search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சனி நீராடு

    புதிதாக குழந்தை உண்டாகி இருப்பவளை இன்றும் கிராமத்தில் அவளுக்கு புள்ளை சனிச்சிருக்கு என்று சொல்வதை கேட்கலாம்.
    “சனி நீராடு” என்றால் என்ன? சனிக்கிழமை குளிக்கணும் என்ற பொருள் அல்ல. சனி நீராடு என்பது கிழமையை குறிப்பதல்ல. சனித்த நீரில் நீராடு என்பதாகும்.

    சனித்த.. என்பதற்கு புதிதாய் உருவாகிய நீர். ஓடிக் கொண்டேயிருக்கும் ஆற்று நீரும் ஊற்றாகப் பொங்கும் ஊற்று நீரும் புதிதாய் சனித்துக்கொண்டே இருக்கும் நீர். அதில் பிராண ஆற்றல் மிகுந்திருக்கும். இதில் குளிப்பது தான் ஆரோக்கியம்.

    குளம் குட்டைகளில் பல நாட்கள் தேங்கி கிடக்கும் தண்ணீரும், பல நாட்கள் தண்ணீரை இறைக்காத கிணத்துத் தண்ணீரும் குளிக்க உகந்ததன்று.

    நீர் சம்பந்தமான நோய்கள் வரலாம் என்பதால் அவைகளில் குளித்தல் கூடாது என்றே அன்றே சொல்லிவிட்டாள் ஔவை. புதிதாக குழந்தை உண்டாகி இருப்பவளை இன்றும் கிராமத்தில் அவளுக்கு புள்ளை சனிச்சிருக்கு என்று சொல்வதை கேட்கலாம்.

    - பரிமேலழகர் பாரி
    Next Story
    ×