என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
காதலர் தினத்தில் 14 ஜோடிகளுக்கு திருமணம்
வேலூர் கோட்டை கோவிலில் இன்று காதலர் தினத்தில் 14 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
வேலூர்:
அன்பிற்கும் காதலிற்குமான மாதமாக பிப்ரவரி மாதம் கருதப்படுகிறது. அதிலும் பிப்ரவரி மாதத்தில் வரும் காதலர் தினத்திலோ அல்லது அந்த நாளின் நெருக்கத்திலோ திருமணம் செய்து கொள்ள காதலர்கள் பலர் விரும்புகின்றனர்.காதலர் தினத்தில் தங்களது திருமண வாழ்வை அமைத்துக் கொள்ள முடிவு செய்கின்றனர்.
காதலர் தினத்தையொட்டி இன்று வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஒரே நாளில் 14 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதில் பெரும்பாலானவை காதல் திருமணம் ஆகும்.
காதல் திருமணம் செய்த தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர். அவர்களுக்கு உறவினர்கள் நண்பர்கள் ஆரவாரத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்தனர். திருமணத்திற்கு வந்தவர்களால் கோவில் வளாகம் முழுவதும் நிரம்பி வழிந்தது.
காதலர் தினத்தையொட்டி வேலூர் கோட்டையில் இன்று காதல் ஜோடிகள் வர தடை விதிக்கப்பட்டது.
கோட்டை முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அவர்கள் கோட்டைக்கு வந்த காதல் ஜோடிகளை அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.
கோட்டை பூங்கா மற்றும் கொத்தளம் போன்ற இடங்களிலும் காதல் ஜோடிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.வழக்கமாக காதல் ஜோடிகளால் நிரம்பி வழியும் பூங்கா மற்றும் கோட்டை கொத்தள பகுதிகளில் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
காதலர் தினத்தையொட்டி இன்று வேலூரில் பூக்கள் விலையும் அதிகமாக இருந்தது. ஊட்டி ரோஜா ஓசூர் ரோஜா ரூ.50 வரை விற்பனையானது.
Next Story






