என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் கோட்டையில் வெற்றிக்கொடி நாட்ட போவது யார்? அனல் தெறிக்கும் பிரசாரம் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள்.
    வேலூர்:

    வேலூர் மாநகரம் சிப்பாய் புரட்சி மூலம் வரலாற்றுச்சிறப்புடன் திகழ்கிறது. வேலூர் கோட்டை வீரத்தின் அடையாளமாக இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் அளிக்கும் சிஎம்சி ஆஸ்பத்திரி, மிகப் பெரிய கல்வி நிறுவனமாக விளங்கும் விஐடி பல்கலைக் கழகம், வெளிமாநிலங்கள் வெளிநாட்டு பக்தர்களை தன்வசம் ஈர்க்கும் தங்கக்கோவில் ஆகியவற்றை தன் வசமாக்கி பல்வேறு பெருமைகளை கொண்டுள்ளது.

    வேலூர் மாநகராட்சி கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலூர் சத்துவாச்சாரி தாராபடவேடு ஆகிய நகராட்சிகள் காட்பாடி, அல்லாபுரம் தொரப்பாடி பேரூராட்சிகள் பலவன்சாத்து குப்பம் ஆகிய ஊராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு வேலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

    அப்போது நகராட்சித் தலைவராக இருந்த திமுகவை சேர்ந்த கார்த்திகேயன் மாநகராட்சி மேயராக பதவி ஏற்றார்.
    இதனை தொடர்ந்து 2011-ம் ஆண்டு வேலூர் மாநகராட்சி முதல் தேர்தலை சந்தித்தது. இதில் நேரடி மேயராக கார்த்தியாயினி அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    தற்போது மாநகராட்சி மேயர் பதவி பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 60 வார்டுகள் கொண்ட வேலூர் மாநகராட்சி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 7 மற்றும் 8வது வார்டுகளில் திமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.

    மீதமுள்ள 58 வார்டுகளுக்கு வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. திமுக அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெறும் நோக்கத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் கோட்டையை கைப்பற்ற போவது யார் என்ற போட்டியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்த வண்ணம் உள்ளனர். வேலூர் மாநகராட்சியில் ஆண்கள் :1,99,208,பெண்கள், 2,15,001, திருநங்கைகள் 46,என மொத்தம் 4,14 255 பேர் உள்ளனர்.

    காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 17 வார்டு அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 6 வார்டு ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் ஒரு வார்டும் அடங்கியுள்ளது.

    மாநகராட்சித் தேர்தலில் 354 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேலூர் மாநகராட்சியின் முக்கிய பிரச்சனையாக இருப்பது சாலைகள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் தற்போது வரை பல்வேறு இடங்களில் மூடப்படாமல் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன.

    துவங்கப்படும் எந்த ஒரு பணியும் முடிக்கப்படாமல் அனைத்து இடங்களிலும் பணிகள் கிடப்பில் போடப்படுகின்றன. டபுள் ரோடு, ஆர்.டி.ஓ. ஆபீஸ் சாலை, பி.எப். அலுவலக தெரு மற்றும் மாநகராட்சியின் இணைப்பு பகுதிகள் விருதம்பட்டு ராஜீவ்காந்தி நகர் என மாநகரின் அனைத்து பகுதிகளும் குண்டும் குழியுமாக மேடு பள்ளங்களாக உள்ளன. இதனால் பாதசாரிகள் முதல் வாகன ஓட்டிகள் மழை காலங்களில் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்திற்கான தலைமை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி மாநகரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் அடுக்கம்பாறையில் அமைந்துள்ளது. மாநகர் பகுதிகளில் உள்ள மக்கள் மருத்துவமனைக்கு செல்ல போக்குவரத்து நெரிசலால் நீண்ட நேரம் ஆகிறது. அதோடு போதிய போக்குவரத்து இல்லாமல் உள்ளது. இதனால் அவசர சிகிச்சை தேவைப்படுவோரின் உயிரும் பறிபோகிறது.

