என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    சேத்துப்பட்டு அருகே செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தத்தனூர் கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் பஞ்சவர்ணம் தீட்டப்பட்டு இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவிலின் முன்பு யாகசாலை பந்தல் அமைத்து 108 கலசம் வைத்து பல்வேறு நதியிலிருந்து கொண்டு வரப்பட்டது.

    பின்னர் புனிதநீர் சிவாச்சாரியார்கள் மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் மீது உள்ள கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினர்.

    அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    செய்யாறு அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.3 லட்சம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செய்யாறு:

    செய்யாறு டவுன் காந்தி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 54). இவர் வெம்பாக்கம் அடுத்த பில்லாந் தாங்கல் பகுதியில் டாஸ்மாக் கடையில் மேற்பார்-வையாளராக பணியாற்றி வருகிறார்.

    பன்னீர்செல்வமும் விற்பனையாளர் நேதாஜியும் வழக்கம்போல் நேற்று இரவு கடையை மூடி விட்டு ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 850 ஐ எடுத்துக் கொண்டு சென்றனர். 

    அப்போது பன்னீர் செல்வம் வெம்பாக்கம் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் குருநாதன் என்பவரை பைக்கில் அழைத்துக் கொண்டு செய்யாறு வழியாக சுமங்கலி ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பைக்கை நிறுத்தி அவர்கள் மீது மிளகாய் பொடி தூவினர். பின்னர் குரு நாதனையும், பன்னீர் செல்வத்தையும் சரமாரியாக அந்த கும்பல் தாக்கியது.

    பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 850 ஐ பறித்துக் கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து பன்னீர்செல்வம் மோரணம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.
    செம்மாம்பாடி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறன், எழுதும் திறன் குறித்து வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் கல்வி வட்டாரத்திலுள்ள செம்மாம்பாடி அரசு நடுநிலைப்பள்ளியில் 1-ம்வகுப்பு முதல் 8-ம்வகுப்பு வரை 146 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இவர்களுக்கான ஆண்டு ஆய்வு நடந்தது இதில் மாணவர்களின் தமிழ் ஆங்கிலம் வாசித்தல் திறன் எழுதும் திறன் மற்றும் கணித அடிப்படை செயல்-பாடுகள் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் ஆகிய-வற்றை பெரண-மல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் மாணவர் களிடம் ஆய்வு செய்தார்.

    முன்னதாக மாணவர்-களின் கையெழுத்து 2 வரி 4 வரி நோட்டுகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களின் ஆங்கிலம் வாசிப்பு திறன் குறித்து மாணவர்களிடம் நேரடியாக கேள்விகள் கேட்டு ஆய்வு செய்தார். 
    திருவண்ணாமலையில் வீடு கட்டும் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என கட்டிடத் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருவண்ணாமலை:

    தமிழ் மாநில கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில சிறப்பு பொதுக்குழு மற்றும் அவசர செயற்குழு கூட்டம் திருவண்ணா-மலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில் பொதுச்செயலாளர் சுப்பு கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் வீடு கட்டும் திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதனை சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தகுதியான பதிவு செய்த தொழிலாளர்களுக்கு பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வருகிற 1-ந் தேதி மே தின கொடியேற்று விழா நடத்தி மாநிலம் முழுவதும் மே தின விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அதன்படி மாநில தலைவராக முருகன், துணைத் தலைவர்களாக நயினப்பன், சம்பந்தம்,

    மாது அப்பாசாமி, பொதுச்செயலாளராக சுப்பு மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட பொருளாளர் கோபி நன்றி கூறினார்.
    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை நகருக்குள் 15 முதல் 17-ந்தேதி வரை பஸ்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வருகிற 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது இதையொட்டி சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வருகிற16-ஆம் தேதி அதிகாலை 2.32 25 மணிக்கு தொடங்கி 17-ஆம் தேதி அதிகாலை 1:17 மணிக்கு நிறைவடைகிறது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்-பட்டுள்ளது.

    இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், கூடுதல் கலெக்டர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஏ.எஸ்.பி.கிரண் ஸ்ருதி, டி.எஸ்.பி.குணசேகரன், கோவில் உதவி ஆணையர் ராஜேந்திரன், பொறியாளர் முனுசாமி, நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.பொதுக் கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்கவும், மினி லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். பொது சுகாதாரத்துறை சார்பில் முதலுதவி சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

    மேலும் வடக்கு மண்டலத்தை சேர்ந்த மாவட்டங்களில் இருந்து சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், அவர்களை தங்க வைக்க பள்ளிகள், கல்லூரிகளில் தேவையான வசதிகள் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    சித்ரா பவுர்ணமியில் கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,806 சிறப்பு பஸ்கள், 6,086 முறையும், தனியார் பஸ்கள் 509 முறையும் இயக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    சென்னை வழித்தடத்தில் மட்டும் அதிகபட்சமாக 932 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும் சிறப்பு பஸ்கள் அனைத்தும் வரும் 16-ஆம் தேதி அதிகாலை முதல் 17-ஆம் தேதி வரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும்15-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை நகருக்குள் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. 

    9 இடங்களில் அமையும் தற்காலிக பஸ் நிலையங்கள் வரை சிறப்பு பஸ்கள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்-பட்டது.மேலும் கார், வேன் நிறுத்துவதற்காக நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் 45 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
    திருவண்ணாமலையில் நெல் கொள்முதல் நிலைய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகாண வேண்டும் என விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    என் எம் ஆர் உழவர் பேரவை சார்பில் திருவண்-ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் தங்களுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்து சாக்குமூட்டையில் நின்று கொண்டு தத்தித்தத்தி செல்லும் நூதன போராட்டம் நடத்தினர்.

    இந்தப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதுபற்றி விவசாயிகள் கூறும்போது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மின்தடை, லாரி தடை, தினக்கூலி பிரச்சினை, உள்ளூர் விடுமுறை, ஞாயிறு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கொண்டு செல்லும் நெல் மூட்டை-களை எடை போட்டு வாங்கு-வதற்கு 10 நாட்கள் வரை ஆகிறது.

    தமிழக அரசு சிப்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட கூலி ரூ.3.25 - ஐ உயர்த்தி ரூ.10 வழங்குவதாக அறிவித்தது. இந்த தொகை ஒரு மாதத்திற்கு பின்பே வழங்கப்படும் என்பதால் எடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்-றனர். இதனால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங் களிலும் சுமார் 6 ஆயிரம் மூட்டைகள் தேங்கியுள்ளது.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்-டில் ஈடுபட்ட வியாபாரிகள் கைது செய்யப்-பட்டனர். இந்த நிலையில் மேற்படி முறை கேட்டுக்கு காரணமான அதிகாரிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    தற்போது நெல் அறுவடை செய்து தனியாரிடம் விற்பனை செய்த விவசாயிகளுக்கும் கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று தருகிறார்.இதை வியாபாரிகள் பயன்படுத்தி நெல் விற்பனை செய்கின்றனர்.

    மேலும் எடை போடும் கூலி பணியாளர்களின் ஆதார் எண், வங்கி கணக்கு எண் பெற்று எடை கூலி பணத்தை வங்கி கணக்கில் ஒரு வாரத்திற்குள் செலுத்தி கண்காணிப்பு செய்தால் மட்டுமே ஊழல் மற்றும் முறைகேட்டை தடுக்க முடியும்.

    எனவே அரசு நியமனம் செய்துள்ள கண்காணிப்பு கமிட்டி உறுப்பினர் செயல்பாடு இல்லாமல் உள்ளதை கண்டித்து செயல்பாட்டு க்கு கொண்டுவர கலெக்டரை கேட்டுக் கொள்-கிறோம் என்று தெரிவித்தனர்.
    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மகளிர் குழு பெண்கள் தயாரிக்கும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வார்கள். 

    இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி காலம் வருகிற 16-ந் தேதி அதிகாலை தொடங்கி 17-ந் தேதி அதிகாலை வரை இறுப்பதால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் திருவண்ணாமலையை அடுத்த வேங்கிகாலில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை மகளிர் குழு பெண்கள் தயாரித்த கைவினை பொருட்களின் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. 

    இந்த கண்காட்சியை கூடுதல் கலெக்டர் பிரதாப் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அவர் மகளிர் குழு பெண்கள் தயாரித்த பொருட்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும் சில பொருட்களை மகளிர் குழுவினர் தயாரிக்க ஆலோசனைகள் வழங்கினார்.

    இந்த கண்காட்சியில் ஜவ்வாது மலையில் கிடைக்கும் தேன், சாமை உள்ளிட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் மகளிர் குழுவினர் தயாரித்த தின்பண்டங்கள் மற்றும் எண்ணெய் வகைகள், ஒயர்களால் பின்னப்பட்டிருந்த அழகியகூடைகள், பட்டுச் சேலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம்பெற்றிருந்தன. 

