என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டம் அல்லியாள மங்கலம் கிராமத்தில் கெங்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்த போது எடுத்த
சேத்துப்பட்டு அல்லியாளமங்கலம் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சேத்துப்பட்டு அல்லியாளமங்கலம் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள அல்லியாள மங்கலம் கிராமத்தில் கெங்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவிலில் யாகசாலை அமைத்து 108 கலசம் வைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் கலசத்தை வைத்து பூஜை உள்ளிட்ட 3 கால யாக பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் புனிதநீர் கலசத்தை மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரம் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்.
பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். பின்னர் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.
இதில் போளூர் மண்டகொளத்தூர் சேத்துப்பட்டு தேவிகாபுரம் மட்டைபிறையூர் பெரணம்பாக்கம் ஆகிய சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