    மாநகரில் மட்டும் சுமார் 5 லட்ச மக்கள் வசித்து வரும் நிலையில் தொடர்ந்து மக்கள் தொகை அதிகரித்து வருகிறது, பழைய அரசு மருத்துவமனையான பெண்ட்லேண்ட் மருத்துவமனையை தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது வேலூர் மாநகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் நாள்தோறும் விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்கநிரந்தர தீர்வு வேண்டும்.
    வேலூர் மாநகரில் பல வணிக நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகின்றது. அதோடு சென்னை பெங்களூரு ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய இணைப்பு பகுதியாக இருந்து வருகிறது வேலூர் மாநகர்.

    இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை அளவுக்கதிகமான வாகன போக்குவரத்து உள்ள நிலையில் சாலைகளில் சுதந்திரமாக சுற்றித்திரியும் கால்நடைகளால் நாள்தோறும் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அரங்கேறுகின்றன. கண்துடைப்புக்காக மாநகராட்சி நிர்வாகத்தால் அவ்வபோது அறிக்கை விடப்பட்டாலும் இதற்கான நிரந்திர நடவடிக்கை என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. 

    விலை மதிப்பற்ற உயிரை அசாதாரணமாக சுற்றித்திரியும் கால்நடைகளால் வரும் நாட்களில் இழக்க செய்யக்கூடாது என்பதில் வெற்றி பெறும் மேயர் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

    அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்டவற்றை செய்து கொடுக்க வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் அடங்கி வரும் 4 சட்டமன்ற தொகுதிகளும் தி.மு.க. வசமே உள்ளது. அதே போல மேயர் பதவியை தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் நெருக்கமான ஆதரவாளர்கள் அவர்களின் மனைவிகளுக்கு குறிவைக்கிறார்கள்.

    ஒவ்வொரு வார்டிலும் கவுன்சிலர் வேட்பாளர்கள் மக்கள் செல்வாக்கு மற்றும் பண பலமுடைய அறிமுகம் மிக்க நபர்கள் களமிறங்கியுள்ளனர். வார்டுக்கு ரூ.2 கோடி வரை செலவு செய்ய வேட்பாளர்கள் தயாராக இருப்பதால் வெற்றி வாய்ப்பை பணம் தான் தீர்மானிப்பதாக உள்ளது. வேலூர் மாநகராட்சியில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் வார்டுகள் விவரம்:-
    அதிமுக - கூட்டணி : 56
    (அதிமுக -55
    தமாகா- 1)
    4 வார்டுகளில் வேட்புமனு தள்ளுபடி
    ==
    திமுக - கூட்டணி : 60
    (திமுக - 53
    காங்கிரஸ்-3,
    மதிமுக-1,
    விடுதலை சிறுத்தை-1,)
    இரண்டு வார்டுகளில் திமுக போட்டியின்றி தேர்வு (வார்டு 7,8)
    ==
    பிஜேபி -34
    பகுஜன் சமாஜ் கட்சி : 1
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் : 3
    இந்திய கம்யூனிஸ்ட் :1
    அமமுக -18,
    நாம் தமிழர்- 40,
    பாமக -20,
    தேமுதிக- 16,
    எஸ்.டி.பி.ஐ - 4,
    மக்கள் நீதி மய்யம் -10
    தமிழ்நாடு இளைஞர் கட்சி :5
    ஐ.ஜே.கே - 2
    வெல்பர் பார்ட்டி : 1
    மனித நேய ஜனநாயக கட்சி : 1
    சுயேச்சை - 82
    லந்தேரி அருகே பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் முதியவர் பிணம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    காட்பாடி அடுத்த லத்தேரி அருகே உள்ள குக்கல பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 75). இவரது மனைவி இறந்து விட்டார். 2 மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் மணி தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மணியின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இன்று காலை அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. 

    இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் வீட்டில் ஜன்னல் வழியாக பார்த்தபோது மணி அளவில் வீட்டுக்குள் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து லத்தேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மணி எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    காட்பாடியில் ஆட்டோ பைக் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 35) ஜீவா நகரை சேர்ந்தவர் (கார்த்தி 23) இருவரும் வேலூரில் உள்ள பஞ்சு மிட்டாய் பாப்கான் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். நேற்று வள்ளிமலை தேர் திருவிழாவில் பஞ்சுமிட்டாய் விற்பதற்காக ஆட்டோவில் சென்றனர்.

