என் மலர்
கதம்பம்
முழுமையான பாப ஆத்மாக்களுக்குத் தகுந்த தாய், தகப்பன் கிடைப்பது மிகவும் கஷ்டம். அதுபோல் முழு புண்ணிய ஆத்மாக்களுக்கும் தகுந்த பெற்றோர்கள் கிடைப்பது கடினம்!
ஒரு பிறவிக்கும், மறுபிறவிக்கும் இடையில் ஏற்படும் அனுபவங்கள் ஒரு கனவுபோலத்தான். அப்பொழுது அது உண்மையைப்போலத் தோன்றும்.
ஆத்மா சொர்க்கத்தை அடைவது அல்லது நரகத்தை அனுபவிப்பது என்பது இந்தக் கனவு நிலையைக் குறிப்பிடுவதுதான். உண்மையில் சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை!
முழுமையான பாப ஆத்மாக்களுக்குத் தகுந்த தாய், தகப்பன் கிடைப்பது மிகவும் கஷ்டம். அதுபோல் முழு புண்ணிய ஆத்மாக்களுக்கும் தகுந்த பெற்றோர்கள் கிடைப்பது கடினம்! இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள ஆன்மாக்கள் நல்லதும், கெட்டதும் கலந்திருக்கின்றன. இந்த ஆன்மாவில் முற்பிறவியில் ஏற்பட்ட அனுபவங்கள் கருத்துக்கள், தீய மற்றும் நல்ல செயல்களின் பலன்கள் அனைத்தும் கரு வடிவில் அப்படியே பதிந்திருக்கின்றன.
அது மீண்டும் உடலை எடுக்கும் பொழுது அவை அனைத்தும் மெல்ல செயல்புரிய ஆரம்பித்துவிடுகின்றன.
நமக்கிடையே உள்ள ஒரு அங்குல இடைவெளியில் பல ஆன்மாக்கள் நிறைந்து கிடக்கின்றன!
ஒரு கெட்ட ஆன்மா ஒரு உடலுக்குள் பாய்வது எப்படி?
ஒருவன் மிகவும் பயந்த நிலையில் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது அந்த உடல் தன் ஆத்மாவைச் சுருக்கிக் கொண்டுவிடுகிறது. அந்த நிலையில் அந்த உடலின் சில பாகங்கள் வெற்றுத்தன்மையில் இருக்கின்றன.
அப்பொழுது நம்மைச் சுற்றியுள்ள கெட்ட ஆவிகள் ஒன்றோ அல்லது பலவோ அந்த உடலுக்குள் பாய்ந்துவிடுகிறது. ஆனால் தைரியமானவர்களிடம் இது நெருங்காது. ஏனெனில் அவர்களிடம் வெற்றிடம் ஏற்படாது.
ஒரு பயந்த ஆள் மிகவும் கீழான நிலையில் இருப்பதால் உயர்ந்த ஆன்மாக்கள் அந்த உடலுக்குள் புகாது. உயர்ந்த ஆன்மாக்கள் எப்பொழுதும் மேலான - உயர்ந்த நிலையில்தான் உலவிக் கொண்டிருக்கும். கீழான ஆத்மாக்கள்தான் கீழே உலவிக் கொண்டு தன் ஆசையைத் தீர்க்கத் துடித்துக்கொண்டிருக்கும்.
மாறாக ஞான ஆத்மா என்பது சுத்தமான உயிர்த்தன்மை. இந்த உயிர் மிகவும் மேலான நிலையை அடைந்து பிரபஞ்ச உயிர்த் தன்மையோடு கலந்துவிடுகிறது. இதற்கு மறுபிறவி கிடையாது. இது ஆசைகளற்ற ஆத்மா அல்லது உயிர்தன்மை.
மற்றவை அனைத்தும் மறுபிறப்பு எடுத்துத்தான் தன் உலக ஆசைகளைத் துறக்க வேண்டும்.
இறைவன் ஒவ்வொரு வேளைகளிலும், நம் எல்லோருக்காகவும், ஏதோ ஒரு வாசல் கதவை திறந்து வைத்துக் கொண்டே காத்திருக்கிறான்.
‘தூக்குத் தூக்கி’-சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள்.
சிவாஜிக்கு பின்னணி பாடுவதற்காக, அப்போது பிரபலமாக விளங்கிய பாடகர் திருச்சி லோகநாதனிடம் கேட்டபோது அவர் சொன்னார்:-
“ஒரு பாடலுக்கு ஐநூறு ரூபாய். எட்டும் பாடுவதற்கு நான்காயிரம்.”
“நாலாயிரமா ? கொஞ்சம் குறைச்சுக்கலாமே..?” என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் தயக்கத்தோடு கேட்க,
“அப்படி ரேட்டைக் குறைத்துக் கொண்டு என்னால் பாட முடியாது. வேணும்னா உங்களுக்கு ஒரு வழி சொல்கிறேன். மதுரையிலிருந்து சௌந்தரராஜன் என்கிற ஒரு பாடகர் புதுசா வந்திருக்கிறார். அவரை வேணும்னா கேட்டுப் பாருங்கள்.”
சௌந்தரராஜனா... யார்அவர்... எங்கே இருக்கிறார்?
திருச்சி லோகநாதனின் அந்த ஆலோசனையைக் கேட்டு ஆளுக்கு ஒரு பக்கம் தேடி, அடுத்த நாளே தொகுளுவ மீனாட்சி அய்யங்கார் சௌந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்.ஸைப் பிடித்தார்கள்.
“எட்டுப் பாடல்களையும் நீங்களே பாடுங்கள். மொத்தமாக இரண்டாயிரம் ரூபாய்தான் சம்பளம் தர முடியும். ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா?” என்று தயாரிப்பு தரப்பு கேட்க,
ஒரு கணம் சிந்தித்தார் டி.எம்.எஸ்.
இறைவன் ஒவ்வொரு வேளைகளிலும், நம் எல்லோருக்காகவும், ஏதோ ஒரு வாசல் கதவை திறந்து வைத்துக் கொண்டே காத்திருக்கிறான்.
டி.எம்.எஸ். புரிந்து கொண்டார். ஒரு கணம் கூட தாமதிக்காமல் உடனே சம்மதித்தார்.
காரணம், அந்த காலகட்டங்களில், மதுரை பஜனை மடங்களில் பாட்டுப்பாடி, அதற்குச் சன்மானமாக காப்பி, காராச்சேவு, பக்கோடா மற்றும் இரண்டு ரூபாய் வாங்கிய காலம் அது.
ஆனால் டி.எம்.எஸ்.சின் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. “தூக்குத் தூக்கி” கதாநாயகன் சிவாஜி சொன்னார்:
“பராசக்தி”யில் குரல் கொடுத்த சி.எஸ்.ஜெயராமன் தான் எனக்குப் பொருத்தமாக இருக்கும். அந்த ஜெயராம பிள்ளையைப் பாடவைக்காமல், நேற்று வந்தவரை எல்லாம்..” என்று அதிருப்தியுடன் சிவாஜி இழுக்க...
பார்த்தார் டி.எம்.எஸ்..! சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் சிவாஜியிடம் ஒரு சவால் விட்டார்.
“நான் பாடுவதை ஒலிப்பதிவு செய்து கேளுங்கள். பிடிக்கவில்லை என்றால் நான் விலகிக்கொள்கிறேன்.”
அசராமல் டி.எம்.எஸ். சொன்னதை, அரைகுறை மனதோடு ஒப்புக்கொண்டார் சிவாஜி.
மளமளவென்று மூன்று பாடல்களை ஒலிப்பதிவு செய்து சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்.
சிவாஜிக்கு ஒரே சந்தோஷம். “அட, என் குரல் மாதிரியே பாடி இருக்காரே. நல்லா வந்திருக்கு. எல்லாப் பாட்டையும் நீங்களே பாடுங்க...”
‘பெண்களை நம்பாதே’, ‘ஏறாத மலைதனிலே’ என தூக்குத்தூக்கியின் அத்தனை பாடல்களையும் டி.எம்.எஸ்ஸே பாடி அமர்க்களப்படுத்தினார்.
டி.எம்.எஸ். வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவத்தை அதிர்ஷ்டம் என்பதா? தைரியம் என்பதா? ஒன்று மட்டும் உறுதி. அதிர்ஷ்டம் எப்போதும் தைரியசாலிகளை மட்டுமே காதலிக்கிறது.

-ஜான்துரை ஆசிர் செல்லையா
புதிதாக குழந்தை உண்டாகி இருப்பவளை இன்றும் கிராமத்தில் அவளுக்கு புள்ளை சனிச்சிருக்கு என்று சொல்வதை கேட்கலாம்.
“சனி நீராடு” என்றால் என்ன? சனிக்கிழமை குளிக்கணும் என்ற பொருள் அல்ல. சனி நீராடு என்பது கிழமையை குறிப்பதல்ல. சனித்த நீரில் நீராடு என்பதாகும்.
சனித்த.. என்பதற்கு புதிதாய் உருவாகிய நீர். ஓடிக் கொண்டேயிருக்கும் ஆற்று நீரும் ஊற்றாகப் பொங்கும் ஊற்று நீரும் புதிதாய் சனித்துக்கொண்டே இருக்கும் நீர். அதில் பிராண ஆற்றல் மிகுந்திருக்கும். இதில் குளிப்பது தான் ஆரோக்கியம்.
குளம் குட்டைகளில் பல நாட்கள் தேங்கி கிடக்கும் தண்ணீரும், பல நாட்கள் தண்ணீரை இறைக்காத கிணத்துத் தண்ணீரும் குளிக்க உகந்ததன்று.
நீர் சம்பந்தமான நோய்கள் வரலாம் என்பதால் அவைகளில் குளித்தல் கூடாது என்றே அன்றே சொல்லிவிட்டாள் ஔவை. புதிதாக குழந்தை உண்டாகி இருப்பவளை இன்றும் கிராமத்தில் அவளுக்கு புள்ளை சனிச்சிருக்கு என்று சொல்வதை கேட்கலாம்.

- பரிமேலழகர் பாரி
பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் போது, மூளையின் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய நரம்புகள் தூண்டப்படுகிறதாம். இதனால்தான், பெண்மணிகள் ஒலித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்குப் போகவே சித்தார்த்துக்குப் பிடிக்க இல்லை. வீட்டில் என்ன நடக்குமோ என்ற பயம். அதுக்குக் காரணம், அன்றுதான் அரையாண்டுத் தேர்வு முடிவுகள் வெளியாகிருந்தன. பத்தாவது படிக்கும் சித்தார்த், மிகவும் குறைவாக மார்க் வாங்கியிருந்தான். அதே நேரத்தில், அன்றைய தினமே 8-ம் வகுப்பில் படிக்கும் அவனுடைய தங்கை சுமதிக்கும் மதிப்பெண் பட்டியல் கொடுத்திருந்தார்கள். அவள்தான் வகுப்பிலேயே முதல் மதிப்பெண். இதைக்கேட்டதும், சித்தார்த்துக்கு இன்னும் பயம் அதிகமாகி விட்டது.
இவன் நினைத்தது போலவே, வீட்டில் அப்பாவும் அம்மாவும் அவனை திட்டித் தீர்த்து விட்டார்கள். சுமதிக்கு நாங்க சொல்லிக்கொடுக்கறதே இல்லை. அவளே படிச்சு எப்படி மார்க் எடுத்திருக்கா பாரு. நீயும் இருக்கியே. நானும் அம்மாவும் ஆபீஸ்ல இருந்து வந்து உனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்குறோம். ஸ்பெஷல் டியூஷன் வேற போற, அப்படி இருந்தும் இப்படி மார்க் வாங்கியிருக்கியே. நீயெல்லாம் எப்படிப் படிச்சி பாஸ் பண்ணப்போறியோ தெரியல. இதுபோன்ற சம்பவங்கள் வீட்டுக்கு வீடு நடப்பது உண்டு.
ஒவ்வொரு ஆண்டும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தைப் பார்த்தால், ஆண்களைவிட பெண்களே அதிக சதவீதத்தில் தேர்ச்சி பெற்றிருப்பதைப் பார்க்கலாம். ஆண் குழந்தைகள் பொறுப்பின்றி ஊர் சுற்றுவதால், தேர்ச்சி விகிதம் குறைவு என்று கூறினாலும், பெண்கள் அதிக மதிப்பெண் பெற இயற்கையும் அவர்களுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். எப்படி?
மூளையை முன் மூளை, நடு மூளை, பின் மூளை என்று பிரித்திருக்கிறார்கள். இதில் முன் மூளையை செரிபெரல் கார்டெக்ஸ் என்பார்கள். இப்பகுதியில்தான் பார்ப்பவை, படிப்பவை எல்லாம் நன்கு பதியத் தொடங்குகின்றன. பெண்களுக்கு இந்தப் பகுதி ஆண்களைவிடவும் சற்று தடிமனாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுலபமாகச் சொன்னால், தடிமனான காகிதத்தில் எழுதியது, மெல்லிய தாளில் எழுதியதைவிட அழுத்தமாகவும், அதிக நாளும் இருக்கும். அதுபோல், பெண்களின் ஞாபக சக்தியும் ஆண்களை விட சற்று அதிகமே.
அதேபோல், வளவளவென்று பெண்கள் பேசிக்கொண்டிருப்பதற்கும் அந்த செரிபெரல் கார்டெக்ஸின் அதிகப்படியான தடிமன் தான் காரணம். ஆண்களால் பெண்களைப்போல் வார்த்தைகளை அதிகம் உபயோகப்படுத்த முடியாதாம். கிட்டத்தட்ட பெண்கள் ஒரு நாளில் பயன்படுத்தும் வார்த்தைகளில் பாதி அளவை மட்டுமே ஆண்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.
சரி, ஆண்-பெண் மூளைக்கு இடையே உள்ள சில முக்கியமான வித்தியாசங்களைப் பார்ப்போமா?
ஆண்கள் மூளை, பெண்கள் மூளையைவிட அளவில் சற்று பெரிதுதான். ஆனாலும், வயது ஏற ஏற பெண் மூளையைவிட சுருங்கி விடுகிறது.
சிந்திக்கும் போது பெண்களே அதிக அளவு மூளைத் திறனை உபயோகிக்கின்றனர்.
மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் இருக்கும் இன்ஃபீரியர் பரைடல் லாபுலே என்ற இடம், பெண் மூளையைவிட ஆணுக்கு சற்று அகன்று இருக்கும். இதனாலேயே அறிவியல் மேதை, கணித மேதை என்று பல ஆண்கள் புகழ்பெற முடிந்தது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
சாதாரணமாக ஓர் ஆணுக்கு 15 நிமிடத்துக்கு ஒரு முறை பாலுணர்வு தோன்றும். ஆனால், ஒரு பெண்ணுக்கோ ஒரு நாளில் ஒரு முறையோ அல்லது இரண்டு நாள்களுக்கு ஒரு முறையேதான் தோன்றுமாம்.
பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் போது, மூளையின் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய நரம்புகள் தூண்டப்படுகிறதாம். இதனால்தான், பெண்மணிகள் ஒலித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
தொந்தரவு தரக்கூடிய சிறு ஒலியைக்கூட, ஆண் குழந்தைகளைவிட பிறந்த பெண் குழந்தைகள் விரைவில் கண்டுகொள்ளும். அதனால்தான், கணவனின் கடுமையான குறட்டைச் சத்தத்துக்கு இடையிலும் குழந்தையின் சிறு சிணுங்கலைக்கூட ஒரு பெண்ணால் கண்டுகொள்ள முடிகிறது.
ஒரு பெண்ணை 20 விநாடிகள் கட்டிப்பிடித்திருந்தாலே, ஆக்ஸிடாஸின் என்ற ரசாயனப் பொருள் அவள் மூளையில் சுரந்துவிடும். அதனால், கட்டிக்கொண்டு இருந்தவரின் மீது அந்தப் பெண்ணுக்கு அதீத நம்பிக்கை வந்துவிடுமாம்.
பெண்களைவிட ஆண்கள் மிகக் குறைந்த வார்த்தைப் பிரயோகங்களையே உபயோகப்படுத்துகிறார்கள் என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள்.

-டாக்டர் ஏ.வி. ஸ்ரீனிவாசன்
“இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சி உருவானதே ஒரு சுவாரசியமான சம்பவம். அது குறித்து தென்கச்சி கோ. சுவாமிநாதன் கூறியதை காது கொடுத்து கேட்போமா....
மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற தென்கச்சி கோ.சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல் சென்னை வானொலியில் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஒலிபரப்பானது.
இந்த “இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சி உருவானதே ஒரு சுவாரசியமான சம்பவம். அது குறித்து தென்கச்சி சுவாமிநாதன் கூறியதை காது கொடுத்து கேட்போமா....
