என் மலர்
திருவண்ணாமலை
கண்ணமங்கலம் நூலகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பகுதியில் உள்ள கிளை நூலகம் நாகமரத்தெருவில தனியார் கட்டிடத்தில் இடமாற்றம் செய்து, நேற்று 23 உலக புத்தக தின விழா நடைபெற்றது.
வாசகர் வட்டத்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த இவ்விழாவில், நூலகர் சிவசங்கரன் வரவேற்று பேசினார்.
இதில் வேலூர் மாவட்ட கருவூல கண்காணிப்பாளர் பூங்கொடி செல்வன், ஓய்வு பெற்ற நீதி மன்ற அலுவலர் பாலாஜி, உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவ மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் நூலக புரவலராக தலா ரூ.1000 செலுத்திய 10 பேருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 11-ம் வகுப்பு மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி:
ஆரணி பகுதி பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்.
அவரை மீட்டு பெற்றோர் தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து 1098 உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியை திருவண்ணாமலை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலிபர் ஒருவர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
அந்த வாலிபர் மாணவியுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வீடியோவை தனது நண்பர்களிடம் காட்டியுள்ளார்.
இதையடுத்து அவரது நண்பர்கள் 3 பேர் அந்த மாணவியிடம் வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி பகுதி பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்.
அவரை மீட்டு பெற்றோர் தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து 1098 உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியை திருவண்ணாமலை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலிபர் ஒருவர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
அந்த வாலிபர் மாணவியுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வீடியோவை தனது நண்பர்களிடம் காட்டியுள்ளார்.
இதையடுத்து அவரது நண்பர்கள் 3 பேர் அந்த மாணவியிடம் வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மாணவர்கள் விடுதிகளில் ஒதுக்கப்படும் நிதியில் முறைகேடுகளை தடுக்க கலெக்டருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், கலசப்பாக்கம், போளூர், சேத்துப்பட்டு, ஆரணி, வந்தவாசி, செய்யாறு, வெம்பாக்கம் உட்பட 12 வட்டாரத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் 49 விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
இதில் தாய் தந்தை இழந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கும் மாணவனுக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாயும், கல்லூரி மாணவனுக்கு 1100 ரூபாயும் அரசாங்கத்தால் ஒதுக்கப்படுகிறது, இதன் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள 49 விடுதிகளுக்கு மாணவர்களுக்கு 3 வேளையும் சத்தான உணவு வழங்குவதற்காக ஒரு மாதத்திற்கு 32 லட்சம் ஒதுக்கப்படுகிறது.
ஒவ்வொரு விடுதிக்கும் 55 மாணவர்கள் தங்கி படிக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. ஆனால் கீழ்பென்னாத்தூர், கரிக்கிலாம்பாடி, அண்டம் பள்ளம், வாளவெட்டி மற்றும் தச்சம்பட்டு உட்பட பல்வேறு விடுதிகளில் மாணவர்கள் பயிலாமலேயே தங்கி பயிலுவதாக விடுதி காப்பாளர்கள் போலியாக வருகைப் பதிவேடு தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாதா மாதம் பல ஆயிரம் ரூபாய் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியினை கையாடல் செய்வதாக மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இது சம்பந்தமாக மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் விடுதி காப்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வருவதாக பொதுமக்கள் குற்றச்சாற்றுகின்றனர்.
எனவே இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக சென்று விசாரணை நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
செங்கம்:
செங்கத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் மாநிலம் தழுவிய வட்டத் தலைநகர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ராஜன், ராஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வட்ட செயலாளர் பத்மநாபமூர்த்தி ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விளக்கவுரை அளித்தார்.
இதில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து.