    அங்கு விற்பனை முடிந்து நேற்று நள்ளிரவு வீட்டிற்கு புறப்பட்டனர். காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள பள்ளிக்குப்பம் ரெயில்வே கேட் அருகே இரவு 12.30 மணிக்கு பஞ்சுமிட்டாய் ஏற்றிய ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சேண்பள்ளி அடுத்த ஸ்ரீபாத நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவர் வேலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

    அவர் ஆட்டோ மீது வேகமாக மோதினார். இதில் ராஜசேகர், கார்த்தி, ஆல்பர்ட் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் மீட்டனர்.

    ராஜசேகர், கார்த்தி இருவரையும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜசேகர் பரிதாபமாக இறந்தார்.ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கார்த்தி சிகிச்சை பலனின்றி பலியானார்.

    ஆல்பர்ட் வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் பலியான ராஜசேகருக்கு திருமணமாகி தேவி என்ற மனைவி உள்ளார். கார்த்திக்கிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    தேர்த் திருவிழாவில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்துவிட்டு வந்த வாலிபர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் வேலூரில் பரபரப்பு ஏற்படுத்தியது.
    மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கைதான வாலிபர் வேலூர் ஜெயிலில் பரிதாபமாக இறந்தார்.
    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவருக்கும் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது மகள் நந்தினி (26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நந்தினி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
    ஆம்பூர் டவுன் போலீசார் சென்று உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நந்தினியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை முரளி ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். மேலும் அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    போலீசார் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜா மீது வழக்கு பதிவு செய்தனர். நேற்றிரவு ராஜமணியை கைது செய்து ஆம்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 

    அப்போது ராஜமணியை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து ராஜாமணி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    இன்று காலையில் வேலூர் ஜெயிலில் இருந்த ராஜாமணிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.ஜெயில் டாக்டர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். உடனடியாக அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே ராஜாமணி இறந்துவிட்டார்.

    ராஜா மணிக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் பிரச்சினை இருந்து வந்தது. இதற்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் ஜெயிலில் இருந்தபோது அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதூ தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் ஜெயிலில் வாலிபர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவருக்கும் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது மகள் நந்தினி (26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நந்தினி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    ஆம்பூர் டவுன் போலீசார் சென்று உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நந்தினியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை முரளி ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.மேலும் அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜா மீது வழக்கு பதிவு செய்தனர். நேற்றிரவு ராஜமணியை கைது செய்து ஆம்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது ராஜமணியை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து ராஜாமணி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இன்று காலையில் வேலூர் ஜெயிலில் இருந்த ராஜாமணிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.ஜெயில் டாக்டர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். உடனடியாக அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே ராஜாமணி இறந்துவிட்டார்.

    ராஜா மணிக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் பிரச்சினை இருந்து வந்தது. இதற்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் ஜெயிலில் இருந்தபோது அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதூ தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆளும் கட்சியாக தி.மு.க. இருக்கும்போது தி.மு.க. உறுப்பினர்கள் வெற்றிபெற்று குடியாத்தம் நகர மன்றத்தை கைப்பற்றினால் தான் தலை நிமிர்ந்து நடக்க முடியும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய தலைவராக உருவாகி வருகிறார். தமிழ்நாட்டில் வரும் 25 ஆண்டுகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி இருக்கும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் 6 மாதங்கள் கொரோனா பாதிப்பு இருந்தது.

    அதில் மீண்ட உடன் பெருவெள்ளம் இப்படியே 8 மாதம் கழிந்து விட்டது.

    6 மாத பட்ஜெட் தான் போட்டுள்ளோம், இனி வரும் நாளில் முழு ஆண்டு பட்ஜெட் போட்ட பிறகு சிறப்பாக இருக்கும்.

    இந்த ஆட்சியின் பலன்கள் குடியாத்தம் மக்களுக்கு சென்றடைய நகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் அனைவரும் அயராது உழைத்து வெற்றி பெறவேண்டும். ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் நகரமன்ற தலைவர் யார் என்பதை கட்சியின் தலைவர் முடிவு செய்வார்.

    ஆளும் கட்சியாக தி.மு.க. இருக்கும்போது தி.மு.க. உறுப்பினர்கள் வெற்றிபெற்று குடியாத்தம் நகர மன்றத்தை கைப்பற்றினால் தான் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.

