என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாவட்ட எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார்.
    X
    வேலூர் மாவட்ட எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார்.

    வேலூர் மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை

    உள்ளாட்சித் தேர்தலையொட்டிவேலூர் மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை
    வேலூர்:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்திலுள்ள தமிழக- ஆந்திர எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வரும் 19-ந்தேதி தோதல் நடக்க உள்ளதையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள், மதுபானங்கள் வழங்கப்படுவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் 30 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுதவிர போலீசார் சார்பிலும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் வார்டுக்கு 2 போலீஸ், பேரூராட்சி பகுதிகளில் 5 வார்டுக்கு 2 போலீசார் நியமிக்கப்பட்டு ரோந்து பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன. 

    மேலும், மாவட்ட, மாநில எல்லைகளிலும் வாகன தணிக்கையை தீவிரப்படுத் திட உத்தரவிடப் பட்டுள்ளது.

    தமிழக- ஆந்திர எல்லையான கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடி பகுதியில் ஏ.டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆந்திராவில் இருந்து வேலூ£¢ மாவட்டம் நோக்கி வந்த பஸ்கள், கார்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் அனைத்தையும் போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர். 

    இதேபோல், மாவட்டத்திலுள்ள அனைத்து சோதனை சாவடி களிலும் வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
    Next Story
    ×