என் மலர்
திருவண்ணாமலை
கலசபாக்கம் அருகே பர்வதமலை கோவில் உண்டியல் உடைத்து பணத்தை திருடி சென்றனர்.
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பருவதமலை உச்சியில் மல்லிகார்ஜுனர் உடனுறை பிரமராம்பிகை கோவில் உள்ளது.
இக்கோயிலுக்கு பவுர்ணமி நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.
கோவில் சாமி சன்னதி முன்பு பக்தர்களின் காணிக்கை உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் அடிக்கடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு அதில் உள்ள பணத்தை திருடி சென்று விடுகின்றனர்.
இதேபோல் நேற்றுமுன்தினம் இரவு கோவில் உண்டியல் மர்ம நபர்கள் உடைத்து. அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக அப்பகுதி பக்தர்கள் கூறுகையில்:-
பருவதமலை மீது வைக்கப்பட்ட உண்டியலில் பக்தர்கள் அதிகமாக காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அடிக்கடி உண்டியலை உடைத்து பல லட்சம் ரூபாய்களை திருடி சென்று விடுகின்றனர்.
தற்போது உடைக்கப்பட்டு உள்ள உண்டியலை வெளியில் சொல்லாமல் மறைப்பதற்காக காட்டன் துணி மூலம் திருடுபோன உண்டியலை முழுவதும் மூடி வைத்துள்ளனர்.
மேலும் உண்டியலில் இருந்து எவ்வளவு பணம் திருடு போயுள்ளது என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்டியலை உடைத்து திருடும் சம்பவத்தை தடுக்கும் வகையில் சிசிடி கேமராக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி அ.ம.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் சொத்து வரி உயர்வை திடீரென 150 சதவீதம் உயர்த்தியது கண்டித்தும், வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் அம்மா முன்னேற்ற கழகம் சார்பில் திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பரந்தாமன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் நெடுமாறன், திருவண்ணாமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேஸ்வர ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் அருணை எம்.கோவிந்தன் 21-வது வட்ட செயலாளர் அருண் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது “தமிழக அரசு திடீரென உயர்த்தியுள்ள 150 சதவீத சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். பொதுமக்களை பாதிக்கும் இது போன்ற அதிகவரி உயர்வு நடவடிக்கையை கைவிட வேண்டும்.
மேலும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்“ என்று கோஷம் எழுப்பப்பட்டது.
பின்னர் மாவட்டச் செயலாளர் பரந்தாமன் கூறும்போது, மக்கள் பிரச்சினைக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் களத்தில் இறங்கி போராடும். மத்திய, மாநில அரசுகள் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்க வேண்டும். தமிழகத்தில் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆரணி அருகே ஆட்டோ, கார் மோதி 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சித்தேரி கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா (வயது21) வித்யா (21), சுவாதி (22) ஆகியோர் ஆரணி டவுன் பஜார் வீதியில் உள்ள துணிகடையில் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று இரவு பணியை முடித்துவிட்டு ஓன்றாக ஆரணியிலிருந்து தனது கிராமத்திற்கு ஆட்டோவில் சென்றனர். சேத்துபட்டில் இருந்து ஆரணி நோக்கி வந்த கார் துந்தரீகம்பட்டு கிராமத்தின் கூட்ரோடு அருகே வந்த போது கார் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
சித்தேரி கிராமத்தை 3பெண்கள் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஸ்ரீதர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நெசல் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் படுகாய மடைந்தவர்களை மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஸ்ரீதர் சீனிவாசன் ஆகியோர் மேல்சிகிச்கைக் காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 25 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி விழா 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி காலம் வருகிற 16-ஆம் தேதி அதிகாலை 2.33 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 1.16 மணி வரையாகும். இதனை முன்னிட்டு பல்வேறு சிறப்பு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று கிரிவலப்பாதை முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து கலெக்டர் முருகேஷ் சித்ரா பவுர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 25 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கவும், கிரிவலம் செல்லும் பக்தர்கள் வசதிக்காக மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு கருவிகள், 24 மணி நேரம் மின்சார வசதி, அவசர மருத்துவ வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏதுவாக 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 70 நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ளன. அன்னதானம் செய்ய விரும்புவோர் https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் மூலமாக வரும் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுதவிர பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் வருவதற்கு வசதியாக சென்னை, வேலூர், விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, மதுரை, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதியில் இருந்து 6 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும் சிறப்பு ரெயில் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
கிரிவலப்பாதையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை பக்தர்கள் தவிர்க்கவேண்டும். கிரிவலப் பாதையை பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி விழா 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி காலம் வருகிற 16-ஆம் தேதி அதிகாலை 2.33 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 1.16 மணி வரையாகும். இதனை முன்னிட்டு பல்வேறு சிறப்பு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று கிரிவலப்பாதை முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து கலெக்டர் முருகேஷ் சித்ரா பவுர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 25 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கவும், கிரிவலம் செல்லும் பக்தர்கள் வசதிக்காக மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு கருவிகள், 24 மணி நேரம் மின்சார வசதி, அவசர மருத்துவ வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏதுவாக 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 70 நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ளன. அன்னதானம் செய்ய விரும்புவோர் https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் மூலமாக வரும் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுதவிர பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் வருவதற்கு வசதியாக சென்னை, வேலூர், விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, மதுரை, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதியில் இருந்து 6 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும் சிறப்பு ரெயில் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
கிரிவலப்பாதையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை பக்தர்கள் தவிர்க்கவேண்டும். கிரிவலப் பாதையை பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் நீட்டிப்பு
செய்யாறில் வீதியில் இறந்து கிடந்த மயில் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்யாறு:
செய்யாறு டவுன் பெரிய தெருவில் மணி என்பவர் வீட்டு காலி இடத்தில் பெண் மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதனைகண்டு அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
செய்யாறு சரக வனவர் பாபு சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மயிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். யாராவது மயிலை கொன்று வீசி இருப்பார்களா? அல்லது நோய் வாய்ப்பட்டு இறந்ததா? என ஆய்வு செய்தார்.
