என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    ஆரணியில் பரபரப்பு இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகள் ஓட்டம் பிடித்தார்.
    ஆரணி:

    ஆரணி புதுகாமூர் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்த நிலையில் அவர் ஒரு நாள் கூட கணவருடன் வாழாமல் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    பெற்றோர் அவரை சமா தானம் செய்து வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்தனர். அவர்களுக்கு இன்று ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை கடைக்கு செல்வதாக. கூறிவிட்டு சென்ற மணமகள் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக் காததால் அவரது தந்தை, ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணமகள் மாப்பிள்ளை பிடிக்காதால் ஓட்டம் பிடித்தாரா அல்லது வேறு வாலிபருடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருகே களை கட்டிய கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் திருநங்கைகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே தேவனூரில் 100 ஆண்டுக்கும் மேலாக மக்கள் வழிபட்டு வரும் பழமையான கூத்தாண்டவர் கோவில் உள்ளது.-இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேவனூர் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த பங்குனி மாதம் கடைசி வாரத்தில் காப்புகட்டி விழா தொடங் கியது. இதைத்தொடர்ந்து கடந்த 19-ந் தேதி காலையில் அம்மனுக்கு கூழ் வார்க்கும் நிகழ்ச்சியும், இரவில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு கூத்தாண்டர் தாலிகட்டும் நிகழ்ச்சியும், கரகாட்டம் மற்றும் வாணவேடிக் கையுடன் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

    பின்னர் நேற்று (20&ந்தேதி) காலையில் கூத்தாண்டவர் வீதி உலா தொடங்கி மாலை 6.30 மணிவரை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து திருநங்கைகள் தாலி அறுக்கும் நிகழ்ச்சி மாலையில் நடந்தது. இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். இதனால் திருவிழா களைகட்டி காணப்பட்டது.

    தேவனூர் கூத்தாண்-டவர் கோவில் திருவிழா கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது ஆகும். இவ்விழாவில் பெருமணம், மணலூர்-பேட்டை, தாங்கல், செல்லங்குப்பம் உள்ளிட்ட சுற்றுப்-பகுதிகளை சேர்ந்த 20&க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். 

    இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்களது வேண்டுதல்படி ஆடு, சேவல்களை காணிக் கையாக செலுத்தினர்.

    மேலும் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கழுத்தில் மாலை அணிந்து ஊர்வலமாக சென்றனர். இவ்விழாவில் வெரையூர் இன்ஸ்பெக்டர் அழகுராணி தலைமையில் 25 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் அமைக்க கோரி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அண்ணாசிலை அருகில் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க கோரி வியாபாரிகள் ஒன்றிணைந்து கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அதிக அளவில் வருவாய் ஈட்டித்தரும் நகரமாக விளங்குகிறது.

    பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் 2-வது பெரிய நகரமாக ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் அமைக்க கோரி முன் வைத்து ஆரணி சேத்துபட்டு, கண்ணமங்கலம், பெரணமல்லூர் ஜமுனாமுத்துர் உள்ளிட்ட பகுதியில் உள்ள அனைத்து சங்க வியாபாரிகள் ஒன்றுணைந்து அரசின் போராட்டத்தில் ஈடுபட்டடனர். 

    ஆரணியை தலையிடமாக கொண்டு மாவட்ட வேண்டும் என கோஷங்கள் எழுப்பியும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த சுமார் 200&க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
    மணமகளுக்கு மாப்பிள்ளை பிடிக்காதால் ஓட்டம் பிடித்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி புதுகாமூர் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்த நிலையில் அவர் ஒரு நாள் கூட கணவருடன் வாழாமல் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    பெற்றோர் அவரை சமாதானம் செய்து வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்தனர். அவர்களுக்கு இன்று ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மணமகள் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை, ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணமகள் மாப்பிள்ளை பிடிக்காதால் ஓட்டம் பிடித்தாரா அல்லது வேறு வாலிபருடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    மாணவன் ரெயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை அடித்து கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் ஸ்ரீராம்நகரை சோந்தவர் வெங்கடேசன் சிமெண்டு வியாபாரி. இவரது மனைவி செல்வி தம்பதிக்கு மகன் முத்துராஜ் (23), தேன்ராஜ் (21), விஜயராஜ் (20) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

    இதில் தேன்ராஜ் வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு மாணவன் தினந்தோறும் களம்பூரில் இருந்து ரெயிலில் சென்று வந்தார்.

    நேற்று கல்லூரிக்கு சென்ற தேன்ராஜ் வீடு திரும்பவில்லை. இதனால் வெங்கடேசன் மகனை தேடி கடம்பூர் ரெயில் நிலையத்திற்கு சென்றார்.

    அங்கு தேன்ராஜ் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். ரெயிலை விட்டு இறங்குவது இடது புறம் ஆனால் தண்டவாளத்தின் வலது புறத்தில் தேன்ராஜ் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து வெங்கடேசன் கதறி அழுதார்.

    இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் மாணவன் பிணத்தை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவன் ரெயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை அடித்து கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவன் உடலில் காயங்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர்.