    ஓட்டு சேகரிப்பின் போது கும்பலாக சென்று ஓட்டு கேட்டால் அவர்கள் ஓட்டு போடுகிறேன் என்று தான் சொல்வார்கள். இல்லையென்றால் தலையை மட்டும் ஆட்டுவார்கள்.

    அப்படி கும்பலாக செல்லாமல் காதலர்கள் போல் தனித்தனியாக சென்று வாக்காளர்களை சந்தியுங்கள் என்றார்.

    கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வியாபாரிகள் பொருட்களை வாங்கக் கூடாது என குடியாத்தத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
    குடியாத்தம்:

    தமிழ்நாட்டில் சிறு வணிகர்கள், மளிகை கடைகள், கிராமப்பகுதியில் உள்ள வியாபாரிகள் நகர்ப்புரங்களில் உள்ள நுகர்பொருள் விநியோகஸ்தர்களிடம் இருந்து கடைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மொத்தமாக வாங்கி விற்பனை செய்வார்கள்.

    இதனால் மொத்த வியாபாரிகளும் அதனை நம்பியுள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன் பெற்று வந்தன.

    தற்போது இந்த பொருட்களை விற்பனை செய்யும் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைந்துள்ளதால் மொத்த வியாபாரிகள் மற்றும் அதனை நம்பி உள்ளவர்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் குடியாத்தம் நகரில் குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு பகுதிகளைச் சேர்ந்த நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக அவசரக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு குடியாத்தம் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பி.மோகன்பாபு தலைமை தாங்கினார்.வியாபாரிகள் சங்கங்களின் கௌரவ தலைவர் எஸ்.நடராஜன் மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பி.ரமேஷ்பாபு, நிர்வாகி கே.தயாளமூர்த்தி, பேர்ணாம்பட்டு நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கத்தலைவர் வி.பிரசாத், செயலாளர் வி.பாஸ்கர் அனைத்து பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் எம்.ஜெ.அறிவுடைநம்பி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து வணிகர்களிடம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் சார்பாக அனைத்து வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குமாறு வற்புறுத்துகின்றனர். 

    இதனால் இப்பகுதி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் பேர் தமிழகத்தில் மட்டும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

     எனவே அனைத்து வியாபாரிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்வதில்லை என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் குடியாத்தம் நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்க செயலாளர் வி.அருள் நன்றி கூறினார். 

    இக்கூட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    உள்ளாட்சித் தேர்தலையொட்டிவேலூர் மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை
    வேலூர்:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்திலுள்ள தமிழக- ஆந்திர எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வரும் 19-ந்தேதி தோதல் நடக்க உள்ளதையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள், மதுபானங்கள் வழங்கப்படுவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் 30 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுதவிர போலீசார் சார்பிலும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் வார்டுக்கு 2 போலீஸ், பேரூராட்சி பகுதிகளில் 5 வார்டுக்கு 2 போலீசார் நியமிக்கப்பட்டு ரோந்து பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன. 

    மேலும், மாவட்ட, மாநில எல்லைகளிலும் வாகன தணிக்கையை தீவிரப்படுத் திட உத்தரவிடப் பட்டுள்ளது.

    தமிழக- ஆந்திர எல்லையான கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடி பகுதியில் ஏ.டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆந்திராவில் இருந்து வேலூ£¢ மாவட்டம் நோக்கி வந்த பஸ்கள், கார்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் அனைத்தையும் போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர். 

    இதேபோல், மாவட்டத்திலுள்ள அனைத்து சோதனை சாவடி களிலும் வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
    வேலூர் கோட்டை கோவிலில் இன்று காதலர் தினத்தில் 14 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
    வேலூர்:

    அன்பிற்கும் காதலிற்குமான மாதமாக பிப்ரவரி மாதம் கருதப்படுகிறது. அதிலும் பிப்ரவரி மாதத்தில் வரும் காதலர் தினத்திலோ அல்லது அந்த நாளின் நெருக்கத்திலோ திருமணம் செய்து கொள்ள காதலர்கள் பலர் விரும்புகின்றனர்.காதலர் தினத்தில் தங்களது திருமண வாழ்வை அமைத்துக் கொள்ள முடிவு செய்கின்றனர்.