இறந்த மயிலை பிரேத பரிசோதனை செய்து வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் புதைத்தனர்.
செய்யாறு அருகே மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள பெரும்பாலை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது40). இவர் மரம் வெட்டும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவருக்கு சித்திரா (30), என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் சேட்டு பெரும்பாலையில் சபாபதி என்பவர் புளியமரத்தில் புளியம்பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறி உலுக்கிய போது கால் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சித்ரா அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை மரங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள் பக்தர்கள் மனதை கவர்கின்றன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஏராளமான மரங்கள் உள்ளன. இங்கு சீசனுக்கு பூத்துக்குலுங்கும் மரங்களும் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு மரங்கள் நிழல் குடை போல் உதவுகின்றன.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மரங்கள் முழுவதும் மலர்களாக காட்சி தரும் சில மரங்களும் கிரிவலப்பாதையில் உள்ளன. அவைகளில் தற்போது சீசனையொட்டி மரங்கள் முழுவதும் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காஞ்சி ரோடு பிரியும் இடம் அருகில் சில மரங்களில் இதுபோல் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
மேலும் பல மரங்களில் தற்போது மலர்கள் பூத்துக் குலுங்குகிறது.அது கிரிவலம் வரும் பக்தர்கள் மற்றும் அந்த வழியில் வாகனங்களில் செல்லும் மக்கள் மனதை பெரிதும் கவர்கிறது. அந்த இடம் வந்ததும் பொதுமக்கள் பலர் வாகனங்களை நிறுத்தி போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.
மேலும் சிலர் குடும்பத்துடன் செல்பி எடுக்கின்றனர். இந்த காட்சிகளை காணும் மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தூய்மை பணி நடைபெற்றது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இன்று திருவண்ணாமலை 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையை தூய்மைப்படுத்தும் பணியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
பின்பு கூறுகையில்:-
வரும் சித்ரா பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதை ஒட்டி அவர்களின் நலன் கருதி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சுமார் 14 கிலோமீட்டர் நகராட்சி சார்பில் 6 குழுக்களாகவும் ஒன்றியங்களின் சார்பில் 10 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 16 குழுக்கள் மற்றும் தூய்மை அருணை நீர்த்துளி இயக்கம் சாந்தி மலை டிரஸ்ட் ஆகிய சமூக அமைப்புகளும் இணைந்து சுமார் 2 ஆயிரம் பணியாளர்கள் கொண்டு தூய்மைப்படுத்தும் பணியை இன்று காலை தொடங்கப் பட்டுள்ளன.
மேலும் பக்தர்களின் வசதிக்காக கழிவறை தடையில்லா மின்சாரம் குடிநீர் வசதிகளை ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரதாப் திமுக மருத்துவ அணி துணை தலைவர் கம்பன் நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திக் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதரன் கிரி எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குப்பநத்தம் அணை திறப்பால் 9432 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
செங்கம்:
குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தண்ணீர் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து 47 ஏரிகளுக்கு விவசாய பாசனத்திற்காக 26 நாட்களுக்கு 578.12 மிக கனஅடி தண்ணீர் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
குப்பநத்தம் அணையில் 700 மி.கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது அடிப்படை தேவையான குடிநீர் அணை பராமரிப்பு மற்றும் நீர் ஆவியாதல் மூலம் ஏற்படும் இழப்புகள் சேர்த்து 106.52 மி.கன அடி தண்ணீர் தேவை அணையில் மீதமுள்ள 593.08 மில்லியன் கன அடி தண்ணீர் பாசனத்திற்காக இருப்பு நிலையில் செங்கம் புதுப்பாளையம் கலசபாக்கம் ஒன்றியங்களில் உள்ள 47 ஏரிகளில் குறைந்த அளவு தண்ணீர் கொள்ளளவு நிரப்பும் பொருட்டு 18 நாட்களுக்கு 265 கன அடி தண்ணீரும் மீதமுள்ள 18 நாட்களுக்கு 240 கன அடி தண்ணீர் ஆக மொத்தம் 26 நாட்களுக்கு 678.12 மிக கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 கிராமங்களில் 9432 ஏக்கர் விவசாயம் பயன்பெறும் என தெரிவித்தார்.
