என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் நிழல் விழாத நேரம் குறித்து ஆசிரியர் விளக்கம் அளித்த காட்சி.
நிழல் விழாத நேரம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்
- மதியம் 12.15 மணிக்கு ஏற்பட்டது
- 2 நாட்கள் மட்டும் நடக்கும்
போளூர்:
ஜவ்வாது மலையில் உள்ள பண்டிரேவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆண்டின் நிழல் இல்லாத நேரம் 12.15 மதியம் உருவானது.
பள்ளி மைதானத்தில் மாணவர்களுக்கு சூரிய ஒளியில் வட்டமாக நின்று தங்கள் நிழல் கீழே படியாத படி பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டனர்.
ஜவ்வாது மலை வட்டார கல்வி அலுவலர் சம்பத் முன்னிலையில் தலைமை ஆசிரியர் மன்னார் சாமி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே நேர் நிழல் நிகழ்வு பூமியின் மீது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