    காதலர் தினத்தையொட்டி இன்று வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஒரே நாளில் 14 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதில் பெரும்பாலானவை காதல் திருமணம் ஆகும்.

    காதல் திருமணம் செய்த தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர். அவர்களுக்கு உறவினர்கள் நண்பர்கள் ஆரவாரத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்தனர். திருமணத்திற்கு வந்தவர்களால் கோவில் வளாகம் முழுவதும் நிரம்பி வழிந்தது.

    காதலர் தினத்தையொட்டி வேலூர் கோட்டையில் இன்று காதல் ஜோடிகள் வர தடை விதிக்கப்பட்டது. 

    கோட்டை முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அவர்கள் கோட்டைக்கு வந்த காதல் ஜோடிகளை அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.

    கோட்டை பூங்கா மற்றும் கொத்தளம் போன்ற இடங்களிலும் காதல் ஜோடிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.வழக்கமாக காதல் ஜோடிகளால் நிரம்பி வழியும் பூங்கா மற்றும் கோட்டை கொத்தள பகுதிகளில் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

    காதலர் தினத்தையொட்டி இன்று வேலூரில் பூக்கள் விலையும் அதிகமாக இருந்தது. ஊட்டி ரோஜா ஓசூர் ரோஜா ரூ.50 வரை விற்பனையானது.
    வேலூர் மாவட்டத்தில் வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    வேலூர்:

    குடியரசு தினவிழாவில் இந்திய விடுதலை போரில் பங்குபெற்ற வீரர்களின் பெருமைகளை போற்றும் வகையில் 3 அலங்கார ஊர்திகளை மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த வாகனம் தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறது.

    வேலூர் மாவட்டத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி வருகை தந்தது. வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியில் வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட காட்சி, வீரன் சுந்தரலிங்கம், வீரத்தாய் குயிலி, பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் அழகு முத்துக்கோன், காளையர் கோயில், கோட்டையின் மீது வீரர்கள் ஆங்கிலேயரிடம் சண்டையிடும் காட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது.

    வேலூர் மாவட்ட எல்லையான கூத்தம்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அலங்கார ஊர்தியினை மலர்தூவி வரவேற்றார். 

    அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் கழனிபாக்கம் ஊராட்சியில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி நிலைநிறுத்தப்பட்டது. அதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
    தி.மு.க., அ.தி.மு.க. மாவட்ட செயலாளரை சந்தித்த பா.ம.க. வேட்பாளரால் சமூக வலைதளங்களில் தி.மு.க., பா.ம.க.வினர் கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூரில் தி.மு.க.பா.ம.க. இடையே சமூக வலைத்தளத்தில் பனிப்போர் ஏற்பட்டுள்ளது. வார்த்தைகளால் இரண்டு கட்சி நிர்வாகிகளும் மோதலைத் தொடர்ந்து வருகின்றனர்.

    வேலூர் மாநகராட்சி 24 வது வார்டு பா.ம.க. வேட்பாளர் பரசுராமன். கடந்த வாரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் நந்தகுமார், மாநகர செயலாளர் கார்த்திகேயனை பார்த்து சால்வை அணிவித்து விட்டு வந்தார். 

    அது நடந்த மறுநாளே ‘பா.ம.க வேட்பாளரை தி.முக.வினர் கடத்தி, மிரட்டிவிட்டனர் ‘ என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட் போட்டார். உடனடியாக நந்த குமாரும் ஒரு வீடியோவை வெளியிட்டு ‘ தி.மு.க சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்தார் ‘என்று பதிவிட, அதே நேரத்தில் பா.ம.க. மாவட்ட தலைவர் இளவழகன் ‘வேட்பாளர்களை மிரட்டுறாங்க ‘ என்று எஸ்.பி.யிடம் தி.மு.க மீது புகார் அளித்தார்.

    அப்படியே பிரச்னை அமுங்கியது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் பரசுராமன் பரபரப்புக்கு உள்ளானார். இந்தமுறை அ.தி.மு.க மாநகர மாவட்ட செயலாளர் அப்புவுக்கு சால்வை அணிவித்து விட்டு வாழ்த்து தெரிவித்து, பாமகவுக்கு ஆதரவு தாருங்கள், 

    நாங்கள் போட்டியிடாத இடங்களில் உங்களது வெற்றிக்கு பாடுபடுவோம் ‘என்று உறுதியளித்தாக அவர் இருந்த படத்தை அப்பு சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் மீண்டும் பரபரப்பு பற்றியது.

