என் மலர்
நீங்கள் தேடியது "Siddharai 1 is Sri Sopa Kritu year"
- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
- பொதுமக்கள் வரிசையில் நின்று தரிசனம்
திருவண்ணாமலை:
தமிழ் ஆண்டுகளில் 60 ஆண்டுகள் அதில் இந்த ஆண்டு சித்தரை 1 ஸ்ரீ சோப கிருது ஆண்டாகும். அதன் அடிப்படையில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
போளூர் நற்குன்று ஸ்ரீ பாலமுருகன் கோவில், மலை மீது அமைந்துள்ள நரசிம்ம பெருமாள் கோயில் கைலாசநாதர் கோயில், சோமநாத ஈஸ்வரர் கோயில், குன்னத்தூர் தண்டாயுதபாணி சுவாமி கோயில், ஆஞ்சநேயர் கோயில், ஆகிய கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
இதேபோல் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்,ஆரணி பச்சையம்மன் கோவில், சேத்துப்பட்டு, செங்கம் உட்பட சுற்றியுள்ள கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.






