என் மலர்
திருவண்ணாமலை
ஆரணியில் யூரியா தட்டுப்பாட்டை போக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என வேளாண்மை அலுவலகம் முன்பு கண்ணை கட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள வேளாண்மை துறை அலுவலகம் முன்பு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் யூரியா தட்டுபாட்டை போக்க ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இதில் மாவட்ட அளவில் விவசாய சாகுபடி 4 லட்சம் கரும்பு விவசாயம் 50ஆயிரம் ஏக்கர் உள்ளிட்ட 5லட்சம் அதிகமாக யூரியா மூட்டை வேளாண்மை துறை சார்பில் வழங்கபட்டதாகவும் ஆனால் ஆரணி சுற்றியுள்ள 17யூரியா விற்பனைசெய்யும் கடைகளில் யூரியா மூட்டை தட்டுபாடு நிலவி வருகின்றன.
தற்போது 265 ரூபாய் விற்பனை செய்ய வேண்டிய யூரியா மூட்டை 650&700 ரூபாய் கள்ள சந்தையில் விற்பனை செய்யபடுவதால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து ள்ளதாகவும் இதற்கு வேளாண்மை துறை அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர்.
மேலும் இதனை கண்டிக்கும் விதமாக விவசாயிகள் ஒன்றிணைந்து விவசாய சங்க மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் கண்ணை கட்டி கொண்டு யூரியா விற்பனை செய்யபடும் கடை உரிமையாளர்களிடம் யூரியா கேட்பதும் போன்றும் அதற்கு வியாபாரிகள் மறுப்பதும் போன்று தத்ரூபமாக நடித்து காட்டி நூதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் யூரியா தட்டுபாட்டை போக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
பள்ளி மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ரமேசை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த மருத்துவாம்பாடியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30) திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி பக்கத்து வீட்டில் வசிக்கும் 9-ம்வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி ஒருவரை தனது வீட்டுக்கு ஆசைவார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுபற்றி தனது தாயிடம் சொல்லி அழுதுள்ளார். இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் திருவண்ணாமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்பரசி வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ரமேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.
மேலும் அவர் இதுபோல் வேறு சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாரா? என்பது தொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை அடுத்த மருத்துவாம்பாடியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30) திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி பக்கத்து வீட்டில் வசிக்கும் 9-ம்வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி ஒருவரை தனது வீட்டுக்கு ஆசைவார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுபற்றி தனது தாயிடம் சொல்லி அழுதுள்ளார். இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் திருவண்ணாமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்பரசி வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ரமேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.
மேலும் அவர் இதுபோல் வேறு சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாரா? என்பது தொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலைஅருகே தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் ஓம் சக்தி நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.இதனால் இந்த பகுதியில் வசித்து வரும் 500&க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று பகலிலும் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.அது மட்டுமின்றி இரவிலும் மின்தடை ஏற்பட்டது. எதற்காக மின்தடை செய்யப்படுகிறது? என்பது தெரியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காலையும் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் வீட்டில் தங்கள் பணிகளை செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். குழந்தைகள், முதியவர்கள் ஓய்வெடுக்க முடியாமல் தவித்தனர்.மேலும் பல்வேறு அலுவலக பணிகளும் பாதிக்கப்பட்டது.
எனவே அறிவிக்கப்படாத இந்த மின் தடைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
சொத்து வரி உயர்வை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட செயலாளர் தூசி.மோகன் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், எஸ் ராமச்சந்திரன் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் காங்கிரசார் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் காங்கிரசார் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் செங்கம் குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் புருஷோத்தமன் வரவேற்றார்.
போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காமராஜ், அண்ணாச்சி சின்னத்துரை, குப்பன், இந்திரா பிரியன், முருக பூபதி, குணசேகரன், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வினோதினி, மாவட்ட பொருளாளர் சண்முகம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பெண் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
ஆரணி அருகே ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி:
பெட்ரோல் டீசல் நாளுக்கு நாள் விலை உயர்வு மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு டோல்கேட் கட்டணம் உயர்வு மருந்து விலை உயர்வு உள்ளிட்டவை விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஆகியோர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் உள்ள பஸ் நிலையம் அருகில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட துணை தலைவர் அப்பாசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஆரணி அக்ராபாளையம் சாலையிலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து பிணத்தை சுமந்து கொண்டும் செல்வதை போல் ஊர்வலமாக சென்று சேவூர் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆட்டோவை கையிறு கட்டி இழுத்துச் சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50&க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சாத்தனூர் அணையில் இருந்து 105 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாகும். தற்போது இந்த அணையில் 97.50 அடி தண்ணீர் உள்ளது.
கோடை காலம் தொடங்கி விட்டதால் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சாத்தனூர் அணை பாசனத்திற்காக இன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் உத்தரவுபடி இன்று காலை சாத்தனூர் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை கால்வாயில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார்.
அப்போது கலெக்டர் முருகேஷ், கூடுதல் கலெக்டர் பிரதாப்,துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி ,பெ.சு.தி.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷனி மற்றும் செயற்பொறியாளர் சாம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் சாத்தனூர் அணை பாசன நிலங்கள் 7 ஆயிரத்து 743 ஏக்கருக்கு இடது மற்றும் வலது புற கால்வாய்களில் முறையே வினாடிக்கு 140 கன அடி மற்றும் வினாடிக்கு 160 அடி ஆக மொத்தம் 300 கன அடி வீதம் இன்று முதல் வருகிற 19.5.202 வரை 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேலும் திருக்கோவில் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு பகுதியில் 5ஆயிரம் ஏக்கருக்கு இரண்டாம் போக சாகுபடிக்கு 800 மில்லியன் கன அடி நீரினை நீர் பங்கீடு விதிகளின்படி ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விவசாயிகளின் கோரிக்கையின்படி தேவைப்படும் பொழுது மூன்று தவணைகளில் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
எனவே பாசன நீரினை சிக்கனமாகவும் துறை பணியாளர்களின் அறிவுரையும் சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைக்குமாறு பாசன ஆயக்கட்டுதாரர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
அறிவிக்கப்பட்ட தேதிக்கு மேலும் எக்காரணத்தைக் கொண்டும் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் தேதி நீட்டிக்க படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்த பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் உத்தரவின்படி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் 105 ஏரிகள் நிரப்பப்பட்டு விவசாய பாசனத்திற்கு தண்ணீர் விடப்படும்.
இதன் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 12 ஆயிரத்து 543 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். உரிய காலத்தில் தண்ணீர் திறப்பதால் பயிர்கள் கருகாமல் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
திருவண்ணாமலை அருகே இரவில் ஏற்பட்ட 3 மணிநேர திடீர் மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் நேற்று இரவு 8மணிக்கு திடீரென மின்தடை ஏற்பட்டது.
இந்த மின் தடை 11 மணிவரை 3மணி நேரம் நீடித்தது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
பலர் வீட்டுக்குள் இருக்க முடியாமல் வெளியில் வந்தனர். சிலர் மொட்டை மாடிக்கு சென்று மின் இணைப்பு கிடைக்கும் வரை காத்திருந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக அறிவிப்பில்லாத மின்தடை ஏற்பட்டதில்லை. ஆனால் தற்போது பகல் இரவு என்று அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. பொது மக்கள் தெரிவித்து வேதனைப்பட்டனர்.
மேலும் இதுபோன்று தொடர்ந்து மின்தடை ஏற்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.
திருவண்ணாமலை வனப்பகுதியில் அத்துமீறி நுழைபவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நகரப்பகுதியையொட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு மான்கள், மயில்கள், பாம்புகள், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகளை பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமும் வனப்பகுதியில் ரோந்து சென்று வனவிலங்கு வேட்டை ஈடுபடுபவர்களை பிடித்து அபராதம் மற்றும் சிறை தண்டனை விதித்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் மத்தியில் வனவிலங்குகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேலூர் வனப்பாதுகாவலர் சுஜாதா அறிவுரையின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின்பேரில் வனத்துறை சார்பில் 50-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகள் வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. அந்த விழிப்புணர்வு அறிவிப்பு பலகையில் கூறப்பட்டிருப்பதாவது:-
காப்பு காட்டில் அத்துமீறி உள்ளே நுழைவது வன சட்டப்படி குற்றமாகும். காப்பு காட்டிற்குள் மது அருந்துதல், புகை பிடித்தல், மரங்களை வெட்டுதல், கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுதல், மணல் அள்ளுதல், நில ஆக்கிரமிப்பு, தீ வைத்தல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.
வனவிலங்குகளுக்கு தின்பண்டங்களை கொடுக்க கூடாது. வன விலங்குகளை வேட்டை யாடுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும் வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களை 40 கி.மீ.வேகத்திற்குள் இயக்கி செல்ல வேண்டும். அதிவேகத்தில் வாகனங்களை இயக்ககூடாது.
இந்த வன விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும் வன குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பற்றி பொதுமக்கள் 99653 07101, 88387 61144, 04175- 25 4018 ஆகிய தொலைபேசி எண்களில் புகார்களை தெரிவிக்கலாம். அதன்பேரில் வனத்துறை சார்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி வனச்சரகர் சீனிவாசன் கூறும்போது, வன குற்றங்களைத் தடுக்கும் வகையில் கிரிவலப்பாதையில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட உள்ளது.
ஏற்கனவே இப்பணிகள் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் வனத்துறை விதிகளை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
தண்ணீர் திறப்பு மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 105 ஏரிகள் பயன்படுவதோடு, 12 ஆயிரத்து 643 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற உள்ளன.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய்கள் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.
இதேபோல திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியிலுள்ள 5 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகிறது. இவைத்தவிர 105 ஏரிகளும் நீர் ஆதாரத்தை பெற்று வருகின்றன.
தற்போது அணையின் நீர்ப்போக்கு மதகுகளில் 20 அடி உயர இரும்பு ஷட்டர்கள் புதிதாக அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அணையின் உயரமான 119 அடி உயரத்திற்கு இந்த ஆண்டு நீரைத்தேக்கி வைக்க முடியவில்லை.
தற்போது கோடைகாலம் என்பதால் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், பாசன வசதி பெறும் நிலங்களின் அருகில் உள்ள 105 ஏரிகள் நீராதாரம் பெரும் வகையிலும் இன்று முதல் வருகிற மே மாதம் 19-ந்தேதி வரை அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய் மூலம் தண்ணீரை திறந்துவிட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று காலை 9 மணி அளவில் பாசனத்திற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தண்ணீரை திறந்து விடுகிறார். வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 622.80 கன அடி தண்ணீரும், இடதுபுற கால்வாய் மூலம் 544.32 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 ஏரிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 56 ஏரிகளும், திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில் 15 ஏரிகளும் என மொத்தம் 105 ஏரிகள் பயன்படுவதோடு, 12 ஆயிரத்து 643 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற உள்ளன.
சேத்துப்பட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜா அசேன் கலந்துகொண்டு பேசினார். சேத்துப்பட்டு நகர தலைவர் ஜாபர்அலி வரவேற்றார்.
இதில் சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து கியாஸ் சிலிண்டரை பாடைகட்டி பட்டாசு வெடித்து மேளம் அடித்தவாறு சவ ஊர்வலம் போல் கொண்டு வந்தனர்.
பின்னர் மாட்டு வண்டியில் இருசக்கர வாகனத்தை மேலே வைத்து கட்டி காமராஜர் சிலையில் இருந்து சேத்துப்பட்டு நான்கு முனை சந்திப்பு வரை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பின்னர் கியாஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் வந்தவாசி தெள்ளாறு போளூர் தேவிகாபுரம் ஆரணி சேத்துப்பட்டு உள்பட பகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை ஈசானிய மைதானம் பகுதியில் போலீசார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற தலைக்கவச விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி தொடக்கவிழா நேற்று காலை நடைபெற்றது.
இதில் கலெக்டர் முருகேஷ், கூடுதல் கலெக்டர் பிரதாப், டாக்டர் கம்பன், ஏ.எஸ்.பி.கிரண் சுருதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகன பேரணி அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதிகளை வலம் வந்து மீண்டும் ஈசனானிய மைதானத்தை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு பேசும்போது, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்வது அவசியம்.
இதேபோல் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும்.இதன்மூலம் விபத்து உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என்றார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் பேசும்போது, தலைக்கவசம் அணிவதில் வாகன ஓட்டிகள் மெத்தனமாக இருக்க கூடாது. தலைக்கவசம் உயிர்க்கவசமாக உதவும். உங்களை நம்பியிருக்கும் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருக்க தலைக்கவசம் அணிவதை மறக்காமல் கடைபிடியுங்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பும் சமூக ஆர்வலர்கள் 4 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப் பட்டது.
மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கு ஸ்டேட் வங்கி சார்பில் இலவசமாக தலைக்கவசம் வழங்கப் பட்டது.






