என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு தூய்மைப்படுத்தும் பணியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்த காட்சி.
    X
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு தூய்மைப்படுத்தும் பணியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்த காட்சி.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தூய்மை பணி

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தூய்மை பணி நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து இன்று திருவண்ணாமலை 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையை தூய்மைப்படுத்தும் பணியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

    பின்பு கூறுகையில்:-

    வரும் சித்ரா பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதை ஒட்டி அவர்களின் நலன் கருதி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சுமார் 14 கிலோமீட்டர் நகராட்சி சார்பில் 6 குழுக்களாகவும் ஒன்றியங்களின் சார்பில் 10 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 16 குழுக்கள் மற்றும் தூய்மை அருணை நீர்த்துளி இயக்கம் சாந்தி மலை டிரஸ்ட் ஆகிய சமூக அமைப்புகளும் இணைந்து சுமார் 2 ஆயிரம் பணியாளர்கள் கொண்டு தூய்மைப்படுத்தும் பணியை இன்று காலை தொடங்கப் பட்டுள்ளன.

    மேலும் பக்தர்களின் வசதிக்காக கழிவறை தடையில்லா மின்சாரம் குடிநீர் வசதிகளை ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. 

    நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரதாப் திமுக மருத்துவ அணி துணை தலைவர் கம்பன் நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திக் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதரன் கிரி எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×