என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வீடு கட்டும் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும்- கட்டிடத் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

    திருவண்ணாமலையில் வீடு கட்டும் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என கட்டிடத் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருவண்ணாமலை:

    தமிழ் மாநில கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில சிறப்பு பொதுக்குழு மற்றும் அவசர செயற்குழு கூட்டம் திருவண்ணா-மலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில் பொதுச்செயலாளர் சுப்பு கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் வீடு கட்டும் திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதனை சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தகுதியான பதிவு செய்த தொழிலாளர்களுக்கு பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வருகிற 1-ந் தேதி மே தின கொடியேற்று விழா நடத்தி மாநிலம் முழுவதும் மே தின விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அதன்படி மாநில தலைவராக முருகன், துணைத் தலைவர்களாக நயினப்பன், சம்பந்தம்,

    மாது அப்பாசாமி, பொதுச்செயலாளராக சுப்பு மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட பொருளாளர் கோபி நன்றி கூறினார்.
    Next Story
    ×