    கண்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் சுலைமான், வட்டார இயக்க மேலாளர் ஆனந்தன் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    பெரணமல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர்கள், சமூக நிறுவன ஒருங்கிணைப்பு செய்தல் குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஊராட்சி அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்களை ஒருங்கிணைப்பு செய்தல் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

    ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன் தலைமை தாங்கிய குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) வெங்கடேசன் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சந்தோஷ் குமார் வரவேற்றார்.

    பயிற்சியில் ஊராட்சி அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்களை ஒருங்கிணைப்பு செய்தல் மற்றும் கிராம வளர்ச்சி குறித்து பயிற்சி அளிக்கப்-பட்டது. பயிற்சியை மாவட்ட பயிற்றுநர்கள் உமா ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    முகாமில் ஊராட்சி மன்ற தலைவர், கிராம கூட்டமைப்பு அளவிலான தலைவர், செயலாளர், பொருளாளர், கிராம வறுமை ஒழிப்பு செயலாளர், விவசாய உற்பத்தியாளர் கூட்டமைப்பு தலைவர், உற்பத்தி குழு சமூக வலை பயிற்றுநர் உள்பட 6 பேர் கொண்ட ஒரு குழுவாக அமைத்து இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சியில் 11 குழுக்களாக ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சிகளில் உள்ள அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அனைவருக்கும் பயிற்சி கையேடுகள் பேனா ஆகியவை வழங்கப்பட்டது. முடிவில் உதவியாளர் லோகேஷ் நன்றி கூறினார்.
    திருவண்ணாமலையில் பஸ் படிகட்டில் தொங்கி ஆபத்தான பயணம் மாணவர்கள் செய்து வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் அரசு பள்ளிகள், அரசு கலைக் கல்லூரி மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிப்பதற்காக திருவண்ணாமலை சுற்றுப்புற பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவ -மாணவிகள் அரசு பஸ்களில் வருகை தருகின்றனர். 

    இவர்களுக்கு காலை, மாலை நேரங்களில் அரசு பஸ்களில் இலவச பயணம் செய்ய இடம் கிடைப்பதில்லை. தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளி வாகனங்களில் சென்று விடுகின்றனர்.

    ஆனால் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ &மாணவிகள் அரசு பஸ்களை நம்பிய வருவதால் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

    காலை நேரத்தில் பல்வேறு பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் கூட்டம் பஸ்சில் அதிகமாக இருப்பதால் மாணவ மாணவிகள் ஏற முடியாமல் தவிக்கின்றனர். 

    மாணவிகள் முன்னுரிமை அடிப்படையில் பஸ்சுக்குள் சென்றுவிடுகின்றனர். ஆனால் மாணவர்கள் பஸ்சில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே பயணம் செய்கின்றனர். படியில் பயணம் நொடியில் மரணம் என்று எச்சரிக்கை வாசகம் பெயரளவில் எழுதப்பட்டுள்ளது.

    பஸ்சின் கம்பிகளை பிடித்துக்கொண்டு கால்களை வைக்க இடமில்லாமல் மாணவர்கள் பயணம் செய்கின்றனர். ஒவ்வொரு நிறுத்தத்தில் பஸ் நிற்கும் போதும் இறங்கி ஏறுகின்றனர். இந்த பயணம் உயிருக்கு ஆபத்தானதாக இருக்கிறது.

    சமீபத்தில் ஒரு மாணவன் பஸ் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து இறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு இலவச பயணம் உள்பட பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்த போதும் மாணவ- மாணவிகளுக்கு தனி பஸ் வசதி ஏற்படுத்தி தராமல் இருப்பது மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

    தினமும் பள்ளி செல்லும் மாணவன் நல்லபடியாக திரும்பி வருவானா? என்று பெற்றோர்கள் தவிக்கும் சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. 

    எனவே இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று மாணவ - மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவண்ணாமலை நகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை அவசர மற்றும் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார். 

