என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை நேரு தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 64). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். நாராயணன் சேத்துப்பட்டு ஆரணி சாலையில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.
நாராயணனின் தம்பி வெங்கடேசன் (58). இவருக்கு திருமணம் ஆகவில்லை. வெங்கடேசன் நாராயணன் வீட்டில் வசித்து வந்தார். நாராயணன் கடந்த 18 ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பி வெங்கடேசன் அழுதுக்கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் நாராயணன் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஆழந்த சோகத்தில் இருந்த வெங்கடேசன் திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் வெங்கடேசனை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு வெங்கடேசனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் அங்கிருந்து வெங்கடேசன் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டு நாராயணன் உடல் அருகே வெங்கடேசன் உடலும் தகனம் செய்யப்பட்டது.
அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பியும் சுடுகாட்டிலே இறந்துவிட்டதால் அவரது உறவினர்கள் மற்றும் அந்த கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் பாலானந்தல் அடுத்த கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவருக்கு இந்திரா காந்தி, தேவகி (வயது 51) என்று 2 மனைவிகள் இருந்தனர்.
இவர்கள் இருவரும் அக்காள், தங்கை ஆவார்கள்.பச்சையப்பன் சில ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். தேவகிக்கு குழந்தை இல்லை. இந்திராகாந்திக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தேவகி அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது அவர் எரிந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்ததார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் தேவகி உடலில் எரிந்து கொண்டிருந்த தீயினை அணைத்துள்ளனர். இருப்பினும் தேவகி உடல் பாதி எரிந்த நிலையில் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் தேவகி வசித்த பகுதி கலசபாக்கம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் இதுதொடர்பாக கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தேவகியின் சகோதரி இந்திரா காந்தி மற்றும் அவரது மகன் மணிகண்டனிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.அப்போது இந்திரா காந்தி" நான் தான் தேவகி மீது மண்ணெண்னை ஊற்றி எரித்துக் கொலை செய்தேன் "என்று தெரிவித்தார். எதற்காக தேவகியை கொலை செய்தார்? என்று கேட்டபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் பெரும் தொல்லையாக இருப்பதாக கருதி கொலை செய்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் இந்திராகாந்தியை கைது செய்தனர்.
மேலும் சொத்து பிரச்சினைகள் காரணமாக தேவகி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.இந்த சம்பவம் மங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை அருகே உள்ள தென்மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. அவரது மனைவி செல்வி. இவரது வீட்டுடன் கூடிய கட்டிடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை திறக்க வந்துள்ளனர். அப்போது கட்டிடத்தின் உரிமையாளரான செல்வி, அவரது கணவர் ஏழுமலை மற்றும் குழந்தைகளுடன் கடையை திறக்கவிடாமல் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவரது கணவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கடை ஏன் பூட்டி இருக்கிறது என்று தகராறு செய்ததாகவும், அவர்கள் மீது போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் கடையை திறக்கவிடுவோம் என்று தெரிவித்தனர். இதனால் நேற்று மாலை வரை டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை.
இதனால் மது பிரியர்கள் பலர் கடைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மாலை 6.30 மணி அளவில் கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து போலீசில் கேட்டபோது, கட்டிட உரிமையாளருக்கு கள்ளச்சந்தையில் மதுபானம் விற்க மதுபானம் கொடுக்க சூப்பர்வைசர் மறுத்ததால் அவர்கள் டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
பெண்களுக்கு சம உரிமை கொடுத்துவிட்டோம் என்பதெல்லாம் வெறும் பெயரளவில்தான் உள்ளது. பெண் குழந்தைகளுக்கு செல்லுமிடமெல்லாம் பல்வேறு பாலியல் தொல்லைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் எந்த சட்டமும் கடுமையாக இல்லாததால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெண்களை போதப்பொருளாக கருதும் வக்கிர எண்ணம் பலரிடமும் உள்ளது.
அவர்களை படிக்கும் பள்ளி, வேலை பார்க்கும் அலுவலகம், குடியிருக்கும் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தவறாக பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இதில் சில பெண்கள் மட்டுமே தப்பிக்கின்றனர். பலர் வலையில் சிக்கிய புள்ளிமான்களாக வாழ்க்கையை இழக்கின்றனர்.
இது பெண்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. சமீபகாலமாக சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் செயல் அதிகரித்து வருகிறது. பெண் குழந்தைகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும், மனதைரியம் இல்லாததும் இத்தகைய செயல்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதுபோன்ற செயல்களால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
திருவண்ணாமலையில் ஒன்றுமறியாத பிளஸ்1 மாணவியை திருமணமான வாலிபர் ஒருவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கர்பபமான மாணவி அவமானம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாதிக்கப்பட்ட மாணவி கடந்த சில ஆண்டுகளாக சென்னை மகாபலிபுரம் அருகில் பட்டிப்புலம் பகுதியில் செயல்படும் பழங்குடியினர் நலத்துறை உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து வந்தார். அவர் பிளஸ்-1 படித்து வந்த நிலையில் கொரோனா பரவல் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை வந்து தனது பெற்றோருடன் தங்கியிருந்தார்.
பின்னர் கடந்த அக்டோபர் மாதம் பள்ளிக்குச் சென்றார். அந்த மாணவிக்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விடுதி வார்டன் மாணவியிடம் விசாரித்துள்ளார்.
பின்னர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மாணவியை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்து அவரிடம் வயிற்று வலி தொடர்பாக பெற்றோர் விசாரித்துள்ளனர்.
இதற்கு பதில் அளிக்க மறுத்த மாணவி எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அதில் மாணவி கர்ப்பமானது தெரியவந்தது. சுய நினைவு இல்லாமல் சிகிச்சை பெற்று வந்த மாணவிக்கு நேற்று முன்தினம் சுய நினைவு திரும்பியது.
இதுபற்றி அறிந்த போலீசார் மாணவியிடம் அவரது கர்ப்பத்துக்கு காரணமான நபர் யார்? என்பது குறித்து கேட்டனர். அவர்களுக்கு பதில் கூற முடியாத நிலையில் தன்னை கர்ப்பமாக்கிய நபரின் பெயரை எழுதி காட்டினார்.
அதன்பேரில் மாணவி வசித்த வீட்டின் அருகில் குடியிருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது ஹரிபிரசாத் மாணவியுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அவள் தனிமையில் இருந்தபோது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஹரி பிரசாத் திருமணமானவர். டிரைவராக வேலை பார்த்து வரும் இவர் காதல் திருமணம் செய்தவர் என்று கூறப்படுகிறது. இவரின் காம பசிக்கு இரையான மாணவி பரிதாபமாக உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மாணவியின் தவறு எதுவுமில்லை. படித்து நல்ல நிலைக்கு வர வேண்டிய ஒரு மாணவியின் உயிரை வாலிபரின் வக்கிரம் பலியாக்கிவிட்டது. இதுபோன்ற சம்பவங்களில் உண்மை வெளியில் தெரிந்தால் அவமானம் என்று பெண்கள் கருதுவதால் ஆண்கள் பலர் தைரியமாக குற்றங்களில ஈடுபடுகின்றனர்.
எனவே பெண் குழந்தைகளிடம் விழிப்புணர்வையும், மன தைரியத்தை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
இந்த வழக்கில் மாணவி கர்ப்பமானதை மறைத்ததாக தலைமை ஆசிரியர் குமரகுருபரன், வார்டன் செண்பகவள்ளியையும் போலீசார் கைது செய்தனர்.






