என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  பனியால் பரவும் நோய்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலையில் பனியால் வேகமாக பரவும் நோய்களால் பொதுமக்கள் ஏறலமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. இதனால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

  இதன் காரணமாக திருவண்ணா மலை மருத்துவக் கல்லூரி மருத்து வமனை மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.

  அதிகளவில் கொரோனா பரவிவரும் நிலையில் பனிக்கால நோய்களும் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். 

  ஒரே குடும்பத்தில் பலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவதால் மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. சில ஆஸ்பத்திரிகளில் நூற்றுக்கணக்கானவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  பெரிய மருத்துவ மனைகளில் தினமும் ரூ.1000&க்கும் மேல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. பணி நோய் பரவல் காரணமாக பெண்கள், முதியவர்கள், சிறுவர்-சிறுமியர் வெளியில் வராமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். 

  திருவண்ணாமலை அருகில் உள்ள அடிஅண்ணாமலை, அத்தியந்தல், தேவனந்தல், ஆடையூர், பண்டிதபட்டு, ஆணாய் பிறந்தான, தேனிமலை, நல்லவன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான மக்கள் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு நோய்கள் பரவிய வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

  எனவே கிராமங்கள் மற்றும் நகரங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Next Story
  ×