    துணைத் தலைவர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி வரவேற்றார். கூட்டத்தில் 38 நகர் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

    இதில் அ.தி.மு.க. சார்ந்த 6 உறுப்பினர்களில் 4 பேர் சொத்துவரி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்து வந்தனர். இதில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட சொத்துவரி சீராய்வு செய்தற்கான குழு பல்வேறு காரணிகளை ஆராய்ந்து தற்போது சொத்துவரி சீராய்வு செய்து அவசியம் என அரசிற்கு பரிந்துரை செய்து உள்ளது. இதையடுத்து சொத்துவரி, காலிமனை வரி சீராய்வு செய்வதற்கான குழுவின் பரிந்துரைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    சொத்துவரி உயர்வு காரணிகள் குறித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட 16 இடங்களில் உள்ள இலவச கழிவறைகள் பொதுமக்கள் நன்கு சுகாதாரத்துடன் பயன்படுத்தும் வகையில் கட்டண கழிவறைகளாக மாற்றம் செய்வது, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தற்காலிக பஸ் நிலைகளில் குடிநீர் விநியோகம், மின்விளக்கு வசதிகள், கழிப்பிட வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்வது, குடிநீர் வசதிக்காக குழாய்கள், ஆழ்துளைகள் அமைப்பது, சாலை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. 

    அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த வார்டு உறுப்பினர் பழனி பேசுகையில், தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக சொத்து வரி உயர்த்த மாட்டோம் என்று தெரிவித்தனர். தற்போது சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. 

    எனவே சொத்து வரி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளி நடப்பு செய்கிறோம் என்று அ.தி.மு.க. வை சேர்ந்த 6 வார்டு உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

    தொடர்ந்து மற்ற வார்டு உறுப்பினர் ஒப்புதலின் பேரில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இதில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவண்ணாமலையில் விறகு அடுப்பை எரிய வைத்து மக்கள்நீதி மய்யம் பெண் தொண்டர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:
     
    திருவண்ணாமலையில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த பெண்கள் சிலிண்டருக்கு முன்பு ஒப்பாரி மற்றும் விறகு அடுப்பை எரிய வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட மக்கள் நீதிமய்யம் சார்பில் சொத்துவரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும், வரி உயர்வை திரும்ப பெற கோரியும், பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல், கியாஸ் (சமையல் எரிவாயு) ஆகியவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருவண்ணாமலை தென்கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.அருள், வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை செயலாளர்கள் வி.சுகானந்தம், வந்தவாசி மணிவேல், பொருளாளர் ராஜ்குமார், நகர செயலாளர் எம்.ஆர்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சொத்துவரி உயர்வை திரும்ப பெற கோரியும், பெட்ரோல், டீசல், கியாஸ் (சமையல் எரிவாயு) விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

    மேலும் விலை உயர்வால் இனி சமையல் கியாஸ் தாங்கமுடியாது என்று பெண்கள் ஒப்பாரி வைத்தும், விறகு அடுப்பை எரிய விட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாவட்ட அணி அமைப்பாளர்கள் ஏ.ஆர். கமல் வெங்கடேஷ், பாலகணேஷ், வி.அரிகரன், சுனில்குமார், டாக்டர் விஜயகுமார், மகாசரவணன், சுகாஷினி, தங்கராஜ், ஆரணி பாலன், ஒன்றிய செயலாளர்கள் தில்லை ராமகிருஷ்ணன், ஜெ.ரமேஷ், வெல்கம் முருகன், மாநில துணை அமைப்பாளர்கள் ஏ.ரஞ்சித்குமார், பி.பந்தலராஜ் குமார், ஆட்டோ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆனந்த் பாபு, தேவராஜ், பன்னீர, ; கார்த்தி, பாலாஜி, ஆடிட்டர் சரண், பூக்கடை சரவணன், போளுர் சக்திவேல், தங்கராஜ், மணி, இளைஞரணி சணமுகம், சண்முகம், ஐ.டி.சூர்யா, தீபன், அருள், கூத்தலவாடி சுரேஷ் உள்பட ஏராளமான மக்கள் நீதிமய்ய நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர்கள் கலந்து கொண்டனர். 

    முடிவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சக்தி தினகரன் நன்றி கூறினார்.
    சேத்துப்பட்டு அல்லியாளமங்கலம் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள அல்லியாள மங்கலம் கிராமத்தில் கெங்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவிலில் யாகசாலை அமைத்து 108 கலசம் வைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் கலசத்தை வைத்து பூஜை உள்ளிட்ட 3 கால யாக பூஜைகள் செய்யப்பட்டது.

    பின்னர் புனிதநீர் கலசத்தை மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரம் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்.

    பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். பின்னர் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர். 

    இதில் போளூர் மண்டகொளத்தூர் சேத்துப்பட்டு தேவிகாபுரம் மட்டைபிறையூர் பெரணம்பாக்கம் ஆகிய சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ×