என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததை படத்தில் காணலாம்.
குடியாத்தம் பகுதியில் வீட்டின் சுவர் சரிந்து விழுந்து தொழிலாளி படுகாயம்
குடியாத்தம் பகுதியில் வீட்டின் சுவர் சரிந்து விழுந்து தொழிலாளி படுகாயம் அடைந்துள்ளார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
குறிப்பாக குடியாத்தம் நகரம், பரதராமி, கல்லப்பாடி, சேம்பள்ளிஅக்ராவரம், பரதராமி, தட்டப்பாறை, சைனகுண்டா மோர்தானா, மேல்ஆலத்தூர், தட்டப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் அப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சில இடங்களில் கொட்டாற்றில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
நேற்று மதியம் குடியாத்தத்தில் பல மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் கழிவு நீருடன் மழை நீர் சேர்ந்து ஓடியது.
இந்த நிலையில்–குடியாத்தம் செதுக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினகரன் (வயது45) கூலித் தொழிலாளி குடிசை வீட்டில் வசித்து வந்தார், தொடர் மழையால் இவரது வீட்டின் சுவர் நேற்று மதியம் திடீரென சாய்ந்து உள்ளே இருந்த தினகரன் மீது விழுந்துள்ளது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்த தினகரனை நகர்மன்ற உறுப்பினர் ம.மனோஜ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சுவர் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






