என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி பெண்தொண்டர்கள் விறகுஅடுப்பை எரியவைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது
    X
    திருவண்ணாமலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி பெண்தொண்டர்கள் விறகுஅடுப்பை எரியவைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது

    திருவண்ணாமலையில் விறகு அடுப்பை எரிய வைத்து மக்கள்நீதி மய்யம் பெண் தொண்டர்கள் நூதன போராட்டம்

    திருவண்ணாமலையில் விறகு அடுப்பை எரிய வைத்து மக்கள்நீதி மய்யம் பெண் தொண்டர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:
     
    திருவண்ணாமலையில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த பெண்கள் சிலிண்டருக்கு முன்பு ஒப்பாரி மற்றும் விறகு அடுப்பை எரிய வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட மக்கள் நீதிமய்யம் சார்பில் சொத்துவரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும், வரி உயர்வை திரும்ப பெற கோரியும், பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல், கியாஸ் (சமையல் எரிவாயு) ஆகியவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருவண்ணாமலை தென்கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.அருள், வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை செயலாளர்கள் வி.சுகானந்தம், வந்தவாசி மணிவேல், பொருளாளர் ராஜ்குமார், நகர செயலாளர் எம்.ஆர்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சொத்துவரி உயர்வை திரும்ப பெற கோரியும், பெட்ரோல், டீசல், கியாஸ் (சமையல் எரிவாயு) விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

    மேலும் விலை உயர்வால் இனி சமையல் கியாஸ் தாங்கமுடியாது என்று பெண்கள் ஒப்பாரி வைத்தும், விறகு அடுப்பை எரிய விட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாவட்ட அணி அமைப்பாளர்கள் ஏ.ஆர். கமல் வெங்கடேஷ், பாலகணேஷ், வி.அரிகரன், சுனில்குமார், டாக்டர் விஜயகுமார், மகாசரவணன், சுகாஷினி, தங்கராஜ், ஆரணி பாலன், ஒன்றிய செயலாளர்கள் தில்லை ராமகிருஷ்ணன், ஜெ.ரமேஷ், வெல்கம் முருகன், மாநில துணை அமைப்பாளர்கள் ஏ.ரஞ்சித்குமார், பி.பந்தலராஜ் குமார், ஆட்டோ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆனந்த் பாபு, தேவராஜ், பன்னீர, ; கார்த்தி, பாலாஜி, ஆடிட்டர் சரண், பூக்கடை சரவணன், போளுர் சக்திவேல், தங்கராஜ், மணி, இளைஞரணி சணமுகம், சண்முகம், ஐ.டி.சூர்யா, தீபன், அருள், கூத்தலவாடி சுரேஷ் உள்பட ஏராளமான மக்கள் நீதிமய்ய நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர்கள் கலந்து கொண்டனர். 

    முடிவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சக்தி தினகரன் நன்றி கூறினார்.
    Next Story
    ×