சென்னை வானொலியில் வேலை பார்த்த சமயம் ஒரு நாள் கேன்டீனுக்கு சாப்பிட சென்றேன். அப்போது சக ஊழியர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது “இனி நீங்கள் ரேடியோவுல சிரமப்பட்டு நிகழ்ச்சிகளை தயார் செய்ய வேண்டாம். ஏனா தொலைக்காட்சி வந்து விட்டது. எல்லாரும் அதைத்தான் பார்க்கப் போறாங்க... நாம ஒண்ணும் அதிகமா சிரமப்பட வேண்டாம்... என்று வேடிக்கையா சொல்லிக்கிட்டு இருந்தேன்.
இது எப்படியோ எங்கள் இயக்குனர் காதுக்கு போயிட்டுது. உடனே அவர் என்னைக் கூப்பிட்டு ‘இது மாதிரி பேசிக்கிட்டு இருந்தியாமே’ என்றார். ஆமா சார் என்றேன்.
நாளையில இருந்து தினமும் காலையில ஒரு ஐந்து நிமிசம் நேரத்தை ஒதுக்கி தர்றோம். ஜனங்களுக்கு உபயோகமான ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லுனு கூறினார்.
தவளை தன்வாயால கெடும்னு சொல்லுவாங்களே... அப்படி ஆயிட்டுது என்னோட நெலம...
அவர், ஆரம்பிக்கும் போதே “இன்று ஒரு தகவல்”ன்னு ஆரம்பிக்கலாம், தினமும் ஐஞ்சி நிமிஷம் பேசுன்னார்.
அப்போது விவசாய ஒலிபரப்பின் பொறுப்பாளராகவும் நான் இருந்ததால், தினமும் இந்த நிகழ்ச்சியை தயாரிப்பது சிரமாக இருக்கும். அதனால வாரத்துக்கு ஒரு நிகழ்ச்சின்னு வச்சிக்கலாமே என்றேன்.
அதற்கு அவர், இல்ல இல்ல... நீயே தொடர்ந்து சொல்ல வேண்டாம். ஒரு மாதம் சொன்னால் போதும். அடுத்த மாசத்துக்கு வேறொரு பொறுப்பாளரை நியமிச்சுடலாம்... அப்படின்னு சொல்லிதான் அந்த பொறுப்பை எங்கிட்ட ஒப்படைச்சார்.
1988 ஜூலை முதல் தேதி இதை தொடங்கினோம். ஜூலை 30-ந்தேதி கடைசி நேரத்தில இயக்குனரிடம் கிட்ட போய் சொன்னேன். என்னோட கடமை முடிஞ்சுது. அடுத்தவரை ஏற்பாடு செய்யுங்கள் என்றேன்.
அப்ப அய்யய்யோ... நான் மறந்துட்டேனே. திடீர்னு இந்த நிகழ்ச்சியை வேறு ஒருத்தர் கிட்ட ஒப்படைச்சோம்னா அவர் சிரமப்படுவார். அதனால ஆகஸ்ட் மாதமும் நீயே சொல்லிக்கிட்டு வா... செப்டம்பர்ல மாத்திக்கிடலாம் என்றார்.
வேறு வழியில்லாததால் ஒத்துக்கிட்டு வந்தேன். இந்த முறை ஆகஸ்ட் 15-ந்தேதியில் இருந்தே எனக்கு சுதந்திரம் கொடுங்க, எனக்கு சுதந்திரம் கொடுங்கன்னு... சொல்ல ஆரம்பிச்சேன்.
அவரு என்ன பண்ணினார்... 28-ந்தேதி வாக்கில் என்னை கூப்பிட்டு சிற்றுண்டி வாங்கி கொடுத்தார். ஒரு இயக்குனர் ஊழியருக்கு வாங்கி கொடுப்பது ரொம்ப ஆச்சரியம்.
எதுக்கு இப்படி வாங்கிக் கொடுக்கிறார் என்று யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.
வெளியில போகுற இடமெல்லாம் “இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சி நல்லா இருக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதனால நீயே இதைத் தொடர்ந்து பண்ணினா நல்லா இருக்கும்... அப்படின்னு சொல்லி தொடரதுக்காக அந்த ரெண்டு வடையும் ஒரு டீயும் வாங்கி கொடுத்தார்.
அந்த வடைக்கும் டீக்கும் நன்றியுள்ளவனாக இதுவரை 14 ஆண்டுகள் சொல்லிக்கிட்டு இருக்கேன்.
தொடர்ந்து சொல்ல சிரமமா இருக்கும்... நீ எப்ப வேண்டாம்னு சொல்லுறியோ அப்ப நிறுத்திக்கலாம் என்றார்.
நான் வேண்டாம்னு சொல்ற கட்டத்துக்கு வரும் போது அவர் டிரான்ஸ்பராகி சென்றுவிட்டார். அதனால அதையும் சொல்ல முடியல.
ஆரம்பத்துல இது சுமையா தெரிஞ்சது. ஏனா ஒரே நிகழ்ச்சியை தினந்தோறும் சொல்ல வேண்டி இருக்குதுன்னு... அப்புறம் அது சுகமா போச்சு. ஏன்னா அது பழக்கப்பட்டு போச்சு.
அதுக்கு இடையில பார்வையற்றவர்கள் எல்லாம் என்னை தேடிவர ஆரம்பிச்சாங்க. அது யாரு இன்று ஒரு தகவல் சொல்றவர்னு? என்னை தடவி பார்க்கிறது... முகத்தை தடவி பார்க்கிறது... அப்படி ஒரு ஆர்வம் அவர்களுக்கு.
என்னனு கேட்டா, எங்களுக்கு பல புத்தகங்களை படிக்கிறதுக்கு சாத்தியமில்ல. எங்களுக்காக நீங்க பல புத்தகங்கள படிச்சுட்டு சொல்லுறீங்க... அதனால இதை நிறுத்திடாதீங்க சார். தொடர்ந்து நடத்தனும்னு சொல்லி... அவர்கள் தான் எனக்கு ஊக்கம் கொடுத்தாங்க. அதனால இதனை உற்சாகத்தோடு செய்ய ஆரம்பிச்சிட்டேன்.

-தொகுப்பு கோ.வசந்தராஜ்
அறிவியல் என்பது ஒன்று என்பதாக இருக்கிறபோது... அகத்தைப் பற்றிய அறிவியலான மதமும் ஒன்றாகத் தானே இருக்க முடியும்?
கடவுள் இந்த உலகத்தைப் படைத்துவிட்டு பூமியிலே ஓர் இடத்தில் தங்கிவிட்டார் .
அப்பொழுது தான் அவர் செய்த தவறு அவருக்கே புரிந்தது. தினம் ஏதாவது புகார் கொடுக்க மனிதர்கள் வந்து கொண்டே இருந்தார்கள் .
இரவு, பகல் என்ற வித்தியாசம் இல்லை. சில பேர்கள் வந்து, என் பயிர் காய்கிறது. இன்று எனக்கு மழை தேவை.
அடுத்து சிலர் வந்து இன்று மழை கூடாது. அது என் வேலையை பாதித்து விடும். நான் களிமண் பானை செய்து சுடுகிறேன். இப்படி நிறைய புகார்கள் முரண்பாடாக வந்து கொண்டே இருந்தது.
கடவுள், கிட்டத்தட்ட பைத்திய நிலைக்கே சென்றுவிட்டார். அவருக்குச் சரியான தூக்கமும் இல்லை. எல்லாருடைய ஆசைகளையும், தேவைகளையும் அவரால் நிறைவேற்ற முடியவில்லை. ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருந்தது.
பிறகு ஒரு நாள், தன் மந்திரி சபையைக் கூட்டி, என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்.
அதில் ஒரு சிலர், இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. நீங்கள் இமயமலைக்குச் சென்றுவிடுங்கள். அங்கு வந்து யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள்.. என்றார்கள் .
கடவுள் சிறிது யோசனை செய்து, அது சரி வராது. எட்மண்ட் ஹில்லாரியும், டென்சிங்கும் அங்கு வர இருக்கிறார்கள். பிறகு ஒவ்வொருவராக அங்கேயும் வர ஆரம்பித்து விடுவார்கள். வேறு யோசனை சொல்லவும் என்றார் .
அடுத்து ஒரு சிலர், சந்திரனுக்குச் செல்லலாமே? என்றார்கள். கடவுள், அதற்கும் அமெரிக்காவும், ரஷ்யாவும் ஆளைத் தயார் பண்ணிக் கொண்டிருகிறது என்றார்.
