என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த மின் கம்பங்கள்.
புயலில் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும்
ராமச்சந்திரபுரம் கிராமத்தில் புயலால் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் ஊராட்சியில் ராமச் சந்திரபுரம் கிராமத்தில் கடந்த ஆண்டு 2021-ல் ஏற்பட்ட புயல் மழையால் அப்பகுதியில் உள்ள தெருவிளக்கு மின் கம்பங்கள் சேதமடைந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ரேணு மூலமாக, காட்டுக்காநல்லூர் மின் வாரிய அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும், தற்போது வரை சீரமைக்கவில்லை.
இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரத்தில் இருட்டில் தவிக்கும் நிலை உள்ளது. மேலும் விஷஜந்துகள் நடமாட்டம் உள்ளதால் சிறியோர் முதல் பெரியோர் வரை நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர்.நேற்று 19-ந்தேதி காலை காட்டுக்காநல்லூர் மின் வாரிய உதவி பொறியாளர் முருகேசனிடம், ஊராட்சி மன்ற தலைவர் ரேணு நேரில் சென்று புகார் செய்தார்.
அப்போது உதவி பொறியாளர் முருகேசன் கூறுகையில்:-
எங்களிடம் மின் கம்பம் சப்ளை இல்லை. வந்தவுடன் புதிய மின் கம்பங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
கடந்த ஒரு ஆண்டாக இதுபோன்ற நிலை உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தும் மின் வாரிய அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் ரேணு தெரிவித்தார்.
இதுசம்பந்தமாக மின் வாரிய அதிகாரிகள் காட்டுக்காநல்லூர் கிராமத்தில் ராமச்சந்திரபுரம் கிராமத்தில் சேதமடைந்த மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






