என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • தனது நண்பன் இறந்ததால் சஞ்சய் மன உளைச்சலில் காணப்பட்டு வந்தார். சந்தோஷ் அடக்கம் செய்த சுடுகாட்டிற்கு சென்று தினமும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்
    • உயிர் நண்பனை பிரிந்த வேதனையில் சஞ்சய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எழுவாம்பாடி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எழுவாம்பாடியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சுதா.

    இவர்களுக்கு ராஜா (20). சஞ்சய் (17). என்ற மகன்களும், திவ்யா (18) என்ற மகளும் உள்ளனர்.

    சஞ்சய் மற்றும் திவ்யா எழுவாம்பாடியில் உள்ள பாட்டி வசந்தா வீட்டில் தங்கி இருந்தனர். சஞ்சய் கூலி வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது சஞ்சய் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மயங்கி கிடந்த சஞ்சயை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல பணம் இல்லாததால் கடந்த 11-ந் தேதி மாலை அரசு பஸ்ஸில் சென்னைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. செல்லும் வழியிலேயே சஞ்சய் பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகன் எதற்காக தற்கொலை செய்து கொண்டான் என்று தெரியாமல் இது குறித்து போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சஞ்சய் அதே ஊரைச் சேர்ந்த கவியரசு மகன் சந்தோஷ் என்பவருடன் மாம்பட்டு அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளார்.

    இருவரும் உயிர் நண்பர்களாக பழகி வெளியில் சுற்றியுள்ளனர். 10-ம் வகுப்பில் இருவரும் தேர்ச்சி பெறாததால் படிப்பை தொடராமல் 2 ஆண்டுகளாக கிடைத்த கூலி வேலைக்கு ஒன்றாகவே இருவரும் சென்று வந்துள்ளனர். 2 பேரில் ஒருவருக்கு வேலை கிடைக்க வில்லையென்றால் 2 பேரும் வேலைக்கு செல்ல மாட்டார்களாம்.

    இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சந்தோசை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சந்தோஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தனது நண்பன் இறந்ததால் சஞ்சய் மன உளைச்சலில் காணப்பட்டு வந்தார். சந்தோஷ் அடக்கம் செய்த சுடுகாட்டிற்கு சென்று தினமும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

    இரவு நேரத்தில் தூங்காமல் எனது நண்பன் என்னை கூப்பிடுறான் அதனால் நான் அவனிடம் போகிறேன் என்றும் நான் இனிமேல் உயிரோடு இருக்க மாட்டேன் என் நண்பன் இடத்திற்கே போகிறேன் என்று தாயாரிடம் செல்போன் மூலம் கூறினார்.

    ஆனால் பெற்றோர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஏதோ விரக்தியில் பேசுகிறான் என்று நினைத்து விட்டனர். ஆனால் சஞ்சய் கூறியபடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    உயிர் நண்பனை பிரிந்த வேதனையில் சஞ்சய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எழுவாம்பாடி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மர்ம கும்பல் தீ வைத்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த நந்திவேடந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது 45). இவர் தனது விவசாய நிலத்தில் விளைந்த நெற்ப யிரை நேற்று முன்தினம் அறு வடை செய்து சுமார் 20 நெல் மூட்டைகளை நிலத்திலேயே வைத்துள்ளார்.

    இந்தநிலை யில் சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்பல் சிலர் அந்த பகுதியில் இருந்த காய்ந்த செடிகளுக்கு தீவைத் ததாக கூறப்படுகிறது. அப் போது தீ மளமளவென எரிந்து நெல் மூட்டைக்கு பரவி அடுக்கி வைத்து இருந்த 12 மூட்டைகள் எரிந்து நாச மானது.

    இது குறித்து அரக் கோணம் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேவூர் ராமசந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்

    ஆரணி:

    ஆரணியில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    ஆரணி சட்டமன்ற எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சரும் சேவூர் ராமசந்திரன் தலைமையில் கட்சியினர் அண்ணாசாலை வழியாக ஊர்வலமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் பொதுமக்களுக்கும் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் திருமால், வக்கீல் சங்கர், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், மன்ற உறுப்பினர் கவுன்சிலர் விநாயகம், ஆணி ஒன்றிய ஜெயலலிதா பெரலைச் செயலாளர் பையூர் சதீஷ், உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றன.

    காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட எஸ்.சி எஸ்.டி பிரிவு தலைவர் முருகன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நகரத் தலைவர் ஜெயவேல், மாவட்ட பொருளாளர் பிரசாத், மாவட்டத் துணைத் தலைவர் அருணகிரி, உள்ளிட்ட பங்கேற்பு.

