என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு நெடுந்தூரம் ஓட்டம் நடந்த காட்சி.
மது ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம்
திருவண்ணாமலையில் மது ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டத்தை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் நெடுந்தூர ஓட்டம் திருவண்ணாமலை காஞ்சிபுரம் மண்டபம் அருகில் நடந்தது-.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் 500 மாணவ, மாணவிகளுடன் கலெக்டர், எஸ்.பி. மற்றும் அதிகாரிகள் அண்ணா நுழைவாயில் வரை வந்தனர். பின்பு நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் பிரச்சாரம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வருவாய் கோட்ட அலுவலர் வெற்றிவேல் மதுவிலக்கு உதவி ஆணையாளர் குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