    அ.தி.மு.க, பா.ம.க கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டி என்றாகி விட்ட நிலையில் எப்படி அ.தி.மு.க, பா.ம.க. ஆதரவு நிலைப்பாடு சரியாகும் என்று பட்டிமன்றமே நடந்த நேரத்தில், பரசுராமனுடன் அப்புவை பார்க்கச் சென்ற பாமக மாவட்ட துணைத்தலைவர் சரவணனை கட்சியை விட்டு தூக்கியது பாமக தலைமை. 

    அத்துடன் பிரச்சினை முடிந்தது என்று நினைத்தால் மீண்டும் நேற்று சர்ச்சை கிளம்பியது. ‘ எங்களை வந்து பரசுராமன் பார்த்தபோது கடத்தி விட்டதாக பேசி னீர்களே, இப்ப அ.தி.மு.க மாவட்ட செயலாளர் அப்புவும், பா.ம.க வேட்பாளர் பரசு ராமனை கடத்திவிட்டதாக சொல்வீர்களா?. 

    அப்புவை பார்த்ததற்காக மாவட்ட துணைத்தலைவர் சரவணனை கட்சியி லிருந்து நீக்கினீர்கள், பரசுராமனை விட்டு விட்டீர்களே, மண்டையை விட்டு கொண்டையை மறந்து விட்டீர்களே ‘ என்று தி.மு.க மாவட்ட செயலாளர் நந்தகுமார் சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.

    இதுநடந்த கொஞ்ச நேரத்தில், ‘ பா.ம.க தலைமை முடிவு செய்தால் செய்ததுதான், நிறுவனர் ராமதாஸ் எடுப்பதுதான் இறுதி முடிவு, அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம், தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது. அதனால் சரவணனை நீக்கிவிட்டோம். தி.மு.க.வில் தவறு செய்பவர்களை ஏற்றுக்கொள்வார்கள்.

    பா.ம.க.வில் தவறு செய்தவர்களை தலைமை கிள்ளி போட்டுள்ளது.
    காலையும், வாலையும் மட்டுமே பார்க்கக் கூடாது ‘என்று இளவழகன் பதிலுக்கு பதிவு செய்ய பரசுராமனால் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க.வில் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

    அப்புவை பார்த்ததால் பா.ம.க. மாவட்ட துணைத்தலைவர் சரவணன் கட்சி உறுப்பினர் பதவி பறிப்பு நடந்தது, ஆனால் பரசுராமன் மீது இல்லையே. பரசுராமன் வேட்பாளர், தேர்தல் முடிந்ததும் பரசுராமனுக்கும் கல்தா கொடுக்கப்படும் என்கின்றனர். 

    அதே நேரத்தில் இந்த விஷயத்தை பெரியதாக ஆக்கியது அப்புதான். போட்டோவை போடாமல் இருந்திருந்தால் பிரச்னையே வந்திரு க்காது என்று வருத்தப்படுகின்றனர் பா.ம.க.வினர். சமூக வலைதளங்களில் தி.மு.க, பா.ம.க. மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தபால் ஓட்டு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    வேலூர் மாநகராட்சியில் 58 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் வாக்குச்சாவடி மையங்கள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. 

    மேலும் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் சின்னம் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. 

    எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் தபால் வாக்குகள் அளிப்பதற்காக தபால் வாக்கு சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    மாநகராட்சியில் மொத்தம் 657 தபால் வாக்குகள் உள்ளன.
    இதனிடையே தபால் வாக்கு சீட்டுகள் பெறும் வகையில் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தபால் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.

    மாநகராட்சி அலுவலகத்தில் வரவேற்பு பகுதியில் இந்த பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதில் 1-வது வார்டு முதல் 60- வது வார்டு வரையில் உள்ள தபால் வாக்காளர்கள் தங்களது வாக்கை கவரில் போட்டு செலுத்தலாம்.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22-ந்தேதி காலை 8 மணி வரை தபால் வாக்குகள் செலுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×