    அண்ணல் அம்பேத்கர் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்ஏ சிவானந்தம் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்கள். இதில் நகர மன்றத் தலைவர் ஏ.சி.மணி ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மோகன், துரை மாமது, கண்ணமங்கலம் பேரூராட்சி செயலாளர் கோவர்தன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித், ஆதிதிராவிடர் மாவட்ட துணை அமைப்பாளர் இளையராஜா, ஆதிதிராவிட நகர அமைப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • மதியம் 12.15 மணிக்கு ஏற்பட்டது
    • 2 நாட்கள் மட்டும் நடக்கும்

    போளூர்:

    ஜவ்வாது மலையில் உள்ள பண்டிரேவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆண்டின் நிழல் இல்லாத நேரம் 12.15 மதியம் உருவானது.

    பள்ளி மைதானத்தில் மாணவர்களுக்கு சூரிய ஒளியில் வட்டமாக நின்று தங்கள் நிழல் கீழே படியாத படி பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டனர்.

    ஜவ்வாது மலை வட்டார கல்வி அலுவலர் சம்பத் முன்னிலையில் தலைமை ஆசிரியர் மன்னார் சாமி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

    ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே நேர் நிழல் நிகழ்வு பூமியின் மீது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
    • பொதுமக்கள் வரிசையில் நின்று தரிசனம்

    திருவண்ணாமலை:

    தமிழ் ஆண்டுகளில் 60 ஆண்டுகள் அதில் இந்த ஆண்டு சித்தரை 1 ஸ்ரீ சோப கிருது ஆண்டாகும். அதன் அடிப்படையில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    போளூர் நற்குன்று ஸ்ரீ பாலமுருகன் கோவில், மலை மீது அமைந்துள்ள நரசிம்ம பெருமாள் கோயில் கைலாசநாதர் கோயில், சோமநாத ஈஸ்வரர் கோயில், குன்னத்தூர் தண்டாயுதபாணி சுவாமி கோயில், ஆஞ்சநேயர் கோயில், ஆகிய கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    இதேபோல் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்,ஆரணி பச்சையம்மன் கோவில், சேத்துப்பட்டு, செங்கம் உட்பட சுற்றியுள்ள கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

    • கும்பாபிேஷகம் நடந்தது
    • பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் வரசித்தி விநாயகர் கோவிலில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 14-ந்தேதி மகாகும்பாபிசேக விழா நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு நேற்று மாலை ஆண்டு பூர்த்தி வருடாபிஷேக பூஜை ஹோமத்துடன் நடைபெற்றது.

    பின்னர் வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
    • அதிகாரிகள் அளவீடு செய்து அறிவுரை வழங்கினர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் புதிய சாலை வேலூர் திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடாக இருப்பதால் தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன.

    ஆனால் புதிய சாலை பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகள் தங்கள் வாகனங்கள் மற்றும் கடையில் விற்பனை செய்து வரும் பொருட்களை நடைபாதையில் வைத்து போக்குவரத்துக்கு இடைஞ்சலாக வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இதன் காரணமாக வருவாய்த்துறை, போலீசார் கடந்த 7-ந்தேதி வியாபாரிகளுக்கு போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் 13-ந்தேதிக்குள் அனைத்து ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்ய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த நிலையில் நேற்று வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைக்காரர்கள் தங்கள் கடை முன்பு வைத்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அளவீடு செய்து ஆலோசனை வழங்கினர்.

    தொடர்ந்து வியாபாரிகள் சிலர் தங்கள் கடையின் நிழலுக்காக போடப்பட்ட தகர ஷீட்டுகள் பிளாஸ்டிக் ஷீட்டுகள் அகற்றினர்.

    • திருமணம் செய்ய வற்புறுத்தியதால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளம்பெண் டிப்ளமோ முடித்துள்ளார்.

    போளூர் அருகே உள்ள அத்திமுர் களியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30) விவசாயி. இவரும் இளம் பெண்ணும் கடந்த 7 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இளம் பெண் பிரபாகரண் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்ய கோரி கேட்டுள்ளார். இதனால் வீட்டில் இருந்த குடும்பத்தினர் இளம்பெண்ணை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    பின்னர் இதுகுறித்து போளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்கு வாதம்
    • மின் இணைப்புகளை துண்டித்து வெளியேற்றினர்

    கலசபாக்கம்:

    கலசபாக்கம் அடுத்த நார்த் தாம்பூண்டி கிராமத்தில் ஏரி, குளம் ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து 41 குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி நீர் நிலைகளை காப்பாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

    அதனை விசாரித்த ஐகோர்ட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் திருவண்ணாமலை குணசேகரன் ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினரும் போலீசாரும் அங்கு சென்றனர்.

    அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 41 வீடுகளை இடிக்கும் பணி 5 பொக்லைன் எந்திரங்கள் மூலம் நடைபெற்றது. அப்போது குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர்கள் அவரவர் வீட்டுக்குள் கதவை சாத்திக் கொண்டு வீடுகளை இடிக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிலர் போலீசாரையும் அதிகாரிகளையும் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    அதனை தொடர்ந்து வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்புகளை துண்டித்து விட்டு உள்ளே இருந்தவர்களை வெளியேற்றி விட்டு பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணி தொடர்ந்தது.

