக்கும் என நினைக்கிறேன்” என பேராசிரியர் அறிவொளியை நோக்கிக் கூறினார்.
பேராசிரியர் அறிவொளி எழுந்து, “உண்மையில் பலவிதம் இருக்கு நடுவர் அவர்களே...” என்றார்.
“புரியும்படி சொல்லுங்கள்.. அதென்ன பலவித உண்மை?” என்றார் நடுவர்.
“தெரியாத உண்மை இருக்கிறது, பொய்யான உண்மை இருக்கிறது, புரியாத உண்மை இருக்கிறது” என அடுக்கிக்கொண்டே போக...
“நிறுத்துங்கள் நிறுத்துங்கள்... இரண்டு உதாரணம் கூறுங்கள்” என்றார் நடுவர் சத்தியசீலன்.
“நடுவர் அவர்களே, உலகத்திலேயே மனிதருக்கு ஏற்படும் வலிகளில் வேதனையான வலி எது தெரியுமா...?”
“பிரசவ வலி தான்...”
“தங்களுக்கு அந்த வலி ஏற்பட்டிருக்கிறதா..?” எனக்கேள்வி எழுப்ப, சங்கடத்துடன் புன்னகை புரிந்தவாறே, “இல்லை.. கேள்விப்பட்டது தான்” என்றார்.
அப்படியெனில், “இதுதான் தெரியாத உண்மை” என்றார். கூட்டத்தில் கரவொலி வானை விளந்தது.
அடுத்து, “உலகில் இரண்டு மடங்கு நீரும், ஒரு மடங்கு நிலமும் இருக்கிறது என கூறுகின்றனர்... இல்லையா?”...
“ஆமாம்...”
“இப்ப நீங்க, கடலில் குதிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்...”
‘நானா...’
“சரி! நாமிருவரும் என வைத்துக்கொள்வோம். நீருக்கடியில் போக, போக என்ன இருக்கிறது...?”
“நீர் தான்...”
“நீரின் அடியில் என்ன இருக்கிறது?”
“தரை இருக்கிறது...”
“அங்கேயும் நிலம் தானே இருக்கு...?”
“ஆமாம்...”
“அப்போ எப்படி இரண்டு பங்கு நீரும், ஒரு பங்கு நிலமும் இருக்கிறது என்று சொல்வது சரியாகும்...? இதுதான் பொய்யான உண்மை” என்றாரே பார்க்கலாம், அடக்கமாட்டாத சிரிப்புடன் “போதும் போதும்... வழக்காடுங்கள்“ என்றார் நடுவர் சத்தியசீலன்.
-முரளி வெங்கடரமணி
இனி அடுத்த கட்டப் பரிணாமம் எப்படி இருக்கும்? தெரியாது என்று ஒரே வார்த்தையில் டார்வின் சொல்லி விட்டார். ஆனால் சித்தர்கள் அந்த பரிணாமத்தை அடைந்துள்ளார்கள்.
சார்லஸ் டார்வின் பரிணாமக் கொள்கை என்று கூறுவது உயிரிகளின் உடல்களில் உள்ள உறுப்புகள் எவ்வாறு படிப்படியாக முன்னேறி புதிய புதிய உறுப்புகள் தோன்றின என்ற வரலாறு. சுருக்கமாகச் சொன்னால் ‘உறுப்புகளின் பரிணாமம்’.
தொல்காப்பியனும், திருவள்ளுவரும் கூற வந்தது அறிவுநிலைப் பரிணாமம். இதன் மறுதலையே சித்தர்கள் கூறும் ‘வாசிப் பரிணாமம்’.
அதாவது ஒவ்வோர் அறிவு நிலைக்கும் ஏற்ப ஒவ்வொரு விதமான காற்றும், அதை உட்கிரகித்து அதற்கு உள்ளிருக்கும் பிராண சக்தியை உயிருக்கு ஊட்டும் தனித்தனி விதமான சுவாச உறுப்புகளும் உண்டு. அவை பரிணாம வரலாற்றில் தேவைக்கேற்பத் தோன்றும். இது ஓர் உண்மை.
மற்றோர் உண்மை பிராண வாயு என்ற ஆக்ஸிஜன் வேறு, பிராண சக்தி வேறு. இந்த இடத்திற்கு நவீன அறிவியல் இன்னும் வரவில்லை.