    இந்த சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கீழ்பென்னாத்தூரில் ஒய்வூதியர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஒய்வூதியர் சங்கம் கீழ்பென்னாத்தூர் வட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கீழ்பென்னாத்தூர் தாலுக்கா அலுவலகம் எதிரில், செயலாளர் வில்வநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

    ராஜகோபால், துணை தலைவர் வாசு, ஏழுமலை (சத்துணவு), பொருளாளர் லஷ்மி சந்திரன்,  வடிவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    சேத்துப்பட்டு அருகே மாரியம்மன் கோவில் சித்திரை விழாவில் பக்தர்கள் கையில் குழந்தையுடன் பறக்கும் காவடியில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த குப்பம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்திரை மாத கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது. காலையில் மகா மாரியம்மனுக்கு நெய், சந்தனம், குங்குமம், விபூதி, இளநீர், ஆகியவை மூலம் பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. 

    மகாமாரி-யம்மனை பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து டிராக்டரில் வைத்து நேர்த்திகடனாக விரதம் இருந்த இளைஞர்கள் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கொண்டு டிராக்டரை இழுத்தவாறு முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். 

    குப்பம் கிராமத்தில் உள்ள மாட வீதியாக மகாமாரி அம்மன் வீதி உலா நடந்தது. மகா மாரியம்மன் பூ கரகம் ஜோடிக்கப்பட்டு பம்பை உடுக்கை மேளதாளத்துடன் மகாமாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தது.

    பின்னர் கோவில் முன்பு 40 அடி உயரத்தில் ஊஞ்சல் அமைக்கப்பட்டு மகா மாரியம்மன் பல்வேறு வண்ண மலர் அலங்கா-ரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    அப்போது பக்தர்கள் பறக்கும் காவடியில் ஊஞ்சலில் கையில் குழந்தையுடன் பறந்து வந்து மகா மாரியம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

     அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது மலர்களை தூவினர். பின்னர் கோவிலின் முன்பு வைக்கப்-பட்டிருந்த கொப்பரையில் பெண்கள் வீட்டில் இருந்து கூழ் கொண்டு வந்து அதில் ஊற்றினர். பின்பு மகா மாரியம்மனுக்கு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு கூழை பிரசாதமாக  வழங்கினர்.

    பின்னர் இரவில் மகா மாரியம்மன் வீதி உலா வந்தார்.  இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குப்பம் கிராம நாட்டாண்மை தாரர்கள் விழாக்குழுவினர் இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    திருவண்ணாமலையில் ஒரேநாளில் 3 வீடுகளில் 11 பவுன் நகை, ரூ.89 திருவண்ணாமலையில் ஒரேநாளில் 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு Theft of jewelery and money from 3 houses in one day in Thiruvannamalaiஆயிரத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பகுதியில் ஒரேநாளில் 3 வீடுகளில் 11 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்-றனர். திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார், திருப்பூர் தனியார் நிறுவனத் தில் பணிபுரிகிறார்.

    இவரது மனைவி சரண்யா, தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் வழக்கம்போல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, சரண்யா பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பினார்.  

    அப்போது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 20 கிராம் தங்க நகைகள் மற்றும் 356 ஆயிரம் திருட்டு-போனது தெரியவந்தது. ஆனால் வீட்டின் பூட்டு திறக்கப்படாமல் பூட்டியே இருந்துள்ளது. 

    அதிர்ச்சியடைந்த சரண்யா திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சாவியை பயன்படுத்தி வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்ற மர்மநபர்கள், பீரோவை உடைத்து நகைகளை திருடிக்கொண்டு மீண்டும் வீட்டை பூட்டி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை காமாட்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சேதுபதி மனைவி ராணி (64). இவர் சர்க்கரை நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கான மாத்திரையை நேற்று முன்தினம் சாப்பிட்டு வீட்டு சோபாவில் படுத்திருந்தார். சோர்வு அதிகரித்து மயங்கியதாக கூறப்படுகிறது. 

    வீட்டில் யாருமில்லாத நேரத்தில் நுழைந்த மர்மநபர்கள் மூதாட்டி ராணி அணிந்திருந்த 5 சவரன் தாலி சரடு மற்றும் 3 சவரன் செயின் ஆகியவற்றை அறுத்து கொண்டு தப் பிச்சென்றனர். 

    பின்னர், வீட்டுக்கு வந்த அவரது கணவர் சேதுபதி, மனைவி மயங்கிய நிலையில் இருப்பதையும் நகைகள் திருடுப்போனதும் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

    இதுகுறித்து திருவண்ணா-மலை டவுன் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

    திருவண்ணாமலை அடுத்த பவித்திரத்தை சேர்ந்த வர் கணேஷ் (38), சென்னை தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது பெற்றோர் ஆசைத் தம்பி, உத்திராம்பாள் ஆகியோர் வீட்டுக்கு வெளியே காற்றோட்டமாக படுத்திருந்தனர்.

