என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நளினி
    X
    நளினி

    மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்க கோரி நளினி மனு

    தனது தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனிக்க மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்க வேண்டும் என நளினி மனு அளித்துள்ளார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் பெண்கள் தனிச்ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த முருகனின் மனைவி நளினிக்கு பரோல் வழங்க வேண்டும் என்று கோரி அவரது தாயார் பத்மா கடந்த டிசம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    அந்த கோரிக்கையை ஏற்று நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் 27-ந் தேதி நளினி ஒரு மாதம் பரோலில் வந்து காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

    தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். நளினிக்கு, 4-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பரோல் முடிந்து வருகிற 27-ந் தேதி வேலூர் ஜெயிலுக்கு திரும்ப வேண்டும்.

    இந்த நிலையில் தனது பரோலை நீட்டிக்க கோரி நளினி சிறைத் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தார். அதில் தனது தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனிக்க வேண்டும்.எனவே மேலும் ஒரு மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×