என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூரில் பலத்த மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது காட்சி
வேலூரில் பலத்த மழை
வேலூரில் பலத்த மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
வேலூர்:
வேலூரில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு 7 மணியளவில் பலமாக கொட்டியது. இதில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சத்துவாச்சாரி, காட்பாடி பகுதியிலும் கனமழை பெய்தது.
தொடர்ந்து விடிய விடிய மழை பரவலாக பெய்து கொண்டே இருந்தது.
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருவதால் தெருக்களில் தண்ணீர் தேங்கி சாலைகள் நாசமானது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கிரீன் சர்க்கிள் சர்வீஸ் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
Next Story