    அப்போது, வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 8 கிராம் தங்க நகை, 100 கிராம் வெள்ளி மற்றும் 733 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கணேஷ் கொடுத்த புகாரின்பேரில் வெறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
    வேட்டவலத்தில் குட்கா விற்ற பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
    வேட்டவலம்:

    வேட்டவலம் எஸ்.சுமண் தலைமையில் போலீசார் நேற்று மாலை மாதா கோவில் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. 

    அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அங்கு 2 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 

    அவற்றை பறிமுதல் செய்து போலீசார் இது தொடர்பாக பெயிண்டர் எட்வர்ட் என்பவரை கைது செய்தனர்.
    ஊராட்சி நிதி முறைகேட்டில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவர் அதிகாரம் பறிக்கபட்டுள்ளது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கரைபூண்டி ஊராட்சி மன்ற தலைவராக இந்திரா என்பவர் பதவி வகித்து வந்தார். 

    இவர் ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கரைபூண்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 2வது வார்டு வேலு, 8-வது வார்டு பிரபாகரன், ஆகியோர் கலெக்டர் முருகேசனிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். 

    இதையடுத்து கலெக்டர் முருகேஷ் உத்தரவின் பேரில். கூடுதல் கலெக்டர் பிரதாப், ஊராட்சிகளின் செயலர் அறவாழி, உதவி இயக்குனர் சுரேஷ், (ஊராட்சி) சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணு-கோபால், கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு கரைபூண்டி ஊராட்சியில் நிதி குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    இதில் ஊராட்சி கணக்கு எண் 1 மற்றும் 2 முதல் 9 வரை உள்ள கணக்குகளில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. முறைகேடு குறித்து கரைபூண்டி ஊராட்சி மன்ற தலைவர் இந்திராவிடம், விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு முறையான விளக்கம் அளிக்காததால் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டது. 

    இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் ஊராட்சி கணக்கு எண் 1 மற்றும் 2 முதல் 9 வரை உள்ள அனைத்து ஊராட்சிகளின் கணக்குகளை முடக்கம் செய்து மேலும் அவருக்கு அளித்த அதிகாரம் பறிக்கப்பட்டது.

    மேலும் கரைபூண்டி ஊராட்சி மன்றத்திற்கு தனி அலுவலராக சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் என்பவரை நியமித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார். கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற ஆட்டோ டிரைவர் சாவில் மர்மம் நீடிப்பதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    கர்நாடக மாநிலம் கே.ஜி.எப்.கோரமண்டல் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 44) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி விமலா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் மஞ்சுநாத் கடந்த 14-ந் தேதி அன்று தனது நண்பர்களுடன் திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்வதற்காக- வந்துள்ளார்.-பின்னர் அவர் திருவண்ணா-மலையில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி உள்ளார்.

    மஞ்சுநாத்துக்கு கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு காலில் அடிபட்டு காயம் இருந்து வருவதால் அவரால் வெகுதூரம் நடக்க முடியாது என கூறப்படுகிறது. எனவே கடந்த 16-ந் தேதி மஞ்சுநாத்தை அவரது நண்பர்கள் அறையில் விட்டுவிட்டு அவர்கள் மட்டும் கிரிவலம் சென்றுள்ளனர்.

    இதையடுத்து மஞ்சுநாத் மனைவிக்கு போன் செய்து “திருவண்ணாமலைக்கு சென்றும் தன்னால் கிரிவலம் செல்ல முடியவில்லை “என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.

    பின்னர் அவரது செல்போன் திடீரென சுவிட்ச் ஆப் ஆகி விட்டது. அவரது மனைவி செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டும் இணைப்பு கிடைக்க--வில்லை. இதற்கிடையே. விடுதிக்கு வந்த அவரின் நண்பர்கள் மஞ்சுநாத்தை பல இடங்களில் தேடி பார்த்தனர்.ஆனால் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில் ஏந்தல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மஞ்சுநாத் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் மஞ்சுநாத் கிரிவலம் செல்ல முடியாத வேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதினர்.ஆனால் அவரது உடலில் காயம் இருந்ததால் சாவில் மர்மம் இருக்கலாம் என்றுஅவரது மனைவி புகார் செய்துள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாத் கிரிவலம் செல்ல முடியாததால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.
    சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.2.50 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்கு-வரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்-பட்டன. 

    இதை-யொட்டி திருவண்ணாமலைக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் சென்றனர்.

    பக்தர்கள் திருவண்ணா-மலைக்கு வருவதற்காகவும், இங்கிருந்து அவர்கள் தங்களது சொந்த ஊர் திரும்புவதற்காகவும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 1983 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 5 ஆயிரத்து 785 நடைகள் இயக்கப்பட்டன. 

    மேலும் பக்தர்கள் சிரமமின்றி கிரிவலப் பாதைக்கு சென்று வரும் வகையில் நகரின் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

    இந்த நிலையில் சித்ரா பவுர்ணமிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.இதன் மூலம் திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்திற்கு மட்டும் ரூ.1 கோடியே 50 லட்சம் டிக்கெட் மூலம் வசூலாகி இருப்பது தெரியவந்துள்ளது.
    ×