எனவே தண்ணீரை சிக்கனமாக துறை பணியாளர்கள் அறிவுறுத்தல்களையும் சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சலைப் பெற்றுப் பயனடைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலெக்டர் முருகேஷ், சி.என் அண்ணாதுரை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவ சான்றிதழ் கேட்டு மாற்று திறனாளிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் மாற்று திறனாளிகளுக்கு அரசு வழங்கும் பஸ் மற்றும் ரயில் ஆகியவற்றில் குறைந்த கட்டணத்திற்கு மருத்துவ சான்றிதழ் பெற அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் சங்கத்தை சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்டோர் ஆரணி அரசு மருத்துவ மனையில் மருத்துவ சான்றிதழ் பெற வரிசையில் காத்திருந்தனர்.
மேலும் தலா 10 நபர்களுக்கு மட்டும் மருத்துவ சான்றிதழ் வழங்க முடியும் மற்றவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் பெற்று கொள்ள அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தன.
இதனால் ஆத்திரமடைந்த மாற்றுதிறனாளிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஓன்றுணைந்து ஆரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்ப முயன்றனர்.
ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் மாற்றுதிறனாளிகள் கலைந்து சென்றனர்.
பின்னர் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் பேசி மாற்று திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ் பெற வழிவகை செய்யதனர்.இதனால் ஆரணி அரசு மருத்துவ மனையில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டன.
திருவண்ணாமலை அருகே வேட்டை கும்பலிடம் மான்கறி வாங்கி விற்ற சிறுவனுக்கு வனத்துறையினர் ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணா மலையையையொட்டி வனப்பகுதிகள் உள்ளன. மலைப் பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
மேலும் பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.அவைகளைப் பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நரிக்குறவர்கள் சிலர் ரகசியமாக வனப்பகுதிக்குள் சென்று மான்களை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறையினர் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின்பேரில் வனச்சரகர் சீனிவாசன் மற்றும் வனத்துறையினர் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று திருவண்ணாமலை வேலூர் சாலையில் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு சிறுவனை மடக்கி வனச்சரகர் சீனிவாசன்-விசாரணை மேற்கொண்டார். அப்போது அந்தச் சிறுவன் 5 கிலோ மான் கறியை வைத்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட அதிரடி விசாரணையில் கொண்டம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நரிக்குறவர்களுடன் தொடர்பு வைத்து அவர்கள் வேட்டையாடி வரும் மான்கறியை வாங்கி விற்பனை செய்து வந்ததும், பிடிபட்ட சிறுவன் கார்த்திகேயனின் மகன் என்பதும் தெரியவந்தது.
சிறுவன் கொடுத்த தகவலின் பேரில் கொண்டம் பகுதிக்கு சென்று வனத்துறையினர் மான் வேட்டையாடும் கும்பலை பிடிக்க சென்றனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.
பின்னர் பிடிபட்ட சிறுவனை மாவட்ட வன அலுவலர் அருண்லால் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு மான் கறி வாங்கிய குற்றத்திற்காக ரூ 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அருகே காப்பு கட்டி கூத்தாண்டவர் கோவில் திருவிழா தொடங்கியது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வட்டம் தேவனூர் ஊராட்சியில் 100 ஆண்டுக்கும் மேலாக மக்கள் வழிபட்டு வரும் பழமையான கூத்தாண்டவர் கோவிலில் திருவிழா ஊர் பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் கொரானா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. பங்குனி மாதம் கடைசி வாரம் காப்புகட்டி விழா தொடங்கப்பட்டு சித்திரை மாதம் முதல் வாரத்தில் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்று வருவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 5&ந்தேதி காப்பு கட்டி தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழா 15 நாட்களுக்கு நடைபெறும். இதில் 12 நாட்களுக்கு மகாபாரத சொற்பொழிவு நடைபெறும். வருகின்ற 18-ஆம் தேதி முன்னூற்று மங்கலம் பக்காசுரன் சோறு கொண்டு போகும் விழா நடக்கிறது.
இதைத்தொடர்ந்து 19 -ஆம் தேதி காலையில் அம்மனுக்கு கூழ் வார்க்கும் நிகழ்ச்சியும், இரவு 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்று கூத்தாண்டர் தாலிகட்டும் நிகழ்ச்சியும், கரகாட்டம் வாணவேடிக்கையுடன் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.
பின்னர் 20-ந்தேதி கூத்தாண்டவர் வீதி உலா காலையில் தொடங்கி மாலை 6.30 மணி வரை நடைபெறும். பின்னர் திருநங்கைகள் தாலி அறுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
விழுப்புரம் மாவட்டத்தில நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழாவுக்கு அடுத்து தேவனூர் கூத்தாண்டவர் கோவில் திருவிழா பிரசித்தி பெற்றது ஆகும். இவ்விழாவில் பெருமணம், மணலூர்பேட்டை, தாங்கள், செல்லங்குப்பம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொள்வார்கள்.