சரி எதாவது தொலைதூர நட்சத்திரத்திற்குச் செல்லலாம் என்றார்கள் மற்றும் சிலர்..
கடவுள், இதெல்லாம் நிரந்தர தீர்வு ஆகாது. எனக்கு நிரந்தரமாக இந்த மனிதத் தொல்லையில் இருந்து விடுபட வேண்டும் என்றார்.
பிறகு, கடவுளுடைய பழைய வேலையாள் வந்து, மெல்ல அவர் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தார். உடனே கடவுள் முகம் மலர்ந்து, ரொம்ப சரி அப்படித்தான் செய்ய வேண்டும் என்று, ஆமோதித்தார்.
அந்தக் கிழவன் சொன்னது என்னவென்றால், மனிதனால் அடைய முடியாத இடம் ஒன்று இருக்கிறது. அது வேறு எங்கேயும் இல்லை. அவனுக்குள்ளேயே இருக்கிறது. அவனுக்குள் மறைந்து கொள்ளுங்கள் என்பதே.
அதிலிருந்து கடவுள் அங்கேயேதான் மறைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மனிதன் நினைக்காத இடம் அது தான். ஆகவே, மிக அருகில் உள்ளதை, உங்கள் அகங்காரம் ஏறெடுத்தும் பார்க்காது. அதில் அதற்கு சுவாரசியமும் இல்லை.
ஆகவேதான் நீங்கள் உண்மையை தவற விட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். கடவுளை கண்டடைய உள்ளே திரும்புங்கள். விஞ்ஞானமும் மதமும் விஞ்ஞானத்தைப் போலவே உண்மையான மதமும் ஒன்றே ஒன்று மட்டுமே இருக்க முடியும்.
அறிவியல் என்பது ஒன்று என்பதாக இருக்கிறபோது... அகத்தைப் பற்றிய அறிவியலான மதமும் ஒன்றாகத் தானே இருக்க முடியும்?
அறிவியலானது புறப்பொருள் உலகினை ஆராய்ந்து அறிகிறது.
மதமானது அகப்பொருள் உலகினை ஆராய்ந்து அறிகிறது.
அவைகளின் வேலை ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. வெறுமனே அவைகளின் திசைகள் மற்றும் பரிமாணங்கள் மட்டுமே வேறுபட்டு இருக்கின்றன.
இன்னும் அதிக மெய்ஞானம் அடைந்துவிட்ட ஒரு உலகில் மதம் என்னும் இப்படிப்பட்ட விஷயம் இருக்காது.
அதில் புறப்பொருள் விஞ்ஞானம் மற்றும் அகப்பொருள் விஞ்ஞானம் ஆகிய இரண்டு விஞ்ஞானங்கள் மட்டுமே இருக்கும். புறப்பொருள் விஞ்ஞானம் பொருள்களோடு செயலாற்றுகிறது.
அகப்பொருள் விஞ்ஞானம் ஆன்மாவோடு, உயிர் உணர்வோடு செயலாற்றுகிறது.

எல்லாம் இறைவன் சித்தம். எது நடந்தாலும் அது நன்மைக்காகத் தான் நடக்கிறது என்ற தத்துவத்தை ஏற்றுக் கொண்டால் அமைதியாக வாழ முடியும். இல்லாவிட்டால் மன நிம்மதி கிட்டாது.
வாழ்க்கையே மூன்று வகையான போக்குகளைக் கொண்டதுதான். அந்த மூன்றையும் எதிர்பார்த்து அந்த மூன்றில் எதுவந்தாலும் ஏற்கத் தயாராக இருந்துவிட்டால் நிம்மதிக்குக் குறைவே இராது.
இந்த அற்புதமான கருத்தை தாம் எழுதிய ‘நல்வழி’ என்ற நூலில் ஒரு வெண்பாவில் சொல்கிறார் அவ்வையார்.
நாம் ஒன்றை எதிர்பார்க்கிறோம். அது தொடர்பாக மூன்று விஷயங்கள் நேரலாம். ஒன்று அது நாம் விரும்பியவாறே நடக்கலாம். இன்னொன்று அது நடக்காமல் போகலாம். மூன்றாவதாகவும் ஒன்று இருக்கிறது. நாம் முற்றிலும் எதிர்பாராத வேறு ஏதோ ஒன்று திடீரென்று நடக்கலாம்.
எல்லாம் இறைவன் சித்தம். எது நடந்தாலும் அது நன்மைக்காகத் தான் நடக்கிறது என்ற தத்துவத்தை ஏற்றுக் கொண்டால் அமைதியாக வாழ முடியும். இல்லாவிட்டால் மன நிம்மதி கிட்டாது.
இந்த அரிய கருத்தைச் சொல்லி, நல்வழி காட்டும் அவ்வையாரின் ‘நல்வழி’ நூலில் வரும் வெண்பா இதோ:
‘ஒன்றை நினைப்பின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அது வரினும் வந்தெய்தும் ஒன்றை
நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்!’
அண்மையில் ஒரு திருமணம் நடந்தது. பலப்பல திருப்பங்களோடு நடந்த விந்தையான திருமணம் அது. ஒரு பெண் ஒருவனைக் காதலித்தாள். அவனையே மணந்து கொள்ள விரும்பினாள். அவனும் அவளை விரும்பினான். அந்தக் காதலைப் பெற்றோர் ஏற்று, ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் அது.
ஆனால் அந்த மணமகனுக்குத் தெரியாது, இன்னொருவன் அவளை விரும்பினான் என்பது! ஆனால் அந்த இன்னொருவன் காதலை அவள் நிராகரித்து விட்டாள்.
அவளால் நிராகரிக்கப்பட்டவனும் அவள்மேல் ஒருதலைக் காதல் கொண்டவனுமான அந்த இளைஞனும் அந்தத் திருமணத்திற்கு வந்திருந்தான்.
அவனைப் பற்றி மணநாளன்று அறிந்ததும் மணமகனுக்கு சந்தேகம். அவனும், தான் மணந்து கொள்ளப் போகிறவளும் எப்படியெல்லாம் பழகியிருப்பார்களோ...? அந்த வீண் சந்தேகத்தை முன்னிலைப்படுத்தி, மணமகள் என்ன விளக்கங்கள் சொல்லியும் கேட்காமல், அவளை நிராகரித்து மணமாலையைக் கழற்றி வைத்துவிட்டு மணமேடையிலிருந்து விலகி பார்வையாளர்களோடு உட்கார்ந்துவிட்டான் அந்த மணமகன்!
மணமகளின் விழிகளில் கண்ணீர். பலர் முன்னிலையில் தனக்கு நேர்ந்த அவமானம் அவளை வருந்தச் செய்தது. முக்கியமாகத் தன் பெற்றோருக்கு நேர்ந்த சங்கடமும் துயரமும் அவளைப் பெரிதும் வருத்தின.
ஆனால் அவள் கதறி அழுது ஒரு சராசரிப் பெண்ணைப் போல அந்த மணமகனைக் கெஞ்சத் தயாராக இல்லை. இப்போது சுயமரியாதை நிறைந்த அந்த மணமகளின் மனநிலையில் நியாயமான இரண்டு எண்ணங்கள் எழுந்தன.
ஒன்று மணமேடை வரை வந்து தன்னை நிராகரித்தவனை அவள் மன்னிக்கத் தயாராக இல்லை. அது இயல்பானதுதான். எந்தப் பெண்ணுமே அப்படித்தான் நினைப்பாள்.
இன்னொன்று தன்னை ஒருதலையாகக் காதலித்தவன்தான் இந்தத் திருமணம் நின்று போனதற்குக் காரணமாக இருக்க வேண்டும் என அவள் சரியாகவே ஊகித்தாள்.
இல்லாததும் பொல்லாததுமான வதந்தி அவனால் பரப்பப்பட்டிருக்க வேண்டும். எனவே அவனையும் அவள் மணக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை. அவன்மேல் அவளுக்குக் காதலும் இல்லை.

நடந்த அனைத்தையும் அறிந்த அவன், தனக்கு மணமகளைப் பிடித்திருப்பதாகவும் மணமகளுக்கும் தன்னைப் பிடித்திருந்தால், தான் அவளை அங்கேயே அப்போதே மணந்துகொள்ளத் தயார் என்றும் அறிவித்தான்.