    • வேலை முடிந்து வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கீழ்சாத்தமங்கலம் புதிய காலனி சேர்ந்தவர் சூரியா (வயது 22). இவர் வந்தவா சியில் உள்ள ரோட்டரி சங்க இரவு நேர மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார்.

    இவர் திங்கள்கிழமை காலை பணி முடித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கீழ்சாத்தமங்கலம் சாலை-புதிய புறவழிச்சாலை சந்திப்பில் செல்லும்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த சூரியாவை அந்தப் பகுதியிலி ருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சூரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகு றித்து சூரியாவின் தந்தை பிச்சை அளித்த புகாரின் பேரில் பொன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • இன்று முதல் முன்பதிவு செய்யலாம்
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    3-ம் கட்டமாக நெல் கொள்முதல்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2022-23 காரீப் சம்பா மற்றும் நவரை பருவத்தில் 3-ம் கட்டமாக கூடுதலாக 19 நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் வருகிற 17-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் செயல்பட உள்ளது.

    இதற்கான இணையவழி முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. 2022-23-ம் ஆண்டிற்கு தமிழக அரசு சன்ன ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்கு ரூ.100 உயர்த்தி ரூ.2160-ம் இதர ரகங்களுக்கு ரூ.75- உயர்த்தி ரூ.2115-ம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் கொள்முதல் நிலையங்களுடன் செய்யாறு தாலுகாவில் நாவல்பாக்கம், பாப்பந்தாங்கல், காழியூர், அளத்துறை, முளகிரிப்பட்டு, உக்கல், வெம்பாக்கம் தாலுகாவில் குத்தனூர், சிறுநாவல்பட்டு, சிறுவஞ்சிப்பட்டு, சேணிநல்லூர், வந்தவாசி தாலுகாவில் கோவலை, இரும்பேடு, தெள்ளார், மலையூர், தென்னந்தூர், பெரணமல்லூர், செங்கம்பூண்டி கூட்டுசாலை, வல்லம் மற்றும் மேல்சாத்தமங்கலம் ஆகிய இடங்களில் நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

    விவசாயிகள் மேற்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்து பயன் பெறலாம். இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது. விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்றினையும், உதவி வேளாண்மை அலுவலரிடம் மகசூல் சான்றினை அடங்கலில் பெற வேண்டும். நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் நேரடி கொள்முதல் மையத்திற்கு

    மேற்குறிப்பிட்ட சான்றுகள், ஆதார், சிட்டா மற்றும் வங்கிகணக்கு புத்தக நகல் ஆகியவற்றினை நேரில் கொண்டு சென்று இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள நேரடி கொள்முதல் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார்.

    பதிவுகள் மேற்கொண்ட பின்னர் சம்பந்தப்பட்ட விவசாயியின் பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு"வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டது" என்ற குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    சந்தேகங்களுக்கு தொடர்பு எண்

    பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு அவரால் பதிவு செய்துள்ள விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல், நிராகரிப்பு செய்யப்படும். ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு சென்று நெல் அளிக்க வேண்டும். விவசாயிகள் முன்பதிவு செய்வதில் சந்தேகம் சான்றுகள் பெறுதல், நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற காலதாமதம் அல்லது சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டால் உதவிக்கு 9487262555, 9445245932 (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம்) ஆகிய எண்களை தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ தெரிவித்தால் அவை

    உடனடியாக சரிசெய்யப்படும். எனவே விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி தங்களின் நெல்லை நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் வழங்கி பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ரூ.28 லட்சம் ஒதுக்கீடு
    • ஏராளமாேனார் கலந்துகொண்டனர்

    போளூர்:

    திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள முக்கிய ஊர் கேளூர் ஆகும்.

    சனிக்கிழமை தோரும் இங்கு நடக்கும் மாட்டு சந்தை மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதாகும். போளூர் ஒன்றியத்திற்குட்பட்ட இந்த கேளூரை சுற்றி சுமார் 20 கிராமங்கள் உள்ளன.

    இவர்கள் அனைவரும் வேலூர் திருவண்ணாமலை செல்வது என்றால் கேளூர் வந்து தான் செல்ல வேண்டும்.

    இதுவரை கேளூர் பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு நின்று பஸ் ஏறுவதற்கு ஒரு நிழற்கூடம் கூட இல்லை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கேளூர் பஸ் நிலையத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அந்த கோரிக்கைகளை ஏற்று போளூர் ஒன்றியத்தின் சார்பில் நேற்று ரூ.28 லட்சம் ஒதுக்கப்பட்டு போளூர் ஒன்றிய குழ தலைவர் சாந்தி பெருமாள் தலைமையில் பூமி பூஜை நடந்தது.

    உடன் முன்னாள் ஒன்றிய குழ தலைவர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×