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் பொருளாளர் அ.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
செங்கம் அருகே விபத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
செங்கம்:
செங்கம் அருகே உள்ள செ.நாச்சிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத் (வயது21). இவர் நேற்று மாலை செ.நாச்சிபட்டு கிராமத்திலிருந்து செங்கம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது முருகர் கோவில் அருகே திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த காரில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் லாரியில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
மேலும் இந்த விபத்து குறித்து செங்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரியும் இறந்த பிரசாத்தின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரியும் அவரது உறவினர்கள் பிரசாத்தின் உடலை எடுக்கவிடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து செங்கம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சரவணகுமரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்திய பின்பு பிரசாதின் உடலை செங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளை விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்த கழக பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை செட்டித்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்த கழக சேர்மன் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் எஸ்.பாண்டியன், வழக்கறிஞர் ஆர்.சக்திமுருகன், துணை செயலாளர் ஆர்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மல்யுத்த கழக செயலாளரும் மல்யுத்த பயிற்சியாளருமான ஏ.அருண்குமார் வரவேற்று பேசினார்.
திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்த கழக தலைவர் சீனி.கார்த்திகேயன் பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்து மல்யுத்த வீரர்களுக்கு விளையாட்டு பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ள சிறப்பு பேக் வழங்கி சிறப்புரையாற்றினார்.
முன்னாள் தமிழ்நாடு மல்யுத்த சங்க துணை செயலாளர் என்.சுரேஷ்குமார் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட எறிபந்து சங்க அமைப்பு செயலாளர் பி.உதயமுருகன், மாவட்ட மூத்தோர் தடகள சங்க இணை செயலாளர் டி.விஜய் ஆனந்த், மாவட்ட கேரம் சங்க செயலாளர் பி.ராஜா, மாவட்ட மல்யுத்த கழக துணைத் தலைவர் பி.விஜய்குமார், துணை செயலாளர் பி.சுரேஷ், சட்ட ஆலோசகர் டி.கிஷோர்குமார், மல்யுத்த கழக நிர்வாகிகள் ஜெ.கிரண்ராஜ், எஸ்.பாலமுருகன், ஆர்.வல்லரசு, எஸ்.முகமது சுல்தான் கே.சவன்ராஜ், எஸ்.பிரபா, ஜெ.ஹேமாமாலினி, ஆர்.வினோத் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட மல்யுத்த கழக பொருளாளர் பி.ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட அளவிலான மல்யுத்த போட்டி நடத்துவது, தமிழ்நாடு மல்யுத்த சங்கத்தில் திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்த கழக சங்கத்தை அனுமதித்து அங்கீகரிக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக மல்யுத்தத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் காவல்துறை, வனத்துறையில் பணியாற்ற வாய்ப்பு பெற்றவர்களை பாராட்டுவது, 4 திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக அகில இந்திய அளவில் நடைபெறும் மல்யுத்த போட்டியில் பங்கு பெற்ற வீரர்களை பாராட்டுவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் இலவசமாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும் மற்றும் மல்யுத்தத்தில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்கும் இலவச கோடை கால சிறப்பு மல்யுத்த பயிற்சி முகாம் நடத்துவது.
மாநில அளவிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியை விரைவில் திருவண்ணாமலையில் நடத்துவது என்று தீர்மானிக்-கப்பட்டது.
ரெயில்வே சுரங்க பாதை ரூ.5 கோடியில் சீரமைக்கபடும் என ஆரணி எம்.பி உறுதியளித்தார்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அம்மபாளையம் என்ற அப்பநல்லூர் கிராமத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2கோடி மதிப்பீட்டில் சுரங்கபாதை கட்டபட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையாலும் சுரங்கபாதை அருகில் உள்ள அம்மாபாளையம் கல் ஏரி என அழைக்கபடும் ஏரி நீர்வரத்து கால்வாய் ஊற்று தண்ணீர் சுரங்கபாதையில் தேங்கி வருவதால் பொதுமக்கள் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனம் செல்ல முடியாமல் சுரங்கபாதை துண்டிக்கபட்டன.
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் ரெயில்வே தண்டவாளத்தில் கடந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளன.
தற்போது இது சம்மந்தமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய அரசுக்கு அம்மாபாளையம் கிராம பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
இதன் எதிரொலியாக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணுபிரசாத் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் அம்மாபாளையம் ரெயில்வே சுரங்கபாதை நேரில் சென்று பார்வையிட்டனர்.