மணமகள் தன்னை நன்றாகப் புரிந்துகொண்டு இக்கட்டிலிருந்து தன்னைக் காப்பாற்ற முன்வந்த அவனையே தான் விரும்புவதாகச் சொல்லி சம்மதித்தாள். அந்த மூன்றாமவனோடு அவள் திருமணம் விமரிசையாக நடைபெற்றது. தான் விரும்பியவன், தன்னை விரும்பியவன் ஆகிய இருவரையும் ஓர் ஏளனப் பார்வை பார்த்துவிட்டுத் கழுத்துத் தாலியை கம்பீரமாகச் சரிசெய்து கொண்டாள் அவள்!
அவ்வையின் வெண்பாதான் என்ன அழகாக இந்த நிகழ்வுக்குப் பொருந்துகிறது! அந்தப் பெண் முதலில் நினைத்தது நடக்கவில்லை. அதற்கு எதிரானதும் நடக்கவில்லை. முற்றிலும் புதிதாக ஒன்று நடந்திருக்கிறது.
இதுதான் வாழ்க்கை. எனவே இந்த மூன்று வகை அனுபவங்களுக்கும் தயாராக இருங்கள்! என அறிவுறுத்துகிறார் அவ்வையார்.

மணமகளின் பெற்றோர் என்ன செய்வதென்று அறியாத மிக நெருக்கடியான இக்கட்டான சூழல். அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்தான் மூன்றாமவன். வெளிதேசத்தில் உள்ள அவர்களின் தூரத்து உறவினன்.

மணமகள் தன்னை நன்றாகப் புரிந்துகொண்டு இக்கட்டிலிருந்து தன்னைக் காப்பாற்ற முன்வந்த அவனையே தான் விரும்புவதாகச் சொல்லி சம்மதித்தாள். அந்த மூன்றாமவனோடு அவள் திருமணம் விமரிசையாக நடைபெற்றது. தான் விரும்பியவன், தன்னை விரும்பியவன் ஆகிய இருவரையும் ஓர் ஏளனப் பார்வை பார்த்துவிட்டுத் கழுத்துத் தாலியை கம்பீரமாகச் சரிசெய்து கொண்டாள் அவள்!
அவ்வையின் வெண்பாதான் என்ன அழகாக இந்த நிகழ்வுக்குப் பொருந்துகிறது! அந்தப் பெண் முதலில் நினைத்தது நடக்கவில்லை. அதற்கு எதிரானதும் நடக்கவில்லை. முற்றிலும் புதிதாக ஒன்று நடந்திருக்கிறது.
இதுதான் வாழ்க்கை. எனவே இந்த மூன்று வகை அனுபவங்களுக்கும் தயாராக இருங்கள்! என அறிவுறுத்துகிறார் அவ்வையார்.
மருத்துவர் வேலை செய்யும் போதுதானே படி கொடுக்கனும்? இதென்ன அவர் சும்மா இருக்கும் போது படி அளப்பதும், நோயாளிக்கு வைத்தியம் பார்க்கும் போது படிய நிறுத்தி வைக்கிறதும்..?!
ஒரு சீனப்பழங்கதை. நவீனம் புகாத, பண்டமாற்று முறை புழக்கத்தில் இருந்த காலம் அது.
நம்ம ஊருல இருக்கிறதுபோல அங்கயும் ஊருக்கு ஒரு மருத்துவச்சி வைத்தியர் இருந்திட்டு வந்தாங்க.
அவங்க மருத்துவ சேவைக்காக ஊர் மக்கள் முறை வைத்து தினமும் படி அனுப்பிருவாங்க. இந்தப்படி தினமும் மருத்துவர் வீட்டுக்கு சன்மானமா போகும்.
தினமும் சன்மானம்னா, தினமும் வைத்தியம் பாக்கிறாரா? ரொம்ப கைராசி வைத்தியர்தான் போலனு தப்புக்கணக்கு போடாதீங்க.
இந்தப்படி எப்பவேணாலும் ஒருநாள் திடீர்னு நிறுத்தப்படும். எப்போ தெரியுமா?
எப்போ அந்தக்கிராமத்துல ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் குன்றி நோய்வாய்ப்படுறாரோ அன்னைக்கு மருத்துவருக்கு படி நிறுத்தப்படும்.
அப்புறம்...?
அப்புறம் என்ன.. வைத்தியர் எவ்வளவு தீவிரமா அந்த நோயுற்றவரை ஆரோக்கியமடைய செய்றாரோ அன்னையில இருந்து தான் மீண்டும் படி மருத்துவர் வீடு வந்து சேரும்.
மருத்துவர் வேலை செய்யும் போதுதானே படி கொடுக்கனும்? இதென்ன அவர் சும்மா இருக்கும் போது படி அளப்பதும், நோயாளிக்கு வைத்தியம் பார்க்கும் போது படிய நிறுத்தி வைக்கிறதும்..?!
என்னடா இது புதுசா இருக்கா?
இல்லை. இது ரொம்ப பழைய பழக்கம். சீனாவுல உண்மையாவே இருந்ததாம்! அதாவது, மருத்துவரோட உண்மையான வேலைக்கு சன்மானம் தருவாங்க. அங்க அவருடைய வேலை, நோய் வந்த பின்னால வைத்தியம் பாக்கிறது இல்லை.
பின்ன?!
அந்தக்கிராமத்தில யாருக்கும் எந்த நோயும் வராம கிராம மக்கள் அனைவரும் ஆரோக்கியமா இருக்க வைக்கிறது தான் அவருடைய வேலையா பாக்கப்பட்டிச்சு. அதனால எப்போ ஒருவர் நோயுறுகிறாரோ அப்போ மருத்துவருக்கு சன்மானம் ரத்து.
எப்பேற்பட்ட புரிதல் இது!

- டாக்டர் பிரேமா
மனிதனும் மரங்களும் பிரிக்க முடியாத உறவு கொண்டவை. மனிதர்களை போன்றே மரங்களுக்கும் உறுப்புகள் உண்டு, உணர்வுகள் உண்டு; ஆண், பெண், அலி என்ற பால் பாகுபாடுகளும் கூட உண்டு.
பிறப்பு முதல் இறப்பு வரை அதாவது குழந்தைப்பருவ நடைவண்டி முதல் முதியவர்களின் ஊன்றுகோல் வரை மனித வாழ்வில் பெரும் பங்களிப்பை அளித்து வருவது மரங்களே. அதனால்தான் மரங்கள் தெய்வமாக வணங்கப்படுகின்றன. மிகவும் அத்தியாவசிய தேவையான வீடுகள் கட்டுமானத்திலும் மக்கள் வாழ்வியல் பயன்பாட்டிலும் மரங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. எவை எவைக்கு எந்தெந்த மரங்களை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த பெரும்தச்சன் அப்பர் லட்சுமணன் கூறுவதை பார்ப்போம்.
வீட்டின் தலைவாசல், கதவுகளுக்கு மிகவும் சிறந்தது பூவரசு மரம் தான். ஆனால் பலரும் தேக்கு மரத்தை தான் தேர்வு செய்வார்கள். பூவரசு நாட்டு மரம் என்பதால் அதனை யாரும் கண்டு கொள்வதில்லை. அதுதான் வாசல் கதவுகளுக்கு மிகவும் சிறந்தது. இதற்கு அடுத்த நிலையில் இருப்பது தான் தேக்குமரம்.
வீட்டில் பயன்படுத்தும் மேசை, நாற்காலிகளை வேம்பு, வேங்கை, காட்டுவாகை போன்ற மரங்களில் செய்யக்கூடாது. ஏனெனில் வேங்கை மரத்தில் இருந்து சாயம் வெளிப்படும். வேப்பமரத்தில் கீறல் விழும். காட்டுவாகை மரத்தில் இருந்து வெளிப்படும் ஒருவகை நெடிவாசத்தால் ஒவ்வாமை ஏற்படும்.
எனவே மேசை, நாற்காலி செய்ய பலா மரமே சிறந்தது. ரோஸ்வுட், பர்மா தேக்கு, பலாசா தேக்கு போன்ற மரங்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.
வீட்டில் பிரதான இடம் படுக்கையறை. அதில் முக்கிய இடம் பிடிப்பது கட்டில்கள். இவற்றில் இரண்டு வகை உண்டு. ஒன்று கல்யாண கட்டில், மற்றொன்று சாதாரண கட்டில்.

புவிஈர்ப்பு விசையை தடுக்கும் சக்தி பலா மரத்துக்கும் கோரைக்கும் தான் உண்டு. அதனால் தான் கோரைப் பாயில் படுப்பது நல்லது என்றார்கள். பொதுவாக கட்டில் மெத்தையில் படுப்பதைவிட கோரைப் பாய்களில் படுப்பதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.
சாதாரண கட்டில்களை எந்த மரத்தில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அவற்றின் மேல் கோரைப்பாயை விரித்துப்படுப்பதே நல்லது.