ஒவ்வோர் உயிரியின் அறிவு நிலைக்கேற்பவே அதன் சுவாச முறை அமையும் என்பதே சித்தர்கள் கண்ட பரிணாமக் கொள்கை. உயிர் வாழ்வதும், நிலைப்பதும் ‘சித் பிராணன்’ என்ற பிரபஞ்ச ஆற்றலால். இது பிரபஞ்சத்தில் இல்லாத இடமில்லை. ஒவ்வோர் அணுவையும் உள்ளிருந்து இயக்குவது இந்த ஆற்றல்தான். இதை நேரடியாக எடுத்துக்கொள்ள உயிரிகளுக்குத் தெரியவில்லை. எடுத்துக்கொள்ளத் தெரிந்து கொள்பவனுக்குப் புறத்திலுள்ள காற்று என்ற ஊடகம் தேவையில்லை. அப்போது அவன் சித்தன் ஆகிறான். அந்நிலையே பரிணாமத்தின் இலக்கு. அதை நோக்கியே கடந்த 40 கோடி ஆண்டுகளாக உயிரிகள் பயணம் செய்கின்றன.
தாவரங்கள் கரியமில வாயுவை உட்கொண்டு, ஆக்ஸிஜனை வெளியேற்றுகின்றன. மற்ற பிராணிகள், மனிதன் உட்பட ஆக்ஸிஜனை உட்கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன. ஆனால் சில வித்தியாசங்களுடன் என்ன அந்தப் படிநிலைகள்? மீன் செதில்கள் மூலமாகத் தண்ணீரை உட்கொள்கிறது. பிறகு தண்ணீரிலுள்ள ஆக்ஸிஜனைப் பிரித்து, அதற்குள் இருக்கின்ற பிராண சக்தியைப் பிரித்தெடுத்து உட்கொண்டு உயிர் வாழ்கிறது. அதற்கான சுவாச அமைப்பு முறை அதன் உடலில் உண்டு. மீனை அதன் ஊடகமான தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து நிலத்தில் போட்டால், நிலத்தில் வீசும் காற்றிலிருந்து ஆக்ஸிஜனைப் பிரித்து எடுத்துக் கொள்ள முடியாமல் உடனே இறந்து விடும். மீன் ‘சித் பிராண சக்தி’யிலிருந்து 2 படி நிலைகள் விலகி இருக்கிறது.
பரிணாமத்தில் அடுத்து வருவன தவளை, முதலை போன்ற உயிரிகள். இவை நீர், நிலம் என்ற இரண்டு ஊடகங்களிலும் வாழக் கற்றுக் கொண்டவை. இவற்றை ‘இரு ஊடக உயிரிகள்’ என்பர்.
இவை முதலில் நீரிலிருந்து ஆக்ஸிஜனைப் பிரித்து அதிலிருந்து பிராண சக்தியை, பிரித்து உட்கொள்ளும். நிலத்திற்கு வந்தால் நேரடியாகக் காற்றை உட்கொண்டு அதிலிருந்து பிராணனைப் பிரித்து எடுத்துக் கொள்ளக் கற்றவை. இரண்டு விதமான சுவாச முறைகளுக்கும் ஏற்ப இவற்றின் சுவாச உறுப்புகள் அமைந்துள்ளன.
அடுத்து மனிதன் வருகிறான். நிலத்தில் உள்ள காற்றிலிருந்து மட்டும் ஆக்ஸிஜனைப் பிரித்து, அதிலுள்ள பிராண சக்தியை உட்கொள்கிறான். நீரில் இவனால் சுவாசிக்க இயலாது. இதுவரை பரிணாமம் வந்திருக்கிறது.
இனி அடுத்த கட்டப் பரிணாமம் எப்படி இருக்கும்? தெரியாது என்று ஒரே வார்த்தையில் டார்வின் சொல்லி விட்டார். ஆனால் சித்தர்கள் அந்த பரிணாமத்தை அடைந்துள்ளார்கள்.
மீனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஓர் இடை உயிரி தோன்றியது. அதன் பெயர் ‘இரட்டை ஊடக உயிரி’ என்று கண்டோம். அதேபோல் மனிதனுக்கும், சித்திநிலை அடைந்த சித்தனுக்கும் இடையில் ஓர் ‘இரட்டை ஊடகஉயிரி’ என்பவன் தான் ‘வாசியோகி’. ஒரே நேரத்தில் காற்றை சுவாசித்து வாழவும், காற்றை நீக்கி, நேரடியாக ‘சித் பிராணணை’ச் சுவாசித்து வாழவும் பயிற்சி செய்து வெற்றி கண்டவர்கள்.
பயிற்சி நிறைவுற்று, காற்று தேவையில்லை, எப்போதும் ‘சித்கலை’யே போதும் என்ற நிலையை அடைந்தவன் சித்தன். அவன் பிரபஞ்சத்தில் எங்கும் வாழலாம். இச்சுவாசம் ‘கதி’ எனப்படும். இதை ஒளிச்சுவாசம் என்பர் சித்தர்கள். இதுவே சித்தர்களின் பரிணாமக் கொள்கை.
-சேலம் குப்புசாமி