ரெயில்வே துறை மூலம் சுமார் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சரி செய்து விரைவில் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் முன்னாள் எம்.எல்.ஏ சிவானந்தம் கண்ணமங்கலம் சேர்மன் மகாலட்சுமி, ஆரணி நகராட்சி தலைவர் ஏ.சி.மணி, கண்ணமங்கலம் நகர செயலாளர் கோவர்தன், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் பிரசாத், மாவட்ட துணை தலைவர் அருணகிரி,
நகர தலைவர் ஜெயவேல், மாவட்ட ஆதிதிராவிட பிரிவு தலைவர் சேகர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பழகன் தட்சிணாமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரவி, ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன்,
ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சச்சிதானந்தம், ரெயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருவண்ணாமலையில் மது ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டத்தை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் நெடுந்தூர ஓட்டம் திருவண்ணாமலை காஞ்சிபுரம் மண்டபம் அருகில் நடந்தது-.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் 500 மாணவ, மாணவிகளுடன் கலெக்டர், எஸ்.பி. மற்றும் அதிகாரிகள் அண்ணா நுழைவாயில் வரை வந்தனர். பின்பு நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் பிரச்சாரம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வருவாய் கோட்ட அலுவலர் வெற்றிவேல் மதுவிலக்கு உதவி ஆணையாளர் குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கலசப்பாக்கத்தில் பைத்தியக்காரன் போல வேடமணிந்து நள்ளிரவில் மாடுகளை திருட வந்த வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டிவைத்தனர்.
கலசபாக்கம்:
கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் வெளிமாநிலத்தவர்கள் பைத்தியக்காரன் போல் வேடம் அணிந்து பகல் நேரங்களில் உலா வருகின்றனர்.
விவசாய நிலங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ள விலை உயர்ந்த பசுமாடுகளை நோட்டமிடுகின்றனர். பின்னர் இரவு நேரங்களில் மினி லாரி போன்ற வாகனங்களை கொண்டுவந்து அதில் ஏற்றி சென்று விடுகின்றனர்.
இது சம்பந்தமாக கலசப்பாக்கம் போலீசாருக்கு பல விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தும் இதுவரைக்கும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு கலசபாக்கம் அடுத்த பெரியகிளாம்பாடி ஊராட்சியில் நேற்று மாலை வாகனம் ஒன்றில் இருந்து வெளிமாநில வாலிபர் ஒருவரை இறக்கி விட்டு அந்த வண்டி உடனடியாக அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது.
வண்டியிலிருந்து இறங்கிய வெளிமாநில வாலிபர் பார்ப்பதற்கு பைத்தியக்காரன் போல் இருந்துள்ளான். இதுபற்றி கண்டுகொள்ளாத அப்பகுதி விவசாயிகள் தங்கள் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.
தொடர்ந்து இரவில் பெரியகிளாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் கோவில் அருகில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பசுமாட்டை பிடித்துள்ளார். இதை பார்த்த விவசாயி எதற்கு மாட்டை பிடிகிறாய் என்று கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் விவசாயியை தாக்கியுள்ளார். இதில் அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் கம்பத்தில் கட்டி வைத்து, கலசப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து வெளிமாநிலத்தை சேர்ந்த வாலிபரை விசாரணை செய்து பார்த்ததில் அவன் கழுத்தில் பல்வேறு கைகளை தொங்கவிட்டு இருந்தபடியும் மற்றும் அவன் வைத்திருந்த பையில் செல்போன் மற்றும் கூர்மையான கம்பிகளையும் வைத்து இருந்ததை போலீசார் பார்த்தனர்.
மேலும் அவனிடம் விசாரணை செய்தபோது அவன் ஹிந்தியில் பேசியுள்ளார்.
போலீசாருக்கு புரியாமல் அந்த வாலிபரை நீங்கள் யாராவது பைக்கில் அழைத்து வந்து ஸ்டேஷனுக்கு விடுங்கள் என்று பொதுமக்கள் இடம் போலீசார் கூறினர்.
