என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை பகுதியில் பெய்த மழையின் காரணமாக நிரம்பி வழிகிறது. நேற்று குடியாத்தம் மற்றும் ஆந்திர வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது.
    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் ஆந்திர வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடை காலத்திலும் பாலாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    வாணியம்பாடி அடுத்த புல்லூரில் பாலாற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆந்திரா தடுப்பணை நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

    தொடர் மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொடையாஞ்சி பாலாற்றில் இன்று மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதேபோல ஒடுகத்தூர் மேல் அரசம்பட்டு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த ஆற்று வெள்ளம் வெட்டுவானம் அருகே பாலாற்றில் கலந்து ஓடுகிறது. இதனால் மீண்டும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை பகுதியில் பெய்த மழையின் காரணமாக நிரம்பி வழிகிறது. நேற்று குடியாத்தம் மற்றும் ஆந்திர வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக மோர்தானா அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறது. அங்கிருந்து பெரிய ஏரி பகுதிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் வேலூர் பாலாற்றிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    வேலூர் 15.1,காட்பாடி 20, குடியாத்தம் 15, பொன்னை 21, மேல் ஆலத்தூர் 16.2, திருவலம் 16.2.
    வேலூரில் பலத்த மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
    வேலூர்:

    வேலூரில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு 7 மணியளவில் பலமாக கொட்டியது. இதில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சத்துவாச்சாரி, காட்பாடி பகுதியிலும் கனமழை பெய்தது.

    தொடர்ந்து விடிய விடிய மழை பரவலாக பெய்து கொண்டே இருந்தது.

    ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருவதால் தெருக்களில் தண்ணீர் தேங்கி சாலைகள் நாசமானது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கிரீன் சர்க்கிள் சர்வீஸ் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

    குடியாத்தம் மோர்தானா அணையில் அதிகாரி ஆய்வு செய்தார்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான குடியாத்தம் மோர்தானா அணை கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிரம்பி வழிந்து வருகிறது.

    நீர்வளத்துறை அதிகாரிகள் நேற்று மோர்தானா அணை யில் ஆய்வு நடத்தினர்.
    திருவண்ணாமலை பெண்ணையாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் வி.சாம்ராஜ் தலைமையில் நீர்வளத்துறை அதிகாரிகள் மோர்தானா அணை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
     
    அணைக்கு வரும் நீரின் அளவு, அணையில் இருந்து நீர் வெளியேறும் அளவு, அணையின் மதகு, அணையின் கரைப் பகுதிகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது வேலூர் மேல் பாலாறு வடிநில நீர்வளத்துறை கோட்ட செயற்பொறியாளர் ஆர்.ரமேஷ், குடியாத்தம் நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் பி. கோபி, உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    வேலூர் பாலாற்று வெள்ளத்தால் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் காட்பாடிக்கு சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.வேலூர் பாலாற்றில் சுமார் 200 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.விருதம்பட்டு பாலாற்றின் கரையில் காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    காவிரி கூட்டுக்குடிநீர் ஆற்றில் வெள்ளத்தில் கலந்து வீணாக செல்கிறது.
    தண்ணீர் அதிகமாக செல்வதால் காவிரி குடிநீர் குழாய்களை உடனடியாக சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில்;

    வேலூர் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக விருதம்பட்டில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் காட்பாடி பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உடனடியாக காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்களை சீரமைக்க முடியாது. தண்ணீர் அளவு குறைந்த பிறகு குழாய்கள் சீரமைக்கும் பணி தொடங்கப்படும்.

    அதுவரை காட்பாடி பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் சப்ளை செய்ய முடியாது. 

    உள்ளூர் குடிநீர் திட்டப்பணிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.
    தனது தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனிக்க மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்க வேண்டும் என நளினி மனு அளித்துள்ளார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் பெண்கள் தனிச்ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த முருகனின் மனைவி நளினிக்கு பரோல் வழங்க வேண்டும் என்று கோரி அவரது தாயார் பத்மா கடந்த டிசம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    அந்த கோரிக்கையை ஏற்று நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் 27-ந் தேதி நளினி ஒரு மாதம் பரோலில் வந்து காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

    தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். நளினிக்கு, 4-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பரோல் முடிந்து வருகிற 27-ந் தேதி வேலூர் ஜெயிலுக்கு திரும்ப வேண்டும்.

    இந்த நிலையில் தனது பரோலை நீட்டிக்க கோரி நளினி சிறைத் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தார். அதில் தனது தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனிக்க வேண்டும்.எனவே மேலும் ஒரு மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
    அனைவரும் ஒரே வழக்கின் கீழ் உள்ளவர்கள் தான் இந்த வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்து இருக்க வேண்டும் என வக்கீல் புகழேந்தி கூறியுள்ளார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் புழல் ஜெயிலிலும் ரவிச்சந்திரன் மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    இந்த தீர்ப்பின் மூலம் ஜெயிலில் உள்ள மற்ற 6 பேரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வக்கீல் புகழேந்தி தெரிவித்துள்ளார்.இது சம்பந்தமாக அவர் கூறியதாவது:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 7 பேர் விடுதலை சம்பந்தமாக தீர்மானத்தை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.

    இதில் தற்போது பேரறிவாளன் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    பேரறிவாளன்

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கவர்னர், ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ள நிலையில் வழக்கு தொடர்ந்த ஒருவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    அனைவரும் ஒரே வழக்கின் கீழ் உள்ளவர்கள் தான் இந்த வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்து இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    குடியாத்தம் பகுதியில் வீட்டின் சுவர் சரிந்து விழுந்து தொழிலாளி படுகாயம் அடைந்துள்ளார்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

    குறிப்பாக குடியாத்தம் நகரம், பரதராமி, கல்லப்பாடி, சேம்பள்ளிஅக்ராவரம், பரதராமி, தட்டப்பாறை, சைனகுண்டா மோர்தானா, மேல்ஆலத்தூர், தட்டப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் அப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சில இடங்களில் கொட்டாற்றில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. 

    நேற்று மதியம் குடியாத்தத்தில் பல மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் கழிவு நீருடன் மழை நீர் சேர்ந்து ஓடியது.

    இந்த நிலையில்–குடியாத்தம் செதுக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினகரன் (வயது45) கூலித் தொழிலாளி குடிசை வீட்டில் வசித்து வந்தார், தொடர் மழையால் இவரது வீட்டின் சுவர் நேற்று மதியம் திடீரென சாய்ந்து உள்ளே இருந்த தினகரன் மீது விழுந்துள்ளது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். 

    படுகாயம் அடைந்த தினகரனை நகர்மன்ற உறுப்பினர் ம.மனோஜ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

    இந்த சுவர் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×