சமையலறையிலும் மரங்களின் பயன்பாடு மிகுதியாக உள்ளது. இதில் மசாலா பொருட்கள் வைக்கும் அஞ்சறைப் பெட்டி முக்கியமானது. இதனை கொடுக்காப்புளி, பலா மரங்களில் செய்வதுதான் நல்லது. ஏனெனில் இவற்றில் செய்யும் போது ஒரு அறையில் வைக்கப்படும் மசாலா பொருளின் வாசனை மற்றொரு அறையில் வைக்கப்படும் வேறொரு பொருளில் கலக்காது. அந்த அளவுக்கு கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனால் அந்தந்த மசாலா பொருட்களின் தன்மை அப்படியே பாதுகாக்கப்படும்.
உப்பு வைக்கும் மரப்பெட்டியை அக்னிபலா மரத்தில் செய்ய வேண்டும். அது உப்பை நைந்து போகவிடாமல் வைத்திருக்கும்.
மத்தை எடுத்துக் கொண்டால் இரண்டு வகை உள்ளது. 1. மோர் மத்து, 2, பருப்பு மத்து. மோர் கடையும் மத்துவை நெல்லி மரத்தால் செய்ய வேண்டும். அப்போது அதன் சுவை நன்றாக இருக்கும்.
பருப்பு கடையும் மத்துவை வேப்ப மரத்தில் செய்ய வேண்டும். அதன் கசப்பு சுவை நுண்மையாக பருப்பில் சேரும் போது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
அகப்பைகள் தேங்காய் சிரட்டையில் செய்யப்படும். அதன் கைப்பிடி மூங்கிலாகும். சிரட்டை மருத்துவக் குணம் கொண்டது. அந்த காலத்தில் குழந்தைக்கு வயிற்றுவலி என்றால் சிரட்டையை தேய்த்து நாக்கில் தடவுவார்கள்.
இப்போது உரல் உலக்கை பயன்பாடு குறைந்து விட்டது. எனினும் மருந்து, மசாலா இடிப்பதற்கு கழுந்து உலக்கை எனப்படும் சிறு உலக்கையை பயன்படுத்துகிறார்கள். இதனை கருங்காலி மரத்தில் செய்வது நல்லது. செம்மரத்திலும் செய்யலாம்.
ஸ்டீலில் விதவிதமான பீரோக்கள் வந்தாலும் பலரும் மரத்தால் ஆன பீரோக்களையே விரும்புவார்கள். இதனை செய்ய தேக்கு, நூக்கம், பலா மரங்களை பயன்படுத்தலாம்.
வீடுகளில் குழந்தைகள் ஆடும் ஊஞ்சல்களை தேக்கு, பலா, ரோஸ்வுட் மரங்களில் செய்வது நல்லது. அமரும் மணைகளை ரோஸ்வுட், பலா மரத்தில் செய்யலாம். தியானம் செய்ய அத்திமர மணை நல்லது. சில வீடுகளில் பூஜை அறையே மரத்தால் இருக்கும். இதற்கு பெண் மரங்களை பயன்படுத்துவது நல்லது. மரபுவழி மரத் தச்சருக்குத்தான் அது பற்றி தெரியும்.
சாமி சிலைகளை அத்திமரத்தில் செய்வதுதான் முறை. நாதஸ்வரத்தை ஆச்சா மரத்தில் செய்வார்கள். தவிலை பலா மரத்தில் செய்வார்கள்.
குழந்தைகளுக்கு பல் முளைக்கும் பருவத்தில் விரல்களை சூப்பும் பழக்கம் உண்டு. அப்போது சீப்பாங்கட்டையை கொடுப்பார்கள். அது அம்மாவின் சுண்டுவிரல் நீளமும் அதன் முனைகளில் இருக்கும் மொட்டு தாயின் மார்பு காம்பின் அளவிலும் இருக்கும்.
கட்டை விரலை சூப்பும் குழந்தைகளுக்கு செம்மர சீப்பாகட்டை நல்லது. மோதிர விரல், நடுவிரலை சூப்பும் குழந்தைகளுக்கு பலாமரக் கட்டை நல்லது. இதுபோன்ற பிளாஸ்டிக் கட்டைகளை குழந்தைகளிடம் கொடுப்பது நல்லதல்ல.
குழந்தை பருவத்தில் நடைவண்டியாக பயன்பட்ட மரம் முதிய காலத்தில் கைத்தடியாக உதவுகிறது. ஊன்று கோல் செய்ய பிரம்புதான் உகந்தது.

ஜன்னல்களுக்கும் இந்த மரங்களையே பயன்படுத்தலாம். அல்லது வேம்பு மரத்தில் செய்யலாம். பலா, கொடுக்காபுளி மரப்பலகையும் இதற்கு ஏற்றதாகும்.
வீட்டில் பயன்படுத்தும் மேசை, நாற்காலிகளை வேம்பு, வேங்கை, காட்டுவாகை போன்ற மரங்களில் செய்யக்கூடாது. ஏனெனில் வேங்கை மரத்தில் இருந்து சாயம் வெளிப்படும். வேப்பமரத்தில் கீறல் விழும். காட்டுவாகை மரத்தில் இருந்து வெளிப்படும் ஒருவகை நெடிவாசத்தால் ஒவ்வாமை ஏற்படும்.
எனவே மேசை, நாற்காலி செய்ய பலா மரமே சிறந்தது. ரோஸ்வுட், பர்மா தேக்கு, பலாசா தேக்கு போன்ற மரங்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.
வீட்டில் பிரதான இடம் படுக்கையறை. அதில் முக்கிய இடம் பிடிப்பது கட்டில்கள். இவற்றில் இரண்டு வகை உண்டு. ஒன்று கல்யாண கட்டில், மற்றொன்று சாதாரண கட்டில்.
புதுமண தம்பதிகள் பயன்படுத்தும் கல்யாண கட்டில்கள் அவர்களின் பிறந்த நட்சத்திரங்கள் படி கணித்து செய்வோம். இந்த கட்டிலை பயன்படுத்துவதால் அந்த தம்பதிகளுக்கு விரைவில் வாரிசு உண்டாகும். இந்த கட்டில்களின் கால்கள், சட்டங்களை செய்ய தேக்கு போன்ற உறுதியான மரங்களை பயன்படுத்தலாம். ஆனால் மேல் பலகையாக பலா மரத்தை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

புவிஈர்ப்பு விசையை தடுக்கும் சக்தி பலா மரத்துக்கும் கோரைக்கும் தான் உண்டு. அதனால் தான் கோரைப் பாயில் படுப்பது நல்லது என்றார்கள். பொதுவாக கட்டில் மெத்தையில் படுப்பதைவிட கோரைப் பாய்களில் படுப்பதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.
சாதாரண கட்டில்களை எந்த மரத்தில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அவற்றின் மேல் கோரைப்பாயை விரித்துப்படுப்பதே நல்லது.
சமையலறையிலும் மரங்களின் பயன்பாடு மிகுதியாக உள்ளது. இதில் மசாலா பொருட்கள் வைக்கும் அஞ்சறைப் பெட்டி முக்கியமானது. இதனை கொடுக்காப்புளி, பலா மரங்களில் செய்வதுதான் நல்லது. ஏனெனில் இவற்றில் செய்யும் போது ஒரு அறையில் வைக்கப்படும் மசாலா பொருளின் வாசனை மற்றொரு அறையில் வைக்கப்படும் வேறொரு பொருளில் கலக்காது. அந்த அளவுக்கு கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனால் அந்தந்த மசாலா பொருட்களின் தன்மை அப்படியே பாதுகாக்கப்படும்.
உப்பு வைக்கும் மரப்பெட்டியை அக்னிபலா மரத்தில் செய்ய வேண்டும். அது உப்பை நைந்து போகவிடாமல் வைத்திருக்கும்.
மத்தை எடுத்துக் கொண்டால் இரண்டு வகை உள்ளது. 1. மோர் மத்து, 2, பருப்பு மத்து. மோர் கடையும் மத்துவை நெல்லி மரத்தால் செய்ய வேண்டும். அப்போது அதன் சுவை நன்றாக இருக்கும்.
பருப்பு கடையும் மத்துவை வேப்ப மரத்தில் செய்ய வேண்டும். அதன் கசப்பு சுவை நுண்மையாக பருப்பில் சேரும் போது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
அகப்பைகள் தேங்காய் சிரட்டையில் செய்யப்படும். அதன் கைப்பிடி மூங்கிலாகும். சிரட்டை மருத்துவக் குணம் கொண்டது. அந்த காலத்தில் குழந்தைக்கு வயிற்றுவலி என்றால் சிரட்டையை தேய்த்து நாக்கில் தடவுவார்கள்.
