என் மலர்
நீங்கள் தேடியது "அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை"
- சேவூர் ராமசந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை
- பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்
ஆரணி:
ஆரணியில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஆரணி சட்டமன்ற எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சரும் சேவூர் ராமசந்திரன் தலைமையில் கட்சியினர் அண்ணாசாலை வழியாக ஊர்வலமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பொதுமக்களுக்கும் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் திருமால், வக்கீல் சங்கர், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், மன்ற உறுப்பினர் கவுன்சிலர் விநாயகம், ஆணி ஒன்றிய ஜெயலலிதா பெரலைச் செயலாளர் பையூர் சதீஷ், உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றன.
காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட எஸ்.சி எஸ்.டி பிரிவு தலைவர் முருகன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நகரத் தலைவர் ஜெயவேல், மாவட்ட பொருளாளர் பிரசாத், மாவட்டத் துணைத் தலைவர் அருணகிரி, உள்ளிட்ட பங்கேற்பு.
அண்ணல் அம்பேத்கர் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்ஏ சிவானந்தம் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்கள். இதில் நகர மன்றத் தலைவர் ஏ.சி.மணி ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மோகன், துரை மாமது, கண்ணமங்கலம் பேரூராட்சி செயலாளர் கோவர்தன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித், ஆதிதிராவிடர் மாவட்ட துணை அமைப்பாளர் இளையராஜா, ஆதிதிராவிட நகர அமைப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