பொதுமக்கள் அந்த வாலிபரை பைக்கில் நாங்கள் எப்படி அழைத்து வர முடியும். அவன் ஏற்கனவே எங்களை தாக்கி உள்ளான் பார்ப்பதற்கு பயமாக இருக்கிறது.
இதனால் எங்களால் அவனை அழைத்து வர முடியாது என பொதுமக்கள் கூறியுள்ளனர் போலீசார் நாங்கள் மட்டும் எப்படி அழைத்துச் செல்வது என்று கூறிவிட்டு இவன் ஒரு பைத்தியக்காரன் விட்டுவிடுங்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டனர்.
இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மாடு திருடிய வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தும் கண்டுகொள்ளாமல் போலீசார் சென்று விட்டதால் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விளக்குகளில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவனின் ஐம்பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படுகிறது.
இக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அருணாசலேஸ்வரர் கோவில் திருவிழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த விழாவின் போது அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த மகாதீபத்தை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து செல்வார்கள். அப்போது சிவன் அக்னி வடிவமாக காட்சி தருவதாக கூறுவார்கள்.
தீபத்துக்கு புகழ்பெற்ற இக்கோவிலில் சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதி முன்பு ஆயிரக் கணக்கான தீபம் ஏற்றும் வகையில் விளக்குகள் உள்ளன.
அவைகளை ஏற்றும் போது கோவில் தீப ஒளியில் ஜொலிக்கும்.ஆனால் பல நாட்கள் இந்த விளக்குகளில் தீபம் ஏற்றாமல் இருப்பதை காணும் பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.
தீபங்களை தினமும் ஏற்றுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். கேரள மாநிலம் குருவாயூரப்பன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கமாக உள்ளது.
அதே போல அக்னி ஸ்தலமாக அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் விளக்குகளில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரணி அரசு பள்ளியில் 3 குழந்தைகளை வெறி நாய் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2021-22ம் ஆண்டில் ஆங்கிலம் வழியில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரையில் சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இங்கு தற்போது 100 குழந்தைகளுக்கு 2 ஆசிரியை மட்டும் பாடம் நடத்துவதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஓரு ஆண் குழந்தையை பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறை அருகிலேயே வெறி நாய் கடித்து குதறியது.
இதில் படுகாயமடைந்த குழந்தை ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் நேற்று முன்தினம் ஓரு பெண் குழந்தையை மீண்டும் வெறி கடித்து குதறியது பின்னர் படுகாய-மடைந்த குழந்தையை ஆரணி அரசு மருத்துவ-மனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் குழந்தைகளுக்கு உணவு உட்கொண்டிருக்கும் போது எதிர்பாரதவிதமாக ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ஒரு 4 வயது குழந்தையை வெறிநாய்கள் கடித்தது.
இதில் காயமடைந்த குழந்தை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
அரசு பள்ளி வளாகத்தில் உள்ளேயே வெறிநாய் கடிப்பதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்-கள் அச்சமடைந்துள்ளனர்.
இதில் நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வெறிநாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஜமுனா மரத்தூரில் தலித் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் 80&க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.
அந்தப் பகுதி மக்களுக்கு வீடு, மயானம் போன்ற எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காததால் கடும் சிரமத்தில் வசித்து வந்தார்கள்.
அவர்களுக்கு உடனடியாக வீடு வழங்கக் கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு தலித் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று தலித் விடுதலை இயக்கம் மாநிலத் தலைவர் ச.கருப்பையா தலைமையில் தலித் மக்கள் வசிக்கும் மலைப்பகுதிக்கு மாநில இளைஞரணிச் செயலாளர் கிச்சா, மாநில மகளிர் அணி செயலாளர் தலித் நதியா, மேற்குமாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட பொருளாளர் சிவகுமார், போளூர் ஒன்றிய செயலாளர் மார்க் பந்து, ஒன்றிய மகளிரணி செயலாளர் கீதா ஆகியோர் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் அங்கு வசித்து வரும் தலித் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுப்பதாக உறுதியளித்தனர்.