இப்போது உரல் உலக்கை பயன்பாடு குறைந்து விட்டது. எனினும் மருந்து, மசாலா இடிப்பதற்கு கழுந்து உலக்கை எனப்படும் சிறு உலக்கையை பயன்படுத்துகிறார்கள். இதனை கருங்காலி மரத்தில் செய்வது நல்லது. செம்மரத்திலும் செய்யலாம்.
ஸ்டீலில் விதவிதமான பீரோக்கள் வந்தாலும் பலரும் மரத்தால் ஆன பீரோக்களையே விரும்புவார்கள். இதனை செய்ய தேக்கு, நூக்கம், பலா மரங்களை பயன்படுத்தலாம்.
வீடுகளில் குழந்தைகள் ஆடும் ஊஞ்சல்களை தேக்கு, பலா, ரோஸ்வுட் மரங்களில் செய்வது நல்லது. அமரும் மணைகளை ரோஸ்வுட், பலா மரத்தில் செய்யலாம். தியானம் செய்ய அத்திமர மணை நல்லது. சில வீடுகளில் பூஜை அறையே மரத்தால் இருக்கும். இதற்கு பெண் மரங்களை பயன்படுத்துவது நல்லது. மரபுவழி மரத் தச்சருக்குத்தான் அது பற்றி தெரியும்.
சாமி சிலைகளை அத்திமரத்தில் செய்வதுதான் முறை. நாதஸ்வரத்தை ஆச்சா மரத்தில் செய்வார்கள். தவிலை பலா மரத்தில் செய்வார்கள்.
குழந்தைகளுக்கு பல் முளைக்கும் பருவத்தில் விரல்களை சூப்பும் பழக்கம் உண்டு. அப்போது சீப்பாங்கட்டையை கொடுப்பார்கள். அது அம்மாவின் சுண்டுவிரல் நீளமும் அதன் முனைகளில் இருக்கும் மொட்டு தாயின் மார்பு காம்பின் அளவிலும் இருக்கும்.
கட்டை விரலை சூப்பும் குழந்தைகளுக்கு செம்மர சீப்பாகட்டை நல்லது. மோதிர விரல், நடுவிரலை சூப்பும் குழந்தைகளுக்கு பலாமரக் கட்டை நல்லது. இதுபோன்ற பிளாஸ்டிக் கட்டைகளை குழந்தைகளிடம் கொடுப்பது நல்லதல்ல.
குழந்தை பருவத்தில் நடைவண்டியாக பயன்பட்ட மரம் முதிய காலத்தில் கைத்தடியாக உதவுகிறது. ஊன்று கோல் செய்ய பிரம்புதான் உகந்தது.
தொகுப்பு கோ. வசந்தராஜ்
உளவியலாளர்களின் பரிந்துரைப்படி பார்த்தால், ஒரு பெண்ணிற்கு மனரீதியான வளர்ச்சி 21 வயதிற்கு மேல்தான் முழுமை அடைகிறது.
ஒரு பெண் பூப்பெய்திய உடனேயே அவள் திருமண வாழ்க்கைக்கு தயாராகி விடுகிறாளா?
கண்டிப்பாக இல்லை. குழந்தை பிறந்ததிலிருந்து ஒவ்வொரு பருவமாக வளர்கிறார்கள் அல்லவா, நடை பயில்வது, பேசப்பழகுவது, சாப்பிடப்பழகுவது, பல் முளைப்பது, இப்படி, ஒவ்வொரு கட்டமாக வளர்ச்சி நடைபெறுகிறது.
அதைப்போலத்தான் பூப்பெய்துவதும்.. இது ஒரு வளர்ச்சியின் அங்கமாகும், ஒரு மாற்றத்தின் வெளிப்பாடாகும். இந்த மாற்றம் முழுமை பெற, குறைந்தது ஏழு முதல் எட்டு வருடங்கள் ஆகலாம். அது முழுமைப்பெற்ற பிறகே ஒரு பெண் திருமண வாழ்க்கைக்குத் தயாராகிறாள்.
இயற்கை அதனுடைய வளர்ச்சிக்கும் மனித குல வளர்ச்சிக்கும் பெண்மையை சார்ந்துள்ளது. ஒரு உயிர் உலகில் ஜனிக்க, பெண் முக்கிய காரணமாக இருக்கிறாள். மகப்பேறு என்பது, ஒவ்வொரு பெண்ணிற்கும் மறு ஜென்மமே.
இயற்கையின் இந்த மகத்தான பணி செய்யும் பெண்ணின் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே இப்பணியை செவ்வனே செய்யமுடியும், அதன்மூலம் உண்டாகும் உருவாகும் அடுத்தடுத்தத் தலைமுறையும் ஆரோக்கியமாக அமையும்.
உளவியலாளர்களின் பரிந்துரைப்படி பார்த்தால், ஒரு பெண்ணிற்கு மனரீதியான வளர்ச்சி 21 வயதிற்கு மேல்தான் முழுமை அடைகிறது. உடலளவில் மாற்றங்களிலிருந்தாலும், மனதளவில் அவர்கள் குழந்தைகளே.
18-20 வயது வரை தாய் தந்தையரின் பேரன்பில் வளரும் பெண் குழந்தை மணமானப்பிறகு பல விஷயங்களை கற்கவும் பல விதமான சொந்தங்களை சூழ்நிலைகளை எதிர்கொள்ளவும், இந்த மன ரீதியான வளர்ச்சி மிக முக்கியம்.
இதன் மூலம் ஒரு பெண் “டிப்ரஷன்” எனப்படும் மன உளைச்சலிலிருந்தும், அதன் அபாயகரமன பின் விளைவுகளிலிருந்தும் எளிதில் தன்னை பாதுகாத்துக்கொள்ளமுடியும்.
இவ்வகையான மனோதிடத்தை அளிப்பதில், பெற்றொர்களின் பங்கு இன்றியமையாதது. பெண்ணிற்கு முறையான கல்வி கற்பிப்பதிலும், திருமணம் செய்வதிலும் பெற்றோர்கள் காட்டும் முனைப்பைப்போலவே, அவளுடைய மனப்பக்குவத்தை சீர்தூக்கும் பணியும் பெற்றொரைச் சார்ந்தது. அதன் அடிப்படையிலேயே பெண்ணின் திருமண வாழ்வில் வெற்றியடைய முடியும்.
மன பக்குவத்திற்கும், நம் மூளையின் ஆற்றலுக்கும், உணவு முறைகளுக்குமிடையே நிறைய தொடர்பு உள்ளது.
புரதம், அதனைச்சார்ந்த அமிலங்கள், நல்ல கொழுப்பு அமிலங்கள், ‘பி’ வைட்டமின்கள், ஃபைடொகெமிகல்ஸ் எனப்படும் நிறமி சார்ந்த உணவுகள்,இவையனைத்தும் மூளையின் சிக்னல்களையும், அதன் வேலை செய்யும் கூர்மையையும் மேம்படுத்துகிறது.
இவ்வகை சத்துக்கள் தானிய வகைகள், பருப்பு மற்றும் கொட்டை வகைகள், இயற்கையாக அமையபெற்ற கலர் கலர் பழங்கள், காய்கறிகள், போன்றவற்றின் மூலம் அதிகமாக கிடைக்கிறது.
இவற்றை ரெகுலராக சாப்பிடுவதினால் நமது குடலிலிருக்கும் நல்ல நுண்ணுயிர் கிருமிகள் [ப்ரொபையாடிக்ஸ்] மேலும் வலுப்பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியும், சுறு சுறுப்பும் அளித்து, மனமும், உடலும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
தற்பொழுது, விடலைபருவத்திலிருக்கும் இரு பாலாரின் உணவு முறைகளில், மேற்கூறிய நன்மை பயக்கும் சத்துக்களின்/உணவுகளின் விகிதம் கணிசமாக குறைந்திருக்கிறது, என்றே கூறலாம். அவர்களின் உணவில் தேவைக்கதிகமான சர்க்கரை, உப்பு, மற்றும் கொழுப்புச்சத்துகள் காணப்படுகிறது. காய்கறிகள், மற்றும் பழங்களின் அளவை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இவ்வாறன உணவு பழக்கங்கள் அவர்களது வயிறு மற்றும் குடல்களுக்கு ஊறு விளைவிக்கிறது. இதன் மூலம் நல்ல நுண்ணுயிர்கிறுமிகள் நாளடைவில் நலிவடைகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற மற்ற பிற உடல் உபாதைகள் வயது ஆக ஆக எளிதில் பாதிக்கிறது.
அதுமட்டுமில்லாமல், உடல் பருமன், இரத்த சோகை, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். இவற்றின் மூலம் மனச்சோர்வு உண்டாகும்.
மனம் சோர்வுற்றிருந்தால், உடலும் சோர்ந்து தானே போகிறது. இதனையே ஆங்கிலத்தில் “ஹெல்த்தி மைன்ட் இன் ஹெல்த்தி பாடி” என்று கூறுவர். இக்கருத்து, ஆண், பெண் இருபாலார்க்கும் பொருந்தும்.

இருப்பினும், ஒரு பெண், ஒரு தலைமுறையையே உருவாக்கும் உன்னத இடத்தில் இருப்பதால், பெண்ணின் மனம் மற்றும் உடல் வலிமை, அரோக்கியம் மிக முக்கியம். அவற்றை சிறு வயதிலிருந்தே சமன் படுத்தி வந்தால் அவர்களது திருமண வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே. வரும் சந்ததியினரும் அரோக்கியமாக வாழலாம்.
ஒரு பெண் கல்வி கற்றால், ஒரு குடும்பத்திற்கே விளக்கேற்றுவாள், என்னும் கூற்றிற்கிணங்க, சரியான அகவையில், மணவாழ்வில் அடியெடுத்துவைக்கும் பெண்ணின் மனதும், உடலும் ஆரோக்கியமாக இருந்தால், ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும் என்பதில் ஐயமுண்டோ!
மண்ணானது அனைத்துத் உலோகக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருப்பதோடு சூரிய ஆற்றலை ஈர்த்துக் கொண்டே இருப்பதால் அது உயிர்ப்பின் வடிவமாகவும் இருக்கிறது.
எத்தனையோ விதமான சமைக்கும் முறைகளும் பாண்டங்களும் இன்று பயன்பாட்டிற்கு வந்து விட்ட போதிலும் நம்மிடையே மண்பாண்டம் வழக்கொழிந்து போகாததற்குக் காரணம் இருக்கும்தானே. ஆம் இருக்கிறது.
உலோகங்கள் யாவும் அவற்றின் குறிப்பிட்ட பண்புடைய கதிர் வீச்சினை வீர்யமாக வெளிப்படுத்துவன. ஆனால் மண்பாண்டமானது அனைத்துத் உலோகக் கூறுகளையும் மனித உடலுக்கு ஊறு விளைவிக்காத வண்ணம் வெளிப்படுத்துகிறது. அதனால்தான் மண்பாண்டத்தில் சமைக்கப்படும் உணவு தனித்துவமான சுவையில் இருக்கிறது.
மண்பாண்டத்தில் சமைத்த உணவில் தனித்த சுவை என்று சொல்வதே அதன் சிறப்பம்சத்தை உணராமல் சொல்வதாகும். உணவுப் பொருட்கள் அனைத்திலும் சுவைகள் உண்டு. பிற உலோகப் பாத்திரத்தில் இட்டு சமைக்கும் பொழுது சமைப்பதற்குரிய வெப்பமும் பாத்திரத்தில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சும் வேதி வினைக்கு உள்ளாகி சமைக்கிற பொருளின் சுவையைச் சிதைத்து விடுகின்றன.
ஆனால் மண்பாண்டத்தில் சமைக்கிற பொழுது பாண்டங்கள் தயாரிப்பதற்குப் பயன்படுத்திய மண்ணில் உள்ள தனித்துவமான கூறும் இந்நிலத்தில் உள்ள அத்தனை விதமான தனிமக் கூறுகளும் சீராக வெளிப்பட்டு சமைக்கிற உணவுப் பொருளின் சுவையைக் கெடுக்காமல் அப்படியே தருவதால் நமக்குக் கூடுதல் சுவைக் கிடைப்பதாகத் தோன்றுகிறது.
உண்மையில் அது உணவின் மூலக்கூறு சுவையே ஆகும். மண்ணானது அனைத்துத் உலோகக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருப்பதோடு சூரிய ஆற்றலை ஈர்த்துக் கொண்டே இருப்பதால் அது உயிர்ப்பின் வடிவமாகவும் இருக்கிறது.
எடுத்துக் காட்டாக மண்பாண்டத்தில் வடிக்கிற சோறு மெலிதான இனிப்புச் சுவையில் இருக்கும். இந்த இனிப்புச் சுவைதான் அரிசியின் அடிப்படைப் பண்பாகும். அரிசிக்கு உரிய சுவையுடன் சாப்பிடுகிற பொழுது நமக்கு அப்படியே சாப்பிடலாம் என்று தோன்றும். எனவே துணை உணவாகிய கூட்டு, பொரியல், சாம்பார் போன்றவை அதிகமாகத் தேவைப்படாது.
அப்படியே எடுத்துக் கொண்டாலும் சோற்றின் இனிப்புச் சுவை அவற்றை எளிதாகச் செரித்து விடும். குறிப்பாக சாப்பிட்டவுடன் வயிறு உப்பலாகத் தோன்றும். வாயுப் பிரச்சனை உள்ளவர்கள் மண்பாண்டத்தில் உண்கிற பொழுது இந்த உப்பல் பிரச்சனை எழாது என்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.
குறிப்பாக பயிறு வகைகள், கிழங்கு வகைகள் போன்றவற்றையும் சாம்பார் சமையலையும் மண்பாண்டத்தில் சமைப்பதே உடலுக்கு நல்லது. அரிசியை மண்பாண்டத்தில் சமைத்தால் சோறு கெட்டுப்போகாது. இரவில் நீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் உண்டால் பழைய சோறு மிகவும் சுவையாகவும், வயிற்றுக்கு இதமாகவும் இருக்கும்.
பூமியில் இருந்து கிடைக்கும் சக்தியை பெற நாம் செருப்பு அணியாமல் வெறுங்காலால் நடக்க வேண்டும்.
நமக்கு வரக்கூடிய உயிர்ச்சக்தி தினம்தோறும் செலவாகிக் கொண்டே இருக்கிறது. வந்து கொண்டேயும் இருக்கிறது. அது உணவிலே இருந்து ஒரு பகுதி, காற்றில் இருந்து இன்னொரு பகுதி, கோள்களில் இருந்து ஒரு பகுதி, பூமியிலிருந்து ஒரு பகுதி என நான்கு வகையிலே நமக்கு சக்தி கிடைக்கிறது.
உணவை மாத்திரம் எப்போதும் வயிற்றில் நிரப்பி வைத்துவிட்டால் மற்ற வகையில் இருந்து வரும் சக்தி கிடைக்காமல் போய்விடும். அப்படித் தடுத்து விடுவதனால் சில குறைபாடுகள் விளைகின்றன.
சிலருக்கு கால்சியம் சத்து குறைவாகவுள்ளது, இரும்புச் சத்து குறைவாகவுள்ளது என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பலவிதமான உலோகச் சத்துக்கள், இரசாயனங்கள் எல்லாம் உடலுக்குத் தேவை. அவை குறைந்துவிட்டால் நோய் வரும்.
இந்த சத்துகள் கோள்களிலிருந்தும் கிடைக்கின்றன. நாம் பசியோடு இருந்தால்தான் அந்த சக்தியை நம் உடல் செல்கள் கிரகித்துக் கொள்ளும்.
பூமியில் இருந்து கிடைக்கும் சக்தியை பெற நாம் செருப்பு அணியாமல் வெறுங்காலால் நடக்க வேண்டும். மண்ணில் நேரடி தொடர்பு கொள்ளும்போது அந்த ஆற்றல் நமக்கு கிடைக்கிறது.

தினந்தோறும் சாப்பாட்டுக்கு முன்னர் ஒரு மணி நேரம் பசியோடு இருந்தால் அந்த நேரத்தில் உணவில் இருந்து ஜீவகாந்த சக்தியை இழுக்க வாய்ப்பு இல்லாததால், உடல் தானாகவே காற்றில் இருந்தும், கோள்களின் அலை வீச்சிலிருந்தும் பூமியில் இருந்தும் சக்தியை கிரகித்துக் கொள்ள முடியும். அப்பொழுதுதான் உடலுக்கும் அறிவுக்கும் ஏற்ற விருந்தாக நல்ல சக்தி நமக்குக் கிடைக்கும். -வேதாத்ரி மகரிஷி