என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேளாண்மை அலுவலகம் முன்பு கண்ணை கட்டி விவசாயிகள் போராட்டம் செய்த காட்சி.
ஆரணியில் யூரியா தட்டுப்பாட்டை போக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டி விவசாயிகள் போராட்டம்
ஆரணியில் யூரியா தட்டுப்பாட்டை போக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என வேளாண்மை அலுவலகம் முன்பு கண்ணை கட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள வேளாண்மை துறை அலுவலகம் முன்பு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் யூரியா தட்டுபாட்டை போக்க ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இதில் மாவட்ட அளவில் விவசாய சாகுபடி 4 லட்சம் கரும்பு விவசாயம் 50ஆயிரம் ஏக்கர் உள்ளிட்ட 5லட்சம் அதிகமாக யூரியா மூட்டை வேளாண்மை துறை சார்பில் வழங்கபட்டதாகவும் ஆனால் ஆரணி சுற்றியுள்ள 17யூரியா விற்பனைசெய்யும் கடைகளில் யூரியா மூட்டை தட்டுபாடு நிலவி வருகின்றன.
தற்போது 265 ரூபாய் விற்பனை செய்ய வேண்டிய யூரியா மூட்டை 650&700 ரூபாய் கள்ள சந்தையில் விற்பனை செய்யபடுவதால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து ள்ளதாகவும் இதற்கு வேளாண்மை துறை அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர்.
மேலும் இதனை கண்டிக்கும் விதமாக விவசாயிகள் ஒன்றிணைந்து விவசாய சங்க மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் கண்ணை கட்டி கொண்டு யூரியா விற்பனை செய்யபடும் கடை உரிமையாளர்களிடம் யூரியா கேட்பதும் போன்றும் அதற்கு வியாபாரிகள் மறுப்பதும் போன்று தத்ரூபமாக நடித்து காட்டி நூதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் யூரியா தட்டுபாட்